வாசல்களுக்குள்ளே வாசல்கள் Flagstaff, Arizona, USA 65-0206 1இந்த காலையில் இங்கே ......... நான் முதன்முறையாக பிளாக்ஸ்டாஃப்பிற்கு வந்ததைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அது சுமார் முப்பத்தெட்டு, ஒருக்கால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னராயிருக்கலாம் என நான் யூகிக்கிறேன். அப்பொழுது நான் மலையின் மேல் ஏறுவதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அங்கே பனியே இல்லாதிருந்தது. ஆனாலும் என்னுடைய சிறிய - மாதிரி கொண்ட காரினால் மலையின் மேல் ஏறமுடியாமற் போயிற்று. அது ஒரு மணிக்கு முப்பது மைல் தூரம் செல்லக் கூடும். ஆனாலும் அது பதினைந்து மைல் தூரம் இந்த விதமாயும், மற்ற பதினைந்து மைல் தூரம் இந்தவிதமாய் செல்லும். நமக்கு இருந்த இந்த சாலைகளில் சிலவற்றை நீங்கள் அறிவீர்கள். அது ஒரு அமைதியான......... [மேடையின் மேலுள்ள ஒரு சகோதரன், “நீர் ஏன் அந்த போர்ட் காரைப் பற்றிய செய்யுளை எங்களுக்கு கூறக்கூடாது?'' என்கிறார். - ஆசி.) சகோதரன் கார்ல் அவர்களே! (”தயவு செய்து கூறுங்கள்“). இல்லை. நான் ஒருமுறை என்னுடைய போர்டு காரைக் குறித்து எழுதியிருந்த ஒரு சிறிய செய்யுளைக் குறித்து அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். சகோதரன் கார்ல் இது அதைக் கூறும்படியான ஒரு நல்ல இடமாய் இருக்கவில்லையே! 2எனவே நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், நான் இந்த காலையில் இந்த சகோதரர்களிடமிருந்தும், நான் சந்தித்த சில மனிதர்களிடத்திலுமிருந்தும் அநேக அருமையான சாட்சிகளைக் கேட்டேன். சற்றுமுன் இங்கு பேசின ஒரு ஊழியக்காரன், ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபன் தன்னுடைய வேளையில்....... பாடும்படியாக அந்த சிறு பையனுடைய நேரத்தை ஒதுக்கித்தந்தார். ஒரு ஆறு வயது நிரம்பிய பையன் பாடினது அற்புதமாயிருந்த தல்லவா? [சபையோர், ''ஆமென்'' என்கிறார்கள். - ஆசி.) என்னே! நான் எப்போதும் கேட்டதிலேயே மிகவும் அருமையான சிறிய குரல், அந்த விதமான ஒரு சிறுபையன். 3இப்பொழுது இந்த சகோதரன், சகோதரர்கள் அதை மறந்து விட்டனர். ஆனால் அவர் உங்களுடைய பட்டிணத்தில் இங்கே ஒரு கூட்டத்தை நடத்தப் போகிறார். அது சர்ச் ஆப் காட் சபை அல்லது அசெம்பிளிஸ் ஆப் காட் சபையில் என்று நான் நினைக்கிறேன். [அந்த சகோதரன், “அசெம்பிளிஸ்'' என்கிறார்.) அசெம்பிளிஸ் ஆப் காட், அசெம்பிளிஸ் ஆப் காட் சபையில் தான் நடைபெறவுள்ளது. அவர்கள் உங்களுடைய வருகையை உயர்வாக கருதுவார்கள் என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன். சகோதரனே, எதுவரையில் அந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது? [”ஞாயிறு வரை“ ஞாயிறு வரை (”ஞாயிறு இரவு“ ஞாயிறு இரவு வரை. நாம் இன்றிரவு பாடுவதற்கான ஒரு ஏவுதலை உடையவர்களா யிருக்கிறோம். என்ன ஐயா? [''நாம் இன்றிரவு பாடுவதற்கான ஏவுதலைக் கொண்டுள்ளோம்”.) இப்பொழுது நீங்கள் இந்த கூட்டத்திற்கு வரும்படியாக உளக்கனிவோடு அழைக்கப்பட்டிருக் கிறீர்கள். (“ஏழு முப்பதிற்கு நடைபெறும்”.] இன்றிரவு ஏழு முப்பதிற்கு நடை பெறும். சகோதரனே சபையின் இருப்பிடம் எங்குள்ளது? [“113 வெஸட் கிளே”] அது எங்கு உள்ளது என்பதை நீர் எங்களுக்கு கூறுவீரா? [“113 வெஸ்ட் கிளே”) இங்கே பிளாக்ஸ்டாப் பட்டிணத்தில் உள்ள 113 வெஸ்ட கிளே தெருவில் உள்ளது. எனவே நீங்கள் ......... என்று நான் நிச்சயம் நம்புகிறேன். 4அந்த சிறு பையன் உங்களோடிருக்கிறானா? [அந்த சகோதரன், “இல்லை ” என்கிறார். - ஆசி.] இல்லை , அவனுடைய தந்தையார் பாடுவார். நீங்கள் பாடுகின்றீர்களா? நல்லது. அது அருமையாயுள்ளது. ஒருமுறை பாடினால் நலமாயிருக்கும் என்ற நான் யூகித்துப் பார்த்தேன். நல்லது, நீங்கள் அதைக் காண்பது அரிதாயிருக்கிறது. ஆனால் அது வழக்கமாகவே, குடும்பத்தில் ஒரு தாலந்து இருக்குமாயின், அது அதிலுள்ள மற்றவர்களையும் கவர்ந்திழுத்துக் கொள்கிறது என்று நான் கருதுகிறேன். எனவே அவர்கள் ......... உடையவர்களாயிருக்கிறார்கள். [“சகோதரன் பிரான்ஹாம், அது முழுவதும் உபவாசத்திலிருந்தும், ஜெபத்தி லிருந்தும் உண்டானது” உபவாசித்தல், ஜெபித்தல், இப்பொழுது அது - அது உண்மையாகவே அருமையாயிருக்கிறது. இப்பொழுது அமெரிக்காவில் உள்ள யாவரும் ஒன்று சேர்ந்து, நம்முடைய அமெரிக்க குடும்பங்கள் யாவும் அதைப் போன்று ஒன்று சேர்ந்து உபவாசித்து, ஜெபித்திருந்தால், நல்லது, அப்பொழுது அவர்கள் காவல்துறை படையினரையே முழுவதும் அப்புறப்படுத்தியிருப்பார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இப்பொழுது ஆயிரம் வருட அரசாட்சியே இருந்திருக்கும், இல்லையா? அது வெறுமனே ...... அப்படியானால் அது முதன்மையான பிரிவில் இருந்திருக்கும். அது உண்மை . மரணம் யாவும் மறைந்து போயிருக்கும், எல்லா வியாதிகளும், வருத்தங்களும், எல்லா ஏமாற்றங்களும் மறைந்து போய், நாம் கிறிஸ்துவோடு இருந்திருப்போம். ஆகையால் நாங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறோம். நான் இந்த எல்லா அருமையான சாட்சிகளையுமே கேட்டேன். நான் முதல் முறையாக சகோதரன் ஏர்லை (Earl) சந்திக்கும் சிலாக்கியம் பெற்றேன். கடந்த மாலை நான் அவருடைய மனைவியினிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் அவள் அநேக முறை கூட்டங் களில் அழைக்கப்பட்டு, சுகமாக்கப்பட்டிருக்கிறாள். கடந்த கூட்டத்திலும் கூட அவள் மேடையின் மீது இருந்தாள் என்றே கூறப்பட்டது. எனவே, அது எங்களுக்கு ஒரு சிறிய, ஒருவிதமான ஒரு சிறு நகைச்சுவையான உணர்வை ஏற்படுத்துகிறது. நான் சகோதரன் ஏர்ல் அவர்களுடைய கரத்தை எங்கோ குலுக்கி யிருந்தும் நான் அவரை நினைவில் கொள்ளவில்லை. கடந்த இரவு நான் ஜன்னலண்டை அமர்ந்துகொண்டு, அவர் வருவதற் காக எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு பெரிய உயரமான மனிதன் ஒரு கறுப்பு மீசையோடு வந்தார். நான், “இதோ அவர் வருகிறார்” என்றேன். அப்பொழுது, ........ பில்லி, என்னுடைய மகன், “ஓ, இல்லை ” என்றும், “அது சகோதரன் ஏர்ல் அல்ல” என்றும் கூறினான். அவர் அந்த நபரைக் காட்டிலும் மிகவும் வாலிபமாக இருப்பார் என்றான். எனவே கடந்த மாலை நான் சகோதரி ஏர்லை இங்கே சந்தித்தபொழுது, இங்கே பட்டிணத்தில் உள்ள அவர்களுடைய அழகான வீட்டிலிருக்கும் சிலாக்கியத்தையும் பெற்றேன். 5இது ஒரு அருமையான ஸ்தலமாக இருக்கிறது. நான் இதை எப்பொழுதுமே பிளாக்ஸ்டாப் என்பதற்குப் பதிலாக கொடிக்கம்பத் துருவம் என்றே அழைக்க விரும்புகிறேன். ஏனென்றால், பாருங்கள் இதற்கு வழியோ இங்கே குன்றின் உச்சியில் உள்ளது. நான் உங்களுக்கு கூறுவதென்னவெனில் அதாவது யாராயினும் டெக்ஸாஸிலிருந்து இங்கு வந்திருந்தால் இப்பொழுது நீங்கள் பெருமையாக பேசுவீர்கள் என்பதேயாகும். நேற்று நான் டூசானை விட்டு புறப்பட்டேன். அப்பொழுது அங்கு சுமார் எழுபத்திரெண்டு அல்லது எழுபத்தைந்து பாகை உஷ்ண மாயிருந்தபடியால் நான் இங்கு இந்த காலை ஒரு மேலங்கியோடு வந்தேன் : பாருங்கள், அவர்கள் டெக்ஸாஸில் பெற்றுக் கொண்டதை நாம் அரிசோனாவில் பெற்றுக் கொண்டோம். நாம் பெற்றிருக்கவில்லையா? அது உண்மை. நாம் இங்கிருக்கிறோம். இது ஐக்கியமாயிற்றே! என்னுடைய நண்பர், வயோதிப வேத பண்டிதர் பாஸ்வர்த்தை, சகோதரன் பாஸ்வர்த்தை உங்களில் அநேகருக்கு தெரிந்திருக்கலாம். அவர் பரிசுத்தமான வயோதிப மனிதராயிருந்தார். அவர் ஒருமுறை என்னிடத்தில் கூறினார், அதாவது அவர், “சகோதரன் பிரான்ஹாமே, ஐக்கியம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நான், “சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, நான் இந்தவிதமாய் கருதுகிறேன்” என்றேன். அதற்கு, ''அது ஒரே கப்பலில் இரண்டு நபர்கள் இருப்பதாகும். எனவே அவர்கள் சற்று பகிர்ந்து கொள்ள வேண்டும்“ என்றார். ஆகையால் நாம் எடுத்துக் கொண்டும், கொடுத்துக் கொண்டும், மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதுமே ஐக்கியமாயிருக்கிறது. அதாவது சகோதரன் காரல் வில்லியம்ஸ் அவர்களோடும், மற்றவர்கள் எல்லோரோடும், சகோதரன் ஹவுட்லா அவர்களோடும் பகிர்ந்து கொள்வதாயிருக்கிறது. ஓ, அரிசோனா வில் என்னுடைய கூட்டங்களை பொறுப்பேற்று நடத்தினவர்களில் ஒருவராய் சகோதரன் ஜிம்மி ஹவுட்லா இருந்தார். எனவே, அந்த நேரம் முதற்கொண்டு நாங்கள் நெருங்கிய பழக்கமுள்ள சகோதரர்களாய் இருந்து வருகிறோம். உங்கள் எல்லோருக்காக வும், ஊழியக்காரர்களுக்காகவும் மற்றும் நாங்கள் இங்கு சந்தித்த சுற்றிலுமுள்ள சகோதரர்களுக்காகவும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி யுள்ளவர்களாயிருக்கிறோம். நான் விரும்புகிறதுபோல, ஒவ்வொரு வரோடும் கரத்கைத் குலுக்க எனக்கு நேரமில்லை. ஆனால் இது நாம் ஒன்று சேர்ந்துள்ள ஐக்கியமாக இருக்கிறது. 6இது எனக்கு அப்படியே பீனிக்ஸ் சிறப்பு கூட்டத்தைக் குறித்து நினைவுபடுத்துகிறது. அந்த அமைப்பு ஆரம்பித்தது முதற் கொண்டே அவர்களிடத்தில் பேசவும், அந்த அமைப்புகளை ஒருங் கிணைத்து உதவுவதுமே எனக்கு உண்டான சிலாக்கியமாய் இருந்து வருகிறது. அதுவே நான் சார்ந்துள்ள ஒரே அமைப்பாய் இருக்கிறது. ஆனால் அது அமைப்பல்ல, அது ஜனங்களுக்கு மத்தியில் கிரியை செய்கிற ஓருயிர்போல் இயங்கும் அமைப்பாக இருக்கிறது. இந்த காலையில் இந்த ஐக்கியத்தில் இந்த கிறிஸ்தவ வர்த்தக குழு சுவிசேஷ புருஷர்களின் ஐக்கியத்தில் சாராதவர் களாக உங்களில் யாராவது இங்கு இருப்பீர்களாயின், நீங்கள் என்னுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, விசுவாசிப்பதாக இருந்தால்,...........இது அருமையான குழுக்களில் ஒன்றாக இருக்கிறது. ஊழியக்கார சகோதரர்களே, இது உங்களுடைய சபைக்கு எதிரான தாயிருக்கவில்லை. இது உங்களுடைய சபைக்காகவே இருக்கிறது. பாருங்கள், இது தங்களுடைய வழியில் சபைக்கு உதவி செய்கிறது. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு இங்கு பாடலைப் பாடின இந்த அருமையான ஸ்திரீயை நான் சுற்றும் முற்றும் பார்க்க நேர்ந்தது. நான், அநேகர் அந்தப் பாடலைப் பாடுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த ஸ்திரீயோ கீச்சிடாமல் தொடர்ந்து அந்தப் பாடலை பாடக்கூடிய ஒரு குரலை உடையவளா யிருக்கிறாள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஸ்திரீயே, நான் அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தேன். அது மிக மிக அருமையாக இருந்தது. அது ஒரு ஊழியக்காரருடைய மனைவி என்று கூறப் பட்டது. எனவே சகோதரனே, நீங்கள் ஒவ்வொரு இரவும் தூங்க அவளை பாடவைக்க வேண்டியதாயிருக்கும். எனவே அது மிக அருமையாக , மிகவும் அருமையாக இருக்கும். அது மிக அருமை யான பாடுதலாய் இருந்தது. எனவே நான் அதை பாராட்டினேன். 7இந்த காலையில் அது எனக்கு ஒருவிதமான ஒரு சிறு - ஒரு கதையைக் குறித்து நினைவூட்டுகிறது. அதாவது நான் - நான் வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் விரும்புகிறேன். அது நான் அரிசோனாவில் இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. எனவே நான் வேட்டையாடிக் கொண்டும், மீன் பிடித்துக்கொண்டும் இருக்கிறேன். நான் அதை விரும்புகிறேன். எனவே நான் ஒரு சமயம் நியூ ஹாம்ஸ்ஹ யரில் மீன்பிடித்துக் கொண்டிருந்தேன். எனக்கு இங்கே ஆண்களிலும், பெண்களிலும் மீன்பிடிக்க விரும்புகிற அநேக கூட்டாளிகள் உண்டு என்றே நான் யூகிக்கிறேன். நாம் யாவரும் அதை விரும்புகிறோம். நான் வைத்திருந்த ஒரு சிறு குட்டிக்கூடாரத்தை மேலே சுமந்து சென்றிருந்தேன். அது ஒருவிதமாக சற்று பாரமாய் அல்லது அங்கே நடந்து செல்லக்கூடியதாக இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கே அருமையான ஓடைகளும், அந்த ஓடைகளில் நன்னீர் உணவு வகை மீன்களும், செந்நிறமான, சதுர வால் கொண்ட, வாய் திறந்தே காணப்படுகின்ற மீன்களும் இருந்தன. ஓ, அந்த ஓடைகள் அப்படியே நிரம்பி, அவைகளினூடே சிறிய கால்வாய்கள் நியூ ஹாம்ஸ்ஹயரில் உள்ள மலை உச்சியிலிருந்து கீழே ஓடி வந்துகொண்டிருக்கும். அந்த சிறிய நன்னீர் உணவு வகை மீன், ஒருக்கால் பதினான்கு , பதினாறு அங்குல நீளம் உடையதாக இருக்கும். அவைளில் அநேகம் அவ்வாறிருக்கும். நான் மட்டுமே ....... நான் அங்கு சென்று, அவைகளை பிடிப்பேன், நான் வேடிக்கை விளையாட்டாக அவைகளைப் பிடித்து, அவைகளை மீண்டும் விட்டுவிடுவேன். நான் அவைகளில் ஒன்றை கொன்று விடுவேனேயானால், நீங்கள் பாருங்கள், அப்பொழுது அதனைக் கொண்டு வந்து, அதை புசிப்பேன். 8ஏனவே அங்கு மரம், செடி, புதர்கள் வளர்கின்றபடியால் ஒவ்வொரு முறையும் நான் அதை வெட்டி என் வழியை சரிப்படுத்து வேன். நான் ஒரு சிறிய வண்டியோட்டும் ஒரு சிறு பணியாளனை வைத்திருந்தேன். நான் அதனைக் கொண்டே அங்கு செல்வேன். எனவே நான் அங்கு சுற்றிலுமிருந்த ஒரு கூட்ட புதர்களை வெட்டி சுத்தம் செய்திருந்தேன். அப்பொழுது நான், நல்லது '', இந்த காலையில் நான் ஒரு கைக்கோடாரியை கொண்டு சென்று அங்குள்ள புதரை வெட்டிவிட்டால், என்னுடைய வழியை கண்டு பிடிக்க முடியாது'' என்று எண்ணிக் கொண்டேன். ஓ, நான் பின்னோக்கிப் பார்த்தபோது, கீழே ஒரு சிறிய பழைய ........ ஒரு நீர்த்தேக்கம் போன்றிருந்தது. ஆனால் மற்றவர்களோ வண்டி யோட்டும் பணியாளன் அவர்களை ஏற்றிக் கொண்டு வருவதற்காக அங்கேயே காத்திருந்தனர். இப்பொழுது முழு இரவும் தொடர்ந்து .... நான் வழக்கமாக என்னுடைய செயற்கை தலைமுடியை கழற்றி விடுவேன். ஏனெனில் எனக்கு அங்கு போதுமான காற்று இருக்காது. எனவே நான் - நான் அப்படியே ...... அவர்கள் எப்படியாய் அவைகளை கவனிப்பர். எனவே நான் அந்த காலையில் அங்கு சென்றவுடனே இந்த பழைய சிறு கைக்கோடாரியை எடுத்துக்கொண்டு அந்த புதர் செடியை வெட்டினேன். பின்னர் நான் மீண்டும் திரும்பி வந்து, மூன்று இல்லை நான்கு பேர்களுக்கான காலை சிற்றுண்டியை ஆயத்தப்படுத்த வேண்டிய தாயிருந்தது. நான் ஒரு மிக நல்ல சமையற்காரனல்ல. எனவே என்னால் எதையும் தீய்த்துவிடாமல் சமைக்க முடியாது என்று நான் என் மனைவியிடம் கூறினேன். ஆகையால் சமையற் பணியானது மிகவும் ஆபத்தான பணியாயிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 9பின்னர் நான் திரும்பி வருகையில் அங்கே ஒரு வயதான தாய்க்கரடியும், இரண்டு குட்டிகளும் இருந்தன. அவைகள் என்னுடைய கூடாரத்தில் இருந்தன. நீங்கள் ஏதோ காரியத்தின் சீர்குலைவைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு கரடியை கூடாரத்திற்குள் நுழைய அனுமதிக்கும் வரைக்கும் எப்படி பொருட்கள் சீர்குலைந்து விடும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள மாட்டீர்கள். அவைகள் எதை அழிக்கின்றன என்பதை அல்ல ..... அவைகள் எதைப் புசிக்கின்றன என்பதை அல்ல, அவைகள் எதை பாழாக்கு கின்றன என்பதையே நான் குறிப்பிடுகின்றேன். நான் ஒரு செயற்கை எரி அடுப்பை வைத்திருந்தேன். இந்த சிறிய ஆடு மேய்ப்பர்களுடைய செயற்கை எரி அடுப்பு அங்கிருந்தது. அப்பொழுது, அந்த சிறிய செயற்கை எரிஅடுப்பின் மீது அவைகள் மேலும் கீழுமாக குதித்தன. அவ்வாறு அவைகள் குதிக்கும்போது குழாயின் சலசலப்பு ஒலியையும், அதனை அப்படியே சுக்கு நூறாக்கும் சத்தத்தையும் நீங்கள் கேட்டால் எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் அங்கு மேலே வந்தபோது, நான் அங்கு வைத்திருந்த சிறிய துருப்பிடித்த இருபத்திரெண்டு என்ற ரகமுள்ள துப்பாக்கியைக் கண்டேன். ஆ, அது மட்டுமின்றி நான் இந்த கோடாரியையும் என்னுயை கரத்தில் வைத்திருந்தேன். உங்களுக்கத் தெரியுமா? நான் அங்கு வந்தவுடனே, அந்த வயதான தாய் ஒரு பக்கமாக ஓடி, அவள் தன்னுடைய குட்டிகளை குரலெழுப்பி கூப்பிட்டாள். அப்பொழுது ஒரு குட்டி உடனே அதைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டது. ஆனால் மற்றொன்று மிகவும் சிறிய குட்டியாயிருந்தது. மே மாதத்தில் அவைகள் வெளியே வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனுடைய முதுகுப் புறமோ முழுவதும் இவ்விதமாக எனக்கு திரும்பியிருந்தது. எனவே, நான், ''அது என்ன செய்து கொண்டிருக்கிறது?'' என்று பார்க்கலாமே என்றே எண்ணினேன். அப்பொழுது அது என்னை நோக்கிப் பார்த்தது. நானோ ஒரு மரத்திற்காக, அது எவ்வளவு அருகில் இருந்தது என்பதை காணும்படி நோக்கித்தேடினேன். ஏனென்றால் கிட்டத்தட்ட அவைகள் வளர்ந்த குட்டிகளாக இருந்த படியால், அவைகள் உங்களை கீறி காயப்படுத்தக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே உங்களுக்கு தெரியுமா? நான் அந்த வயதான தாயை சற்று நேரம் கவனித்தேன். அதுவோ ஒரு பறவையைப் போல குரல் எழுப்பி தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டே யிருந்தது. அது எந்தவிதமாக ஒலியெழுப்பும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே அதுவோ தொடர்ந்து அந்த குட்டியை கூப்பிட்டுக் கொண்டே இருந்தும் அந்த குட்டியோ செல்லவில்லை. 10எனவே அந்நிலையில் நான் என்னுடைய துப்பாக்கியைக் குறித்து நினைத்தேன். நான், “நான் அங்கு ஓடி, அந்த துப்பாக்கியை எடுத்து, நான் அந்த வயதான தாயை சுட்டுத் தள்ளி விட்டு, இரண்டு குட்டிகளையும் காட்டில் அநாதைகளாக விட்டு விடலாமா, கூடாதே” என்று எண்ணினேன். நான் அதன் குற்ற வாளியாக இருக்க விரும்பவில்லை. மேலும் அதனைத் தாக்க அந்த இருபத்திரெண்டு ரக மாதிரியான துப்பாக்கியோ மிகவும் சிறியதான ஒன்றாகும். எனவே அதிலிருந்து தோட்டா வெளியே சென்று வெடிக்கச் செய்ய மூன்று அல்லது நான்கு முறைகளாவது அழுத்த வேண்டும். எனவே நான், “அது இங்கு வரத் துவங்கினால், அப்பொழுது நான் அங்குள்ள அந்த மரத்தில் ஏறிக்கொள்ளலாம். நான் அங்குள்ள இந்த மரத்தில் ஏறிக்கொண்டு, ஒரு சிறிய திருப்பானை எடுத்து மூக்கில் அடிக்கலாம்'' என்று எண்ணிக் கொண்டேன். அவைகளினுடைய மூக்கு மிகவும் மிருதுவாய் இருக்கும். அப்பொழுது அவைகள் சற்று கூச்சலிட்டு, பின்னர் ஓடிவிடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்பொழுது அவைகள் உங்களை தனியே விட்டுச் சென்றுவிடும். எனவே நான், ''அந்த மரத்தில் ஏறிக் கொள்ளலாம்” என்று எண்ணினேன். ஆனால், ஓ, இந்தவிதமாக உட்கார்ந்து கொண்டிருக்கிற அந்த குட்டியைக் குறித்து அறிந்துகொள்ள ஆவலாயிருந்தேன். நான், ''அது என்ன செய்து கொண்டிருக்கிறது?“ என்று ஆராய்ந்து பார்த்தேன். எனவே நான் மெல்ல சுற்றி நழுவிச் சென்று, அதை கவனித்தேன். உங்களுக்குத் தெரியுமா? நான் சற்று தூரம் சென்று, அந்த மரத்தண்டைக்கு நெருங்கி வந்தேன். ஏனென்றால் தாயோ அந்தக் குட்டியை தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டேயிருந்தது. எனவே நான் இன்னும் சற்று தூரம் சென்று அந்த குட்டி என்னதான் செய்துள்ளது என்று பார்த்தேன். 11இப்பொழுது நான் மாவில் சுட்ட எண்ணெய் பணியாரத்தை இல்லை, சர்க்கரை மாவுடன் சேர்த்து செய்யும் அடையை விரும்புவேன். நீங்கள் இங்கு அவைகளை அவ்விதமாக அழைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் தென் பகுதியில் நாங்கள் அவைகளை மாவில் சுட்ட எண்ணெய் பணியாரங்கள் என்றே அழைப்போம். எனக்கு அவைகளை நல்ல முறையில் தயாரிக்கத் தெரியாது. ஆனால் எனக்கு நிச்சயமாக நன்றாக அவைகளை சாப்பிடத் தெரியும். நான் ஒரு பாப்டிஸ்டாக இருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நான் தெளிப்பதையே விரும்புகிறதில்லை. நான் உண்மையிலேயே அவைகளை சர்க்கரை குழம்பில் மூழ்கவைத்து எடுக்கவே விரும்புகிறேன். ஆகையால் நான் எனக்கென்று கிட்டத்தட்ட இந்த அளவு உயரமுள்ள ஒரு தகர டப்பியில் சர்க்கரைக் குழம்பையும், அரை காலன் அளவுள்ள வாளியில் எனக்காக மாவில் சுட்ட எண்ணெய் பணியாரங்களையும் வைத்திருந்தேன். அப்பொழுது அந்த குட்டி, எப்படியாயினும், ஒரு கரடி இனிப்பை விரும்பும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அது சர்க்கரை குழம்பிருந்த வாளியை திறந்துவிட்டிருந்தது. அது சுமார் அந்த அளவு அகலம் கொண்ட சிறு பாதத்தோடு அங்கே அமர்ந்து கொண்டிருந்தது. அது தன்னுடைய கரங்களில் அதை எடுத்து வைத்திருந்தது. மேலும் உங்களுக்குத் தெரியுமா? அது தன்னுடைய சிறிய பாதத்தை அந்த வாளியில் நனையும்படி விட்டு நின்று கொண்டு அதை நக்கிக்கொண்டிருந்தது. அது உண்மை. அது அந்த சிறிய நாக்கினால் நக்கினது. அப்பொழுது நான் செல்லத் துவங்கி ...... அப்பொழுது என்னிடத்தில் ஒரு நிழற்படக் கருவி இருந்திருந்தால், நான் அதை புகைப்படமாக எடுத்து, இந்த காலையில் அதை பார்க்கும்படி ஆவலாய் காட்டியிருப்பேன். அதுவோ தன்னுடைய சிறிய பாதத்தை அதனுள் வைத்து இந்த விதமாய் நக்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது நான், “அங்கிருந்து போ” என்று இந்தவிதமாய் கூச்சலிட்டேன். ஆனால் அதுவோ என்னண்டைக்கு எவ்வித கவனமும் செலுத்தாமல் அப்படியே தொடர்ந்து அவ்விதமே நக்கிக்கொண்டிருந்தது. பாருங்கள், அது அந்த வாளியையே நனைத்துவிட்டிருந்தது. 12நான் அந்தவிதமாய் கூச்சலிட்டபோது, அது சுற்றுமுற்றும் திரும்பி இந்த விதமாய் என்னை நோக்கிப் பார்த்தது. அதனால் தன்னுடைய கண்களை திறக்க முடியாதிருந்தது. உங்களுக்குத் தெரியுமா? அது அப்படியே முழுமையாக சர்க்கரைக் குழம்பினால் நனைந்திருந்தது. அதனுடைய கண்களும், அதனுடைய சிறிய வயிறும் மற்றும் அது முழுவதுமாகவே சர்க்கரைக் குழம்பினால் நிறைந்திருந்தது. பின்னர் சற்று நேரம் கழித்து அது பக்கவாட்டில் தடுமாறி தன்னுடைய தாயண்டை சென்றுவிட்டது. அவைகள் அதனை அங்குள்ள புதர்களண்டை அழைத்துச் சென்று, அதனை நக்கத் துவங்கின. அவைகள் வாளியிலே சாப்பிட பயந்தன . ஆனால் அவைகளால் அதனை நக்க முடிந்தது. நான், ''அது ஒரு நல்ல மாதிரியான பண்டைய பெந்தெகோஸ்தே கூட்டம் போன்றில்லையா?“ என்றேன். அதாவது மிகவும் முழுமையான நன்மையையும், இனிமையான காரியத்தையும் பெற்று, அவர்கள் வெளியே செல்கையில், யாரோ ஒருவர், அதிலிருந்து நக்குவது போன்றேயுள்ளது. அதுதான் ஒரு உண்மையான ஐக்கியக் கூட்டமாக இருக்கிறது. இப்பொழுது நாம் இந்த விதமாக வந்து நம்முடைய கரங்களை நாம் ஒவ்வொருவரும் வாளியில் முழங்கை வரை விட்டு தேவனுடைய ஆசீர்வாதங்களை எடுத்துக் கொள்கிறோம். அங்கே கீழே நடைபெற்றுக் கொண்டிருக்கிற, அங்கே அசெம்பிளிஸ் ஆப் காட் சபையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற எழுப்புதலில் நீங்கள் அதை கண்டடைவீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 13அன்றோரு நாள் நான் பீனிக்ஸில் கூறின ஒரு சிறிய........ இருபது வருட காலமாக சிறிதும் மாற்றமின்றி ஒவ்வொரு காலையிலும் மேடைக்குச் செல்லும் ஒரு ஊழியக்காரரைக் குறித்த ஒரு வேடிக்கையான காரியம் பரிசுத்த குலைச்சலாக இருந்திருக் காது என்று நான் நம்புகிறேன். அவர் இருபது நிமிடங்கள் பிரசங்கித்துவிட்டு பின்னர் முடித்துவிடுவாராம். எனவே அது ஏன் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்ததாம். ஆனால் ஒரு காலையில் அவர் சுமார் நான்கு மணி நேரங்கள் பிரசங்கித்தாராம். எனவே உதவிக்காரர்கள் அவரை திரும்ப அழைத்து, ''போதகரே, நாங்கள் உண்மையாகவே உங்களை நேசிக்கிறோம்'' என்றனர். பின்னர், ''நாங்கள் - நாங்கள் உங்களுடைய செய்திகள் அற்புதமானவைகள் என்றே கருது கிறோம்'' என்று கூறினாராம். மேலும் அவர்கள், ''நாங்கள் ஒரு உதவிக்கார குழுவினர்களாய் இருக்கின்ற காரணத்தால் நாங்கள் உம்மையும், நீர் திட்டமிடும் நேரத்தையும் கவனித்திருக்கிறோம். எனவே நீர் ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் சரியாக இருபது நிமிடங்களே பிரங்கிப்பீர் என்பதை நாங்கள் அறிவோம்'' என்றனராம். ஆனால், “இந்த காலை பிரசங்கமோ, நான்கு மணி நேரமாய் இருந்தது' என்றனராம். எனவே, ”நாங்கள் அதை புரிந்து கொள்ள வில்லை“ என்றனராம். அப்பொழுது அவர், “சகோதரர்களே, நான் உங்களுக்கு அதை கூறுவேன்” என்றாராம். பின்னர், அவர், “ஒவ்வொரு காலையிலும் நான் பிரசங்கிக்கச் செல்லும்போது, நீங்கள் என்னை மேடைக்கு அழைக்கும்போது, நான் என்னுடைய நாக்கின் கீழே கரைந்துபோகும் இந்த மிட்டாய்களில் ஒன்றை வைத்துக் கொண்டு அங்கு வருவேன்'' என்றாராம். மேலும் அவர், ”இருபது நிமிடங்களில் அந்த மிட்டாய் கரைந்துவிடும். அப்பொழுது நான் - நான் - நான் முடித்துக் கொள்வேன்'' என்றும், ''எனவே அது போதுமான நேரமாக உள்ளது என்பதை நான் அறிவேன்“ என்றும் கூறினாராம். பின்னர் அவர், ''ஆனால் இந்த காலையில் நடந்த தவறு என்னவென்றால், நான் ஒரு பொத்தானை வாயில் போட்டுக் கொண்டேன்” என்றாராம். 14காரல் வில்லியம்ஸ், ஜுவல் ரோஸ், உண்மையான ஆத்ம சகோதரர்கள் மற்றும் என்னுடைய நண்பர்களும், அன்றொரு நாள் அவர்கள் அங்கு சென்று கிட்டத்தட்ட அந்த பெரிய வட்டமான ஒரு பொத்தானை எனக்குக் கொடுக்க வாங்கி வந்தனர். ஆனால் நான் அதை இந்த காலையில் வைத்திருக்கவில்லை. எனவே நாங்கள் இங்கு இருப்பதற்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இப்பொழுது இங்குள்ள யாருக்காவது வேதபண்டிதர் லீ வேயிலைத் தெரியுமா? தெரியும் என்று நான் நினைக்கவில்லை...... தெரியாமலிருக்கலாம். அவர் ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியாராய் இறைமையியலில் திருத்தந்தை பட்டம் பெற்றவராய் இருந்தார். அவர் தன்னுடைய பட்டங்களை வைத்திருக்கிறார். அவர் துவக்கத்தில் ஒரு உயர்பள்ளி ஆசிரியராக இருந்தார். அவர் மிகவும் அருமையான இலக்கிய மேதையாக இருக்கிறார். நான் என்னுடைய ஏழு சபை காலங்களின் ஒலிநாடாக்களை, அவைகளை அவரிடத்திற்கு இலக்கணமுறைப்படி அமைந்த எழுத்து நடையில் எழுதும்படி அனுப்பினேன். ஏனென்றால், என்னுடைய வார்த்தைகள் பண்டைய கென்டக்கி இலக்கண விதிமுறையற்ற கொச்சையான வார்த்தைகளாயிருக்கின்றபடியால், புத்தகங்களை படிக்கின்ற ஜனங்களுக்கு அது நன்றாகயிருக்காது. எனவே அவர் அதை எனக்காக இலக்கண நடையில் எழுதப்போவதாக இருந்தார். பின்னர் அவர் அதனை எழுதி முடித்தவுடன், அதை திரும்பவும் அதிகமான விவர வாசகங்களுக்காக அனுப்பினார். கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த புத்தகம் இப்பொழுது அச்சகத்திற்கு செல்கிறது. 33. அவர் என்னிடம் கேட்டார். அதாவது அவர், “நான் என்னுடைய கருத்துரைகளை அப்படியே ஒரு புத்தகமாக எழுதலமா?” என்று கேட்டார். அதற்கு நான், '' நல்லது, சகோதரன் லீ, எழுதலாமே'' என்றேன். நான் நினைத்தேன்....... அப்பொழுது அவர், “நான் ஒரு காரியத்தை கூறப் போகிறேன்” என்றார். பின்னர் அவர், அது விற்கப்படாது; ஆனால் இலவசமாக கொடுக்கப்படும்“ என்றார். அதற்கு நான், “நல்லது, அப்படியானால் அதை நிச்சயம் அப்படியே செய்யலாம்” என்றேன். புரிகின்றதா? 15எனவே அவர்கள் அதற்கு பண உதவி செய்ய கிட்டத்தட்ட பத்துபேர்களின் ஆதரவைப் பெற்றுள்ளனர். பத்தாயிரம் பிரதிகளை கொண்ட அவைகளின் கிரயம் சுமார் ஆயிரத்து ஐநூறு டாலர்கள் என்றே நான் கருதுகிறேன். எனவே நாங்கள் - நாங்கள் அவைகளை வைத்துள்ளோம். அவை ஒரு சில தினங்களுக்கு முன்னரே அச்சகத்திலிருந்து வந்தன. நாங்கள் இரண்டு அல்லது மூன்று பிரதிகளை நேற்று பெற்றுக்கொண்டோம். பில்லி அவைகளை கொண்டு வந்தான். அவர்கள் - அவர்கள் அவைகளை இலவசமாக விநியோகித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது நான் அதை ஒருபோதும் வாசிக்கவேயில்லை. அவர் என்ன கூறினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் ........ இது விசுவாசத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதில் ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பினால், நீங்கள் எங்களுக்கு எழுதினால், அப்பொழுது அது உங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். புரிகின்றதா? அது இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்று பெயரிடப்பட்டுள்ளது. நான் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இங்குள்ள புகைப் படத்தைக் கவனித்தேன். உண்மையிலேயே உங்களில் அநேகர் இந்த புகைப்படத்தை வைத்திருக்கிறீர்கள். அதை பார்த்திருக்கிறீர் கள். அது டெக்ஸாஸ் ஹவுஸ்டனில் எடுக்கப்பட்ட கர்த்தருடைய தூதனாயிருக்கிறது. ஆனால் அவர்கள் அதில் பாதியை வெட்டி விட்டனர். 16அடுத்தபடியாக நான் இங்கே பின்னால் காண்கிறேன். என்னுடைய கூட்டங்கள் ஒன்றிலாவது இருந்தவர்களில் எத்தனை பேர் இங்கிருக்கிறீர்கள்? நாங்கள் பார்க்கலாமா? பெரும்பாலும் நீங்கள் எல்லோருமே இருந்திருக்கிறீர்கள் என்று நான் யூகிக்கிறேன். அநேக முறைகள், நான், “யாரோ ஒருவர் மேல் அந்த நிழல் தொங்குகிறது'' என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இப்பொழுது பாருங்கள், நீங்கள் ஒரு செய்தியைக் கூற, அது உண்மையாயில்லாவிடில் தேவன் அதனோடு எந்தக் காரியத் தையுமே செய்யமாட்டார். தேவன் பொய்களில் பங்கு கொண்டிருப்பதில்லை. ஆனால் சத்தியத்திற்கு மட்டுமே அவர் ஆதரவளிக்கிறார். ஆகையால் அவர் மோசேயினிடத்தில் கூறின போது, அவர் அங்கே பின்னால் வனாந்திரத்தில் அக்கினி ஸ்தம்பத்தில், அந்த எரிகின்ற முட்செடியில் சந்தித்தபோது கூறினார். அப்பொழுது அவன் அந்த ஜனங்களை வெளியே கொண்டு வந்தபோது, யாத்திரையில் மோசேயை பின்பற்றினவர்களுக்கு, அப்பொழுது அவர் சீனாய் மலையில் மேல் இறங்கி வந்து, அதே அக்கினி ஸ்தம்பத்தில், மோசே கூறியிருந்தது சத்தியமாய் இருந்தது என்பதை ரூபகாரப்படுத்தினார். இப்பொழுதும் தேவன் அதைச் செய்வார். அவர் எப்பொழுதுமே அதைச் செய்கிறார். ஆகையால் இங்கேயிருக்கிற இந்த ஒளியில், உண்மையிலே நாம் அதில் தேவனோடு தொடர்பு கொள்கிறோம். ஏனென்றால், அது அதே தன்மையையும், அவர் பூமியின் மீது இருந்தபோது அவர் செய்த அதே காரியத்தையும், உடையதாய் இருக்கிறது. 17ஆகையால் அதன் பேரிலேயே, “இந்த நபர் இங்கிருக்கிறார், நீர் மரணத்திற்கேதுவாய் நிழலிடப்பட்டிருப்பதை, ஒரு கருத்த நிழலிடப்பட்டிருப்பதை நான் காண்கிறேன்'' என்று கூறுகிறேன். உங்களில் எத்தனை பேர்கள் அதைக் கூறக்கேட்டிருக்கிறீர்கள்? இந்நிலையில், இங்கே அண்மையில் ஒரு கூட்டத்தில், யாரோ ஒருவர் அதை அறிந்து கொள்ள ஆர்வங்கொண்டிருந்து, அதைக் காண வேண்டுமென்றிருந்து, அது கூறப்பட்டபோது, அவர்கள் அதனை ஒரு புகைப்படமாக எடுத்தனர். ஆகையால் அவர்கள்....... ஒரு ஸ்திரீ அருகில் அமர்ந்திருந்தாள். அப்பொழுது நான், ”இந்த ஸ்திரீ இங்கு அமர்ந்திருக்கிறாள் என்றும், அவள் திருமதி இன்னார்-இன்னார் என்றும், அது என்னவாயிருக்கிறது“ என்றும் கூறினேன். நான், ”மரணத்துக்கேதுவாக நிழலிடப்பட்டிருக்கிறாள், ஆனால் அவளுக்கு புற்றுநோய் உண்டாயிருக்கிறது“ என்றேன். அப்பொழுது உடனே அவன் புகைப்படமெடுத்தான். ஏனென்றால் அது அருகில் இருந்தது. பாருங்கள், அங்கே அது, இருக்கிறது, அந்த முகமூடி, கறுத்த நிழலாக மரண புற்றுநோய் அந்த ஸ்திரீயின் மீது தொங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் மீண்டுமாக திரும்பவும் ......... உரைத்தார். இப்பொழுது, அவர்கள் இதைப் புத்தகத்தில் அச்சிடும்போது அவர்கள் அதை வெட்டிவிட்டனர். ஆகையால் அவர்கள் மற்றொரு புத்தகத்தை அச்சடிக்கும் வரை அவர்கள் இதை இங்கே அச்சிட்டிருக்கிறார்கள். அதன் காரணமாக நீங்கள் அங்குள்ள அந்த தனித்தாளில் அதைக் காணலாம். இந்த புத்தகத்தை அச்சிட்டவர்கள் சுகமளிக்கும் சத்தம் என்ற குழுவினர் என்று நான் கருதுகிறேன். 18இப்பொழுது இது முற்றிலும் இலவசமாக உள்ளது. புத்தகத்தின் பின்பக்கத்தில் இங்கே இந்த புத்தகத்திற்கு பண உதவியாக ஆயிரத்து ஐநூறு டாலர்கள் கொடுத்து உதவியவர்களை ஜனங்கள் அறிந்து கொள்ளும்படியாகவும், ஜனங்கள் அவர் களுடைய பெயர்களை வாசிக்கும்படியாகவும் அச்சிட்டுள்ளனர். எனவே இது இலசமாய் உள்ளது. இது ஒரு அருமையான சிறு புத்தகம். அதில் என்ன உட்கருத்து உள்ளது என்பதை நான் அறியேன். ஏனெனில் நான் அதை ஒரு போதும் வாசிக்கவே இல்லை. பிதாவானவர் அதை அறிந்திருக்கிறார். ஆனால் பாருங்கள், எனக்கோ அது முற்றிலுமான சத்தியமாய் இருக்கிறது. அதனால்தான் நாம் சத்தியமாய் இருக்கிறதையே நோக்கிப் பார்க்கிறோம். இயேசு, ''சத்தியத்தை யும் அறிவீர்கள், சாத்தியம் உங்களை விடுதலையாக்கும்'' என்றார். அவரே அந்த சத்தியமாக இருக்கிறார். அவர் இயேசுவாக, தேவ குமாரனாக, சத்திய வார்த்தையாக இருக்கிறார். ஏனென்றால் அவர் மாமிசமான வார்த்தையாய் இருந்தார். ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' ஆகையால் அது அவரை சாத்தியமாக்கினது. ஏனென்றால் வார்த்தையே சாத்தியமாயிருக்கிறது அவரே சத்தியமாய் இருந்தார். இப்பொழுது இந்த கடைசி நாட்களில் அவர் திரும்பி வருவதை, இந்த மகத்தான தேவனுடைய அசைவை, உலகத்தி லுள்ள தேசங்களினூடான அசைவை, மணவாட்டிக்காக ஜனங் களை சேர்ப்பதை நாம் காணும்போது அது சத்தியமாயிருக்கிறது. 19அநேக வருடங்களுக்கு முன்பு, அவர்கள், “அந்நிய பாஷை களில் பேசுவது என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. அது அர்த்தமற்றது'' என்றனர். தேவன் அதை வாக்களித்தார். அது சத்தியமாய் இருப்பதை அவர் நிரூபித்தார். அது உண்மை. இந்த காலையில் யாரோ ஒருவர் கூறினார், அது அங்கே பிள்ளைகளோடு அவர்களுடைய ஞானஸ்நானத்தைக் குறித்து அதிகமாக பகிர்ந்து கொண்டிருந்த நம்முடைய சிறந்த சகோதரி என்றே நான் நம்புகிறேன். அவள், ''உங்களால் யாராவது அந்நிய பாஷைகளில் பேசுவதை கேட்கமுடியும். ஆனால் இங்கே அந்நிய பாஷைகளில் பாடுவதையே கேட்கமுடியும், பாருங்கள் அது அத்தகைய ஒரு அழகான காரியமாக இருக்கிறது“ என்றாள். இந்தியானாவில் போர்ட்வெயினில் உள்ள ரெட்டிகர் கூடாரத் திலுண்டான என்னுடைய முதல் அனுபவத்தை நான் நினைவு கூர்ந்து பார்க்கிறேன். சகோதரன் ரெடிகர் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் நான் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை வைத்து அதில் பேசிக் கொண்டிருந்தேன். அங்கே சகோதரன் பாஸ்வர்த்தும், பால் ரேடாரும் அங்கிருந்தனர். என்னைப் போன்றே வயோதிப மனிதர்களான உங்களில் அநேகருக்கு பால் ரேடாரை நினைவிருக்கும். அவர் ஒரு பாப்டிஸ்டாக இருந்தார். எனவே நாங்கள் மகத்தான நண்பர்களாக இருந்தோம். ஆகையால் அங்கே பேசிக்கொண்டிருக்கையில், வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போவதாக இருந்தேன். அது அந்த மனிதனுக்கு ஒரு விநோதமான காரியமாக இருந்தது. ஆனால் ஒரு பெண்மணி முடமாயிருந்த ஒரு சிறு பையனை அங்கே அழைத்து வந்தாள். அவன் மேடை யின்மேல் வந்தபோது கர்த்தருடைய தரிசனம் தோன்றி, அந்த சிறுவனோடு இருந்த காரியம் என்னவென்பதைக் குறித்த எல்லா வற்றையும் அவனிடம் கூறினேன். அந்த சிறு பையனை என்னிடம் தரும்படி அந்தப் பெண்ணிடம் கேட்டுக்கொண்டேன். 20இப்பொழுது உண்மையாய் வியக்கத்தக்க தேவனுடைய கிருபையும், அதனால் என்ன செய்ய முடிந்தது என்பதையும் நீங்கள் கண்டு மகிழும்படியாகவே சகோதரியினுடைய சாட்சி உள்ளது. அப்பொழுது அது தேவனுடைய வார்த்தையின்படியாக கிரியை செய்தது. பாருங்கள், அந்த வேளைக்கான தேவனுடைய வாக்குத்தத்தம். இப்பொழுது, நோவாவுக்கான தேவனுடைய வாக்குத்தத்தம் இன்றைக்கு நமக்காக கிரியை செய்யாது. மோசேவிற்கான தேவனுடைய வாக்குத்தத்தத்தை, நாம் மோசேயினுடைய செய்தியை பெற்றிருந்திருக்க முடியாது. மோசே நோவாவுடைய செய்தியை பெற்றிருந்திருக்க முடியாது. நாம் இவ்வேளைக்கான செய்தியையே பெற்றுள்ளோம். நாம் லுத்தரனுடைய செய்தியை பெற்றிருந்திருக்க முடியாது. நாம் வெஸ்லியினுடைய செய்தியை பெற்றிருந்திருக்க முடியாது. இது மற்றொரு நேரமாக இருக்கிறது. தேவன் ஒவ்வொரு காலத்திற்கும் - தம்முடைய வார்த்தையை பகிர்ந்தளித்திருக்கிறார். அந்த காலத்தினூடாக அவர் அந்த வார்த்தையை ரூபகாரப்படுத்த அது உண்மையென்று நிரூபிக்க அங்கே யாராவது ஒருவரை அனுப்புகிறார். இப்பொழுது இயேசு வானவர் பூமியிலிருந்தபோது, அவர் கூறினதுபோன்றே, நாம் ஒவ்வொருவரிலும் காண்கிறோம். அவர், “நீங்கள் தீர்க்கதரிசி களின் கல்லறைகளை கட்டினீர்கள், உங்களுடைய பிதாக்கள் அவர்களை அதில் வைத்தார்கள்'' என்றார். 21இப்பொழுது என்னுடைய ஜனங்கள் கத்தோலிக்கர்களாக, அயர்லாந்து நாட்டவராக இருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது நாங்கள் ........ இப்பொழுது அவர்கள் பரிசுத்த பாட்ரிக் அவர்களைக் குறித்துப் பேசுகிறார்கள் கத்தோலிக்கர்கள் அவரை உரிமை கொண்டாடுகின்றனர். நல்லது, அவர் அப்படியே கிட்டத்தட்ட என்னைப் போல கத்தோலிக்கனாக இருந்தவர். அவர்கள் ஜோன் ஆப் ஆர்க்கைக் குறித்துப் பேசுகிறார்கள். அவர்கள் அந்தப் பெண்ணை ஒரு சூனியக்காரி யென கழுமரத்தில் கட்டி எரித்துவிட்டனர். நாம் யாவரும் அதை அறிவோம். ஏனென்றால் அவள் ஆவிக்குரியவளாகவும், தரிசனங் களை கண்டவளாகவும் இருந்தாள். உண்மையிலேயே ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து அவர்கள் அந்த ஆசாரியர்களுடைய சரீரங்களை தோண்டியெடுத்து, அவற்றிற்காக நோன்பிருந்து, அவை களை ஆற்றில் வீசியெறிந்தனர். ஆனால் பாருங்கள், சம்பவிக்கிறது அதுவல்ல. அவர்கள் அதை எப்பொழுதுமே தவறவிடுகிறார்கள். மனிதன் தேவன் என்ன செய்தார் என்பதற்காக என்றென்றைக்கு மாக அவரை ஸ்தோத்திரித்து, அவர் என்ன செய்வார் என்பதை யும் எதிர்நோக்கியிருந்து, என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறியாதிருக்கிறான். அது மனிதனுடைய சுபாவமாயிருக் கிறது. உலகத்தின் மனிதன், அவன் தன்னுடைய சுபாவத்தில் மாற்றமடைந்திருக்கவில்லை. 22ஆகையால் இன்றைக்கு நம்முடைய செய்தி, நாம் பெற்றுள்ள செய்தி, ''பாபிலோனை விட்டு வெளியே வந்து, சுயாதீனமாக ஆவியால் நிரப்பப்பட்டு, உங்களுடைய விளக்குகளை சுத்தப்படுத்தி, தெளிவாக நம்முடைய மீட்பு சமீபமாயிருக்கிறது என்பதை நோக்கிப் பார்ப்பதேயாகும்“ என்பதை நாம் கண்டறிகி றோம். இந்தக் காரியங்கள் நம்முடைய அன்பான கர்த்தருடைய நாமத்தை உச்சரித்து தொழுதுகொள்ளும் அநேக ஜனங்களுக்கு வேறுபட்டவைகளாக இருக்கின்றன. ஆயினும் இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் நாம் அந்த பாரம்பரிய ஜனங்களுக்கு, அந்த ஜனங்களுக்கு விரோதமாக ஒன்றும் செய்கிறதில்லை. அவர்கள் சரியாக இருக்கிறார்கள். அவர்கள் அருமையாக இருக்கிறார்கள். அவர்கள் நம்முடையஅவர்கள் சுவிசேஷத்தில் நம்முடைய கூட்டாளிகளாக இருக்கின்றனர். ஏனென்றால் இயேசு, “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்' என்றார். ஆகையால் நாம் விதைகளை விதைப்பதற்கு மட்டுமே உத்தரவாதம் உடையவர்களாக இருக்கிறோம். சில வழியருகே விழுந்தன. சில வித்தியாசமான நிலங்களில் விழுந்தன. விழுந்தவைகளில் சில நூறாக பலனைத் தந்தன. ஆகையால் நாம் வெறுமனே விதையை விதைப்பவர்களாக இருக்கிறோம். அது விழுந்து கொண்டிருக்கிறபோது, தேவனே அதை கட்டுப்படுத்தி ஆளுகிறவராயிருக்கிறார். இப்பொழுது இந்த காலையில் ஒருக்கால் ஒரு சிறிய விதை எங்கோ விழுந்திருக்கலாம். அது யாரோ ஒருவருக்கு ஊக்கமூட்டலாம். ஒரு - ஒரு - ஒரு மனிதனாயிருக்கிறபடியால் வெறுமனே ......... 23நான் பேசப் போவதாக இருந்த சிறிய பெண்மணியைக் குறித்த என்னுடைய சாட்சியின் முடிவுக்கு வருகிறேன். இந்தப் பெண்மணி இந்த சிறு பையனை, ஒரு சிறு பையனை, சுமார் பத்து, பன்னிரெண்டு வயதுடையவனாக இருந்திருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். ஆனால் அந்த வயதிருந்திருக்காது. ஏனென்றால் இந்த ஸ்திரீ அவனை தூக்கிக் கொண்டு வந்திருந்தாள். அவள் அவனை என்னிடத்தில் கொடுத்தாள். அப்பொழுது நான் அந்த குழந்தைக்காக ஜெபத்தை ஏறெடுத்துக் கொண்டிருந்தபோது, அந்த சிறிய குழந்தை என்னுடைய கரங்களிலிருந்து குதித்து மேடையின் மேல் ஓடினான். அப்பொழுது சுமார் மூவாயிரத்து ஐநூறு அல்லது நான்காயிரம் ஜனங்கள் அங்கிருந்தனர். அவர்கள் அதைக் கண்டபோது, முதன் முறையாக அவர்கள் அது சம்பவித்ததை கண்டபோது, அப்பொழுது முன் இருக்கையில் அமர்ந்திருந்த தாயார் மயக்கமுற்று அங்கேயே விழுந்துவிட்டாள். ஒரு சிறு ஆமிஷ் வகுப்பைச் சேர்ந்த பெண்........ நீங்கள் ஆமிஷ் வகுப்பினரோடு நன்கு பழக்கப்பட்டிருக் கிறீர்களா? நீங்கள் அவர்களைக் குறித்து இங்கே அறிந்திருக்கிறீர் களா என்பதை நான் அறியேன். அவர்கள் நீண்ட தலை முடி கொண்டவர்களாயும், மிகவும் இனிமையான, மிகவும் சுத்தமான அருமையான மாதிரியைக் கொண்ட ஜனங்களாக இருக்கிறார்கள். எல்லா மினோனைட்ஸ் வகுப்பினர் அல்லது ஆமிஷ் பிரிவினர் முதலானோர்களில் நாம் இளைஞர்கள் செய்யும் தவறுகளைக் குறித்ததான ஒரு சான்றையும் உடையவர்களாயிருக்கவில்லை. நீங்கள் வேண்டு மானால் அவர்களை கேலியாக அழைக்கலாம். ஆனால் அவர் களைக் காட்டிலும் நம்முடைய வீடுகளில் நாம் ஏதோ குறைவான ஏதோ காரியத்தையே உடையவர்களாக இருக்கிறோம். நமக்கு மத்தியில் நடந்து வருகிற இளைஞர்களின் தவறான நடத்தைகளைப் போன்ற ஒரு குற்றப்பதிவும் அவர்கள் பெயர்களில் நீதிமன்றங்களில் கிடையாது. அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை அப்படியே ஒரே வழியில் வளர்க்கிறார்கள். அந்த விதமாகவே அவர்கள் வளர்கிறார்கள். 24இந்த வாலிபப் பெண்மணி இசைப்பேழையை இசைப்பதில் புகழ்வாய்ந்த ஒருவளாய் இருந்தாள். ஒரு அழகான வாலிப ஸ்திரீயாக, நீண்ட தலைமுடியை தன்பின்னே கொண்டவளாக இருந்தாள். அவள் எதிரே நோக்கிப் பார்த்தபோது ........ இப்பொழுது அவள் ஆமிஷ் இனத்தைச் சேர்ந்தவளாய் இருந்தாள். அவள் பெந்தெகோஸ்தேயைக் குறித்தும், என்னைக் குறித்தும் ஒன்றுமே அறியாதவளாக இருந்தாள். ஆனால் அவள் மேடையை நோக்கிப் பார்த்து, அந்த சிறுபையன் அங்கே நடந்து செல்வதை நோக்கிப் பார்த்தபோது, அவள் தன்னுடைய கரங்களை ஆகாயத்தை நோக்கியவாறு தூக்கிக் கொண்டாள். இப்பொழுது நான் மட்டுமீறி, உணர்ச்சிவசப்படுதலை அறிவேன். நான் சாதகமான மனசாய்வுடையவனாயிருக்கவில்லை என்று நான் நம்புகிறேன். நான் ஒரு பொய்யனாக இருக்கவில்லை. நான் - நான் பொய்யனல்ல. நான் தவறாக இருந்தால் நான் -நான் மனப்பூர்வமாக தவறாக இல்லாமல், அறியாமையினால் தவறாக இருக்கிறேன். ஆனால் அந்தப்பெண் தன்னுடைய கரங்களை மேலே ஆகாயத்தை நோக்கியவாறு, உயர்த்தி, அவளுடைய தலைமுடி அவளுடைய தோள்பட்டைகளில் அவிழ்ந்து விழ, அவள் அந்நிய பாஷைகளில் பாடத் துவங்கினாள். அப்பொழுது அவள், ''மகத்தான வைத்தியராம், பரிவிரக்கங்கொள்ளும் இயேசு இப்பொழுது அருகில் இருக்கிறார்“ என்ற அந்த பாடலை வாசித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் அங்கிருந்து குதித்தெழுந்தபோது ........ இப்பொழுது இது விநோதமாக தென்படுகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் இந்தப் பெண்மணியோ அந்நிய பாஷைகளில் பேசுவதைக் குறித்து ஒன்றையுமே அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவள், ”மகத்தான வைத்தியராம், பரிவிரக்கங்கொள்ளும் இயேசு இப்பொழுது அருகிலிருக்கிறார்“ என்ற பாடலை அந்நிய பாஷையில் பாடிக்கொண்டிந்தாள். அப்பொழுது அந்த இசைப்பேழையோ, ''மகத்தான வைத்தியராம், பரிவிரக்கங்கொள்ளும் இயேசு இப்பொழுது அருகிலிருக்கிறார்'' என்ற பாடலை தொடர்ந்து வாசித்தது. அந்நிலையில் அப்பொழுது ஜனங்கள் பீடத்தண்டை யிலும், மேல் மாடியிலிருந்தும், கீழிருந்தும் கூச்சலிட்டுக் கதறினர். அந்தப் பெண் அங்கே அந்தவிதமாக தன்னுடைய முகம் மேல் நோக்கியவாறு நின்றிருப்பதோடு அந்நிய பாஷையில் பேசுகையில், இசைப்பேழையின் யானைத்தந்த நிற சுருதிக்கட்டைகள் அப்படியே மேலும் கீழுமாக அசைந்து இந்தவிதமாக இசைத்தன. மகத்தான வைத்தியராம், பரிவிரக்கங்கொள்ளும் இயேசு இப்பொழுது அருகில் இருக்கிறார் அவர் சோர்வான இருதயத்தை மகிழ்விக்க பேசுகிறார் இயேசுவையன்றி வேறொரு நாமமேயில்லையே! 25ஓ! ''நமக்காக என்ன ஆயத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது? என்பதை கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை“. நான் என்ன நினைக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? பரலோகம் முழுவதும் அசலான, ஆத்துமாவை விடுவிக்கக்கூடிய, நமக்காக ஏதோ காரியத்தை செய்யக்கூடிய உண்மையான தேவனுடைய வல்லமையால் நிறைந்திருக்கும்பொழுது நாம் ஏன் - நாம் ஏன் ஒரு மாற்றுப்பொருளை அல்லது பாவனை விசுவாசமாயிருக்கிற ஏதோ காரியத்தை ஏற்றுக்கொள்ள எப்போதும் மனதாயிருக்கிறோம்? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது அநேக காரியங்கள் இருக்கின்றன. பாருங்கள், இந்த புத்தகம் எங்கே கிடைக்கும் என்று நான் ஒருபோதும் உங்களிடத்தில் கூறவேயில்லை. ஜெபர்சன்வில், தபால் பெட்டி எண். 325. நீங்கள் அங்கு எழுதினால், ஏன், அவர்கள் உங்களுக்கு அனுப்புவார்கள். இல்லையென்றால் கூட்டங்கள் ஒன்றிற்கு வருகை தருவீர்களானால் அவர்கள் அதை கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது இந்த அருமையான ஐக்கிய வேளைக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கிறிஸ்தவ வர்த்தக புருஷர்களிடத்தில் நான் வழக்கமாக கூறும் சகேயுவைப் பற்றிய ஒரு சிறு கதையைக் குறித்து இந்த காலையில் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உங்களில் அநேகர் நான் அதை கூறுவதை கேட்டிருக்கிறீர்கள். எப்படியாய் இந்த சிறுநபர் இந்த பகுத்தறிதலிலும், கர்த்தரைக் குறித்தும் நம்பாதிருந்தான் என்பதைக் குறித்து கேட்டிருக்கிறீர்கள். உண்மையிலேயே நாம் ஒவ்வொரு காலத்திலும் பார்க்கின்ற பொழுது, நீங்கள் ஒரு அசலானதை காணும் பொழுது, அதன் பின்னரே நீங்கள் பாவனை செய்கைகளைக் காண்கிறீர்கள். நாம் அப்படியே அதனைக் கொண்டே புரிந்து கொள்ள வேண்டிய தாக இருக்கிறது. ஆனால், பாருங்கள், நல்ல, உறுதியான சிந்தனையுடையவர்கள், ஆவிக்குரிய மனிதர்கள் புரிந்து கொள்கிறார்கள். நாம் அதை ......... பொருட்படுத்துகிறதில்லை. 26திருமதி. எம்மி செம்பிள் மேக்பர்ஸன், அவள் இங்கே பூமியின் மேலிருந்தபோது, தன்னுடைய ஊழியத்தில் அவள் செய்தது போன்றே அப்போதிருந்த ஒவ்வொரு பெண் பிரசங்கியும் அவளைப் போன்று கிட்டத்தட்ட இறக்கைகளைக் கொண்ட மேலாடைகளை அணிந்து, அதே விதமாக வேதாகமத்தை தூக்கிச் சென்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? இன்றைக்கு அப்படியே தேசத்தில் இருக்கின்ற பில்லி கிரஹாமை பாவனை செய்பவர்களை நோக்கிப் பாருங்கள். ஆனால் பில்லி கிரஹாம் ஒருபோதும் உங்களுடைய ஸ்தானத்தை எடுக்க முடியாது. நான் பில்லியினுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முடியாது. அவரும் என்னுடையதை எடுத்துக் கொள்ள முடியாது. நான் உங்களுடையதை எடுத்துக் கொள்ள முடியாது. நீங்களும் என்னுடையதை எடுத்துக் கொள்ள முடியாது. நீங்கள் தேவனுக்குள் தனிப்பட்டவர்களாக இருக்கின்றீர்கள். ஏதோ ஒரு நோக்கத்திற்காக நீங்கள் இருக்கின்றவிதமாகவே தேவன் உங்களை உண்டாக்கினார். நாம் நம்முடைய ஸ்தானத்தை கண்டறிவோ மானால், அப்பொழுது அங்கேயே தரித்திருப்போம். நாம் ஏதோ காரியத்தை வித்தியாசமாக செய்ய முயற்சிப்போமேயானால், அப்பொழுது பாருங்கள், நாம் - நாம் வேறு யாரோ ஒருவருடைய எல்லைக்குள்ளாக இருக்கிறோம். அப்பொழுது நாம் தேவனுடைய திட்டத்தை கறைப்படுத்துகிறோம். நாம் இன்றைய ஸ்தாபன உலகில் பில்லி கிரஹாமைப்போல, அவர் இருக்கின்றவண்ணமாக எடுத்துக் கொண்டால், நாம் அவரை ஒருக்கால் கால்பந்தாட்ட விளையாட்டுக்காரராக அழைப்போமேயானால், அப்பொழுது அவர் பந்தை வைத்திருக்க வேண்டியவரயாயிருக்கிறார். இப்பொழுது நீங்கள் உங்களுடைய சொந்த குழுவில் உள்ள மனிதனிடமிருந்து பந்தை எடுக்க முயற்சிப்பீர்களேயானால் அப்பொழுது நீங்கள் உங்களுடைய குழுவை குழப்பிவிடுவீர்கள். பாருங்கள், உங்களுடைய குழுவிலுள்ள மனிதரை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவனைத் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவன் ஓடும்படியாக மற்றவர்கள் அவனை பாதுகாக்கட்டும். பின்னர் கொஞ்சம் கழித்தே நாம் குறியிலக்கிற்கு அப்பால் தரையில் உள்ள பந்தை கையால் தொட்டெடுக்க முடியும். எனவே இயேசு வானவர் வரும்பொழுது அப்பொழுது அது முடிவு பெறும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 27இப்பொழுது நான் இந்த மனிதனை, சகேயுவைப் பற்றி கூறப் போகிறேன். நான் அவன் இந்த மரத்தின் மேல் சுற்றிலும் இலைகளால் இழுத்து மூடியிருப்பதை கூறினேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் அவன் மரத்திலிருந்து கீழே இறங்கியவுடன் அவன் இயேசுவுடனே வீட்டிற்குச் சென்றான். எனவே நான், “அவன் முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்கள் குழுவில் ஒரு அங்கத்தினனாக மாறினான்'' என்றேன். ஆகையால் இந்த காலையில் இங்கு சகேயுக்களாக யாராவது இருப்பீர்களாயின், நீங்கள் இந்த நல்ல அறிவுரையை ஏற்று முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களின் குழுவில் ஒரு அங்கத்தினராக ஆகிவிடுங்கள். நீங்கள், “முழு சுவிசேஷத்திலா?” என்று கேட்கலாம். ஆம் ஐயா. அந்த ஒரு காரியத்தையே இயேசு பிரசங்கித்திருந்திருப்பார். அது முழு சுவிசேஷமாகவே இருந்திருக்கும். அது உண்மை . அது சரிதானே? [சபையோர், ''ஆமென்'' என்கிறார்கள். - ஆசி.) நிச்சயமாகவே, ஏனென்றால் அவர் முழு சுவிசேமாய் இருந்தார். அது உண்மை . அவர் தம்மைத்தாமே மறுதலிக்க முடியாது. 28ஆனால இப்பொழுது நான் ஒரு சில வேத வாக்கியங் களையே இங்கு எழுதி வைத்திருக்கிறேன். அது ஒரு சிறு, சிறு வேதபாட பகுதியாக இருக்கின்றபடியால், நீங்கள் என்னோடு பொறுத்துக் கொள்வீர்களேயானால், அதற்கு எனக்கு ஒரு சில நிமிடங்களேயன்றி, அது அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளாது. நாம் இதை செய்வதற்கு முன்னர் ....... இப்பொழுது ஒன்று சேர்ந்துள்ள நம்முடைய சிறு ஐக்கியத்தில், வாளியில் இருந்த கரடியின் பாதங்கள் முதலியவற்றைக் குறித்துப் பேசினோம். இப்பொழுது நாம் அப்படியே இவைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளிவிட்டு, அப்படியே நாம் கூறப்போகிறதைக் குறித்து சிந்திப்போமாக. இப்பொழுது நாம் வார்த்தையின் ஆழமான பாகத்திற்குள்ளாக பிரவேசிக்க விரும்புகிறோம். நாம் அதனை அணுகுகையில் இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. காரணம் முதலில் வார்த்தையின் ஆக்கியோனிடத்தில் முதலில் பேசாமல் அதனண்டை அணுக நமக்கு எவ்வித உரிமையும் கிடையாது. நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு நம்முடைய கண்கள் மூடியிருக்க, நம்முடைய தலைகளோடு நம்முடைய இருதயங்களும் வணங்கியிருக்கின்றன என்றே நான் நம்புகிறேன். நான் என்னுடைய கண்களைத் திறந்து, கூட்டத்தாரை நோக்கிப் பார்க்கையில், இங்குள்ள யாராவது தங்கள் கரங்களை உயர்த்தி, ''சகோதரன் பிரான்ஹாம், ஜெபத்தில் என்னை நினைவு கூருங்கள். நான் - நான் இன்றைக்கு குறைவுள்ளவனாக இருக்கிறேன் என்று கூறுவீர்களா?“ என்று நான் ஆவலாயிருக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது அவர் உங்களுடைய கரத்தின் கீழ் உள்ள உங்களுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறார். அவர் அதை அருளுவாராக என்பதே என்னுடைய ஜெபமாக இருக்கிறது. 29அன்புள்ள தேவனே, நாங்கள் இருக்கின்ற இந்த கட்டிடத்திற் காகவும், உம்முடைய தாழ்மையான பிள்ளைகளாய் இருப்பதற் காகவும் இங்கே நாங்கள் ஒன்று சேர்ந்து கூடியிருப்பதற்காகவும். பேசுவதற்காகவும், ஐக்கியங் கொள்வதற்காகவும், அப்படியே எங்களை நாங்கள் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கையில், அவரைப் போலாக வேண்டுமென்ற வாஞ்சைக்காகவும் நாங்கள் நன்றியுள்ள வர்களாக இருக்கிறோம். கர்த்தாவே உம்முடைய தகுதியற்ற ஊழியக்காரனாகிய என்னைக் காட்டிலும் அதிக திறமையோடு இங்கு நின்று இந்த வார்த்தையை பிரசங்கிக்கக்கூடிய ஊழியக்கார சகோதரர்கள் அருகில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனாலும் இது என் மேல் விழுந்திருக்கிற பங்காக இருக்கிறது. பிதாவே, இன்றைக்கு நான் தேவனுடைய சித்தத்தின்படியில்லாத ஏதோ காரியத்தை கூறப்போவதாயிருந்தால் நான் அதை கூறுவதற்கு முன்பாக, ஓர் நாள் சிங்கங்கள் தானியேலை சேதப்படுத்தாதபடிக்கு அவைகளின் வாய்களை நீர் அடைத்தது போல என்னுடைய வாயையும் நீர் அடைத்துப்போடும். பிதாவே, இப்பொழுது நீர் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு ஊழியக்காரரையும் நினைவு கூர வேண்டுமென்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். கர்த்தாவே இந்த பட்டணத்தில் இங்கே அசெம்பிளி ஆப் காட் சபையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த எழுப்புதலானது, அன்புள்ள தேவனே, நீர் இந்த முழு பட்டணமும் தேவனுடைய வல்லமையினால் அசையச் செய்யும் படியான அப்படிப்பட்ட ஒரு எழுப்புதலை அனுப்பும்படியாகவும், அது இந்த எல்லா மதுபான கடைகளையும், வீதியில் சுற்றித்திரிந்து அலைந்து கொண்டிருக்கிற பிள்ளைகள் தேவனுடைய சிங்காசனத் திற்கு கொண்டுவரப்பட்டு, அவருடைய நன்மையினாலும் அவருடைய ஆவியினாலும் நிரப்பப்பட வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். பரலோகப் பிதாவே அதை அருளும். 30இன்றைக்கு மனிதனோ அல்லது ஸ்திரீயோ, பையனோ அல்லது பெண்ணோ இந்த காலையில் இந்த கூட்டத்திற்குள்ளாக பனியிலிருந்து இந்த மறைவிடத்தின் கீழே இங்கு கொண்டுவரப் பட்டிருந்தால் மகத்தான பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயத்திற்குள் சென்று அவர்களிடத்தில் மனித புத்திக்கு எட்டாத ஒரு வழியில் பேசவேண்டுமென்றே நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, அலைந்து திரிந்து பின்னர் ஒரு காலத்தில் உம்மை பிரியப்படுத்தின யாரோ ஒருவர் ஒருக்கால் மீண்டும் இப்பொழுது விலகிப்போயிருக்கலாம். ஆனாலும் கர்த்தாவே இந்த காலையில் அவர்களையும் திரும்ப கொண்டுவாரும். நாங்கள் இந்த குழுவினருக்காகவும், சகோதரன் ஏர்ல் மற்றும் அவருடைய மனைவிக்காகவும் மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கிறோம். கர்த்தாவே அதை அருளும். இப்பொழுது நாங்கள் வார்த்தையின் பக்கங்களைப் பின்னாக திரும்புகையில் ஜீவ அப்பத்தை எங்களுக்கு பிட்டுத் தாரும். ஏனென்றால் வேதம் சுயதோற்றமான பொருளை உடைய தாயிராதென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் தேவனே உம்முடைய வார்த்தையை நாங்கள் வியாக்கினயானிக்க வேண்டிய தில்லை. நீரே உம்முடைய சொந்த வியாக்கினியாய் இருக்கிறீர். ஓர் நாள் அவர், “வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று கூறின போது வெளிச்சம் உண்டாயிற்று. அவர், ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்று கூறினபோது, அவள் கர்ப்பவதியானாள். “கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” என்றீர், உலகம் என்ன கூறுகிறது என்பதைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அவர் ஆவியை ஊற்றினார். அவருக்கு எந்த வியாக்கியானியும் தேவையில்லை. அவரே தம்முடைய சொந்த வார்த்தைகளை ஜீவிக்கச் செய்து, அதை இருக்கவேண்டிய பிரகாரமாக ரூபகாரப்படுத்துகிறார். கர்த்தராகிய இயேசுவே எங்களுடைய இருதயங்களண்டை வந்து, இன்றைக்கு எங்களுக்கு குறைவாயிருக்கிற காரியங்களைக் குறித்து எங்களுக்கு வியாக்கினியும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென் 31இப்பொழுது நீங்கள் வேதாகமத்தை திருப்புவீர்களேயானால் நலமாயிருக்கும். நான் செய்தியை கொடுக்கும்படியான முயற்சியை செய்யவேயில்லை என்று நான் நம்புகிறேன். அதாவது நான் வார்த்தையை முதலில் வாசிக்கவேயில்லை. என்னுடைய வார்த்தைகள் தவறிப்போகும், ஏனென்றால் நான் ஒரு மனிதனாய் இருக்கிறேன். ஆனால் அவருடயை வார்த்தைகளோ தவறிப் போக முடியாது. அவர் தேவனாக இருக்கிறார். ஆகையால் நாம் அப்படியே ஒரு சிறு வேதபாட பகுதிக்காக இப்பொழுது திரும்புவோம். நாம் கிட்டத்தட்ட முப்பது, நாற்பது நிமிடங்கள் மட்டுமே, கர்த்தருக்கு சித்தமானால் பேசப் போவதாயிருக்கிறோம். இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம், நாம் வெளிப் படுத்தின விசேஷம் மூன்றாம் அதிசாரத்திற்கு திருப்பி, 14ம் வசனத் திலிருந்து வாசிக்க விரும்புகிறோம். நாம் வெறுமனே ஒரு பகுதியை வாசிக்க விரும்புகிறோம். அது லவோதிக்கேயா சபை காலத்திற்கான செய்தியாக இருக்கிறது. நான் நினைக்கிறேன், அதாவது பெரும்பாலும் ஆவியினால் நிரப்பப்பட்ட ஜனங்கள் யாவரும், மற்றும் வேதாகம வாசகர்கள் யாவரும் அதற்கு ஆமென் என்று கூற முடியும் என்று நான் - நான் நினைக்கிறேன். அதாவது நாம் லவோதிக்கேயா சபை காலத்தில் இருக்கிறோம். ஏனென்றால் அது கடைசி காலமாக இருக்கிறது. இந்த நேரத்தில் சபையின் நிலையைக் குறித்த செய்தியை கவனியுங்கள். லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்ன வெனில் : உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல, அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பா யிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவேன் நீ நிர்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; நான் : நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப் பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங் களையும், என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும் படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ, அவர்களைக் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத் திலே அவரோடே கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்கிற வனெவனோ, அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன். ஆவியானாவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார். 32கர்த்தர் இந்த வார்த்தையின் வாசிப்பை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது வெறுமனே ஒரு சில நிமிடங்களுக்காக வாசலுக்குள்ளே வாசல்கள் என்றழைக்கப்படுகின்ற ஒரு சிறு பாட பகுதியை எடுக்க விரும்புகிறேன். வாசலுக்குள்ளே வாசல்கள். இப்பொழுது இது மிக ஒரு ........ வாசலுக்குள்ளே வாசல்கள் என்பது ஆங்கிலத்தில் மூன்று வார்த்தைகளாக இருக்கின்றன . வாசலுக்குள்ளே வாசல்கள். நீங்களே என்னிடத்தில், “சகோதரனே, அநேகமாக இங்கே நூறுபேர்கள் தான் இருக்கின்றார்கள். எனவே உங்களுக்கு முன்பாக நூறு ஆத்துமாக்களை நீங்கள் உடையவராயிருக்கும் பொழுது அது ஒரு விதமான ஒரு சிறு பாடப்பகுதியென்று நீங்கள் கருதவில்லையா?'' என்று கேட்கலாம். நல்லது, அதாவது அது உண்மையாயிருக்கலாம். பாடப் பகுதி சிறியதாகவே இருக்கிறது. ஆனால் அது பாடப்பகுதியின் அதில் என்ன இருக்கிறது என்றே மதிப்பிடப் படுகின்றது. அதில் - அதில் வேத பாட பகுதி என்ன கூறுகிறது என்பதே மதிப்பிடப்படுகிறது. 33நான் இது கென்டக்கியிலுன்ள லூயிவில்லில் என்று நினைக்கிறேன். கொஞ்ச காலத்திற்கு முன்னர் ஒரு - ஒரு சிறு பையன் ஆதன்ஸில் இருந்தபோது ஏதோ ஒரு பழைய தகரப் பெட்டியோடு கோபுரத்து மாடியின் மேலே நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தான். அவன் அதற்குள்ளாக பழைய மாதிரியான தபால் தலைகளை சேகரித்து வைத்திருந்தான். நல்லது, அவனுடைய சிந்தையில் இருந்த முதல் காரியம் என்னவென்றால், அதற்காக அவன் ஒரு ஐஸ் கிரீமை வாங்கலாம் என்பதேயாகும். அந்த தெருவிலே அஞ்சல் தலைகளை சேகரிக்கும் ஒருவர் இருந்தார். எனவே அவன் புறப்பட்டு, அவனால் முடிந்த அளவு துரிதமாக அந்த வீதிக்குச் சென்றான். பின்னர் அவன் அவரிடம், “இந்த அஞ்சல் தலைக்காக எனக்கு நீங்கள் என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அந்த அஞ்சல்தலை சேமிப்பாளரோ அதனை நோக்கிப் பார்த்தார். ஆனால் அதுவோ ஒருவிதமாக மங்கிப் போயிருந்தது. அப்பொழுது அவர், “நான் உனக்கு ஒரு டாலர் தருவேன்” என்றார். என்னே! அது எளிதாக விற்கப்பட்டு விட்டது. அவன் அதை ஒரு நிக்கல் அமெரிக்க நாணயத்திற்கு விற்கும்படி விட்டிருந்தாலும், ஒரு ஐஸ்கிரீமை வாங்கும்படியாக அப்பொழுதும் அதற்காக மகிழ்ச்சியாயிருந்திருப்பான். ஆனாலும் அதுவோ ஒரு டாலருக்கு விற்கப்பட்டது. பின்னர் அந்த சேமிப்பாளர் அதை ஐநூறு டாலர்களுக்கு விற்றுவிட்டார். அதன் பின்னர் அது எங்கே சென்றது என்பதை நான் அறியேன். ஆனால் அதில் ஆயிரக் கணக்கான டாலர்களுக்கு விற்றுவிட்டது. நீங்கள் பாருங்கள், அந்த சிறு துண்டுக்காகிதம் அவ்வளவு மதிப்புடையதாய் இருக்கவில்லை. நீங்கள் அதை தரை யிலிருந்து பொறுக்கியெடுக்க முடியாது. ஆனால் அதில் காகிதம் மதிப்பிடப்படவில்லை, அந்த காகிதத்தின் மேலிருந்ததே மதிப்பிடப்படுகிறது. அந்த விதமாகவே, தேவனுடைய வார்த்தையை வாசிப்பதிலும் இருக்கிறது. அது வெறுமனே காகிதமாயில்லாமல், காகிதத்தின் மதிப்பாக இருக்கிறது. அதாவது காகிதத்தின் அளவைப் பொறுத்ததாக இல்லாமல், காகிதத்தின் மேல் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை பொருத்ததாயிருக்கிறது. அது அந்த விதமாக ஏற்றுக்கொள்ளப்படுமானால், ஒரு உலகத்தை இரட்சிக்க ஒரு வார்த்தையே போதுமானதாயிருக்கிறது. 34கொஞ்ச காலத்திற்கு முன்னர் ........ நம்முடைய மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களின் நாட்களில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறித்து நான் வாசித்தேன். தேசத்தில் எப்போதும் இருந்ததிலேயே மகத்தான ஜனாதிபதிகளில் ஒருவராக இருந்தவர் லிங்கன் என்றே நான் கருதுகிறேன். அவர் கென்டக்கியிலிருந்து வந்தவர் என்ற காரணத்தினால் அல்ல, ஏனென்றால் அவர் ஒரு மகத்தான மனிதனாக இருந்தார். அவர் கல்வி கற்கும் வாய்ப் பில்லாதவராயிருந்தபோதிலும் தான் ஏதோ ஒரு காரியத்தையும், ஏதோ ஒரு நோக்கத்தையும் உடையவராயிருந்தார். நான் - நான் தரிசனத்தையுடைய ஒரு மனிதனை விரும்புகிறேன். ஏதோ ஒன்றிற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிற ஜனங்களை, வெறுமனே அப்படியே இருந்து கொண்டிராமல், ''நல்லது என்ன வருவதாயிருந்தாலும் சரி'' என்று கூறுபவர்களையே நான் விரும்புகிறேன். ஓ, ஏற்ற துணிவுடைய வராயிருங்கள்! லிங்கனுக்கு கல்வியானது ஒரு தடையாக அவருடைய வழியில் ஒருபோதும் இருக்கவில்லை . எனவே அவர் ஏதோ காரியத்தை செய்ய வேண்டியவராக இருந்தார். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அந்த விதமாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். உங்களுடைய நோக்கத்தைக் கண்டறிந்து, அதை நிறைவேற்றும்படி செல்லுங்கள். 35இந்தக் குழுவின் ஒவ்வொரு அங்கத்தினரும், வெறுமனே, “நல்லது, நமக்கு மாதம் ஒருமுறை காலை சிற்றுண்டி உண்டு”. “அல்லது ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை சிற்றுண்டி உண்டு” என்று கூறுவதல்ல, அதுவல்ல இது. ஜீவியத்தில் ஒரு நோக்கத்தை, ஏதோ காரியத்தை நீங்கள் செய்யப்போவதாக இருக்க வேண்டும். நாம் அதனைச் செய்வோமாக. தேவன் உங்களை இங்கு வைத்திருக்கிறபடியால், ஒவ்வொரு சபை அங்கத்தினனும் அதைக் குறித்து ஏதோ காரியத்தைச் செய்யுங்கள். ஒரு எழுப்புதல் பட்டிணத்தில் உண்டாயிருக்கிறது. அந்த எழுப்புதல் அங்கே ஒரு நோக்கத்திற்காக உண்டாயிருக்கிறது. நாம் அதிலிருந்து ஏதோ காரியத்தை பெற்றுக் கொள்வோமாக. நாம் அதைக் குறித்த ஏதோ காரியத்தை செய்வோமாக. திரு. லிங்கன். ஒரு மனிதன், ஒரு வாலிப நபர், அவன்அவன் யுத்தத்தில் இருந்தான். மேலும் அவன் துவக்கத்திலேயே கோழையாயிருந்தான். எனவே கடமையின் நேரத்தில் அவன் - அவன் - அவன் தன்னை போர் படையிலிருந்து விலக்கிக் கொண்டான். எனவே அவர்கள் அவனுக்கு விரோதமாக ஏதோ காரியத்தை கண்டுபிடித்தனர். ஆகையால் அவன் சுட்டுக் கொல்லப்படப் போவதாக இருந்தான். ஓ, அவன் ......... அது பயங்கரமாயிருந்தது. அப்பொழுது அவனை மிகவும் நேசித்த ஒரு வாலிப நபர் ஒரு மன்னிப்பு கடிதத்தைப் பெறும்படி திரு. லிங்க னண்டைக்குச் சென்றான். அந்த நேரத்தில் அவர் இங்கே ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியாக இருந்தார். எனவே அவன் மன்னிப் பிற்காக அவரிடம் சென்றான். அவர் தன்னுடைய வண்டியிலிருந்து இறங்கிக் கொண் டிருந்தபோது அவன் அவரிடம் கூறினான்: திரு. லிங்கன் அவர்கள் உயரமானவராயும், தாடியுடையவராயும், தெற்கத்தியர்களின் பாணியில், ஒல்லியான உருவம் கொண்டவராயும் இருப்பார். அவன், “திரு. லிங்கன் அவர்களே, இன்னும் இரண்டு நாட்களில் ஒரு பையன் சுட்டு கொல்லப்படப் போவதாக இருக்கிறான். ஏனென்றால், அவன் யுத்த நேரத்தில் ஓடிவிட்டான்' என்றான். அப்பொழுது அவன், ”திரு. லிங்கள் அவர்களே, அந்தப் பையன் ஒரு மோசமான பையன் அல்ல. ஆனால் துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டு, ஜனங்கள் மரித்ததைக் கண்டு அவன் பயமடைந்துவிட்டான். அவன் மிகவும் நிலை குலைந்தவனாக, அவன் தன்னுடைய கரங் களை மேலே தூக்கியவாறு கூச்சலிடத் துவங்கினான்'' என்றான். ஆனால், “நான் அந்த பையனை அறிந்திருக்கிறேன்” என்றான். மேலும் அவன், “திரு. லிங்கள் அவர்களே, இந்த துண்டு காகிதத்தின் மேல் உள்ள உங்கள் பெயரினால் மட்டுமே அவனை காப்பாற்ற முடியும். எனவே நீர் அதைச் செய்வீரா?” என்று கேட்டான். உண்மையான, இந்த கிறிஸ்தவ பெருந்தகையாளர் உடனடியாக அந்த காகிதத்தில் “இன்னார் - இன்னாரை” மன்னிக்கிறேன் என்று எழுதி கையெழுத்திட்டார். மேலும், “ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி, ஆபிரகாம் லிங்கன்” என்று தன்னுடைய பெயரை கையொப்பமிட்டார். 36செய்தியாளனோ, தன்னால் முடிந்த அளவு துரிதமாக அதைக் கொண்டு சென்றான். அவன் அந்த சிறைக்கூட தனியறைக்கு ஓடி, “நீ விடுதலையாகிவிட்டாய்! நீ விடுதலையாகி விட்டாய்! இதோ இருக்கிறது திரு. லிங்கனுடைய, திரு. லிங்கனுடைய கையெழுத்து, நீ விடுதலையாகிவிட்டாய்” என்றான். அப்பொழுது அவன், “நாளை நான் மரிக்கப் போகிறேன் என்பதை அறிந்தும், நீ ஏன் என்னை பரியாசம் செய்ய வந்திருக்கிறாய்?” என்றான். மேலும் அவன், “அதை இங்கிருந்து கொண்டு போ, நீ மாத்திரமே என்னை பரியாசம் செய்து கொண்டிருக்கிறாய்” என்றான். அவன் அதை ஏற்றுக்கொள்ள மனதாயில்லை . அவன், “வேண்டாம், எனக்கு - எனக்கு அது தேவையில்லை” என்றான். அவன், “நீ மாத்திரம் பரியாசம் செய்து கொண்டிருக்கிறாய் ....... '' என்றான். மேலும் அவன், ”அது ஜனாதிபதி கையெழுத்தாக இருந்தால், அப்பொழுது அதில் அரசாங்க முத்திரைகள் இருந்திருக்குமே, அது அவருடைய சரியான தாளில் இருந்திருக்கு மே“ என்றான். இவனோ, “ஆனால் இது அவருடைய கையெழுத்துத்தான்” என்றான். அப்பொழுது அவன், “நான் எப்படி அவருடைய கையெழுத்தை அறிந்துகொள்வேன்?” என்று கேட்டான். மேலும் அவன், ''நீ என்னை வெறுமனே பரியாசம் பண்ணிக் கொண்டிருக்கிறாய் என்றும், நீ என்னை சாந்தப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறாய்“ என்றும் கூறினான். பின்னர் அவன் அப்படியே கூச்சலிடத் துவங்கி தன்னுடைய முதுகை திருப்பிக் கொண்டான். பின்னர் அடுத்த நாள் காலை அந்தப் பையன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் மன்னிக்கப்பட்டான் என்று ஜனாதிபதியினுடைய பெயர் இந்தத் துண்டுத்தாளில் இருந்தபோதும், அந்தப் பையன் கொல்லப்பட்டிருக்கிறான். அப்படியானால் என்ன? அவர்கள் அதற்காக தலைமை வழக்கு மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்பொழுது நம்முடைய தலைமை நீதிமன்றத்தின் தீர்மானம் இவ்வாறிருந்தது. நம்முடைய நீதிமன்றங்கள் யாவற்றிற்கும் அதுவே கடைசி முடிவாக இருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் கூறுகிறதை , நாம் அவர்களுடைய தீர்மானத்தை விரும்புகிற தில்லை. ஆனாலும் நாம் எப்படியிருந்தாலும் அதனைக் கொண்டே நிலைத்திருக்க வேண்டிய வர்களாயிருக்கிறோம். பாருங்கள், ஏனென்றால் அதுவே கட்டுக் கம்பமாய் இருக்கிறது. அதுவே கடைசி முடிவாயிருக்கிறது. இப்பொழுது அதில் கூறப்பட்ட தீர்மானம் என்னவெனில், “ஒரு மன்னிப்பு மன்னிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலொழிய, அது ஒரு மன்னிப்பாகாது” என்பதேயாகும். அந்த விதமாகவே தேவனுடைய வார்த்தையும் இருக்கிறது. அது ஒரு மன்னிப்பாக ஏற்றுக்கொள்ளப்படுமானால், அது ஒரு மன்னிப்பாயிருக்கிறது. அதை விசுவாசித்து அதை ஏற்றுக்கொள் பவர்களுக்கு அது தேவனுடைய வார்த்தையாயும், தேவனுடைய வல்லமையுமாயிருக்கிறது. நீங்கள் அதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்து, “ஓ, அது சிக்கிக்கொண்டுள்ளது, மேலும் அது இலட்சக்கணக்கான மொழி பெயர்ப்புகளை உடையதாய் இருந்து வருகின்றது” என்று நீங்கள் கூறினாலும் கவலைப்படுவதற்கில்லை. அது யாரோ ஒருவருக்காக இருக்கலாம். ஆனால் எனக்கோ அது இன்னமும் தேவனுடைய வார்த்தையாகவே இருக்கிறது. “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”. அவர் அந்த வார்த்தையைக் கொண்டு தரித்திருக்க கடமைப்பட்டவராயிருக்கிறார். 37இப்பொழுது அவர் ஓர்நாள் சபையை நியாயந்தீர்க்க வேண்டியவராயிருக்கிறார். அவர் அதை கத்தோலிக்க சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பார் என்று அவர்கள் கூறுவார்களேயானால் அப்பொழுது அவர் கத்தோலிக்க சபைகளில் எந்த ஒன்றைக்கொண்டு நியாயந்தீர்ப்பார்? அவைகள் ஒன்றுக்கொன்று வித்தியாச மாக உள்ளதே. அவர் அதை மெத்தோடிஸ்டுகளைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரேயானால், அப்பொழுது பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் இழக்கப்படுவீர்கள். அவர் அதை பெந்தேகோஸ்துக்களைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரேயானால் அப்பொழுது மீதமுள்ள நீங்கள் இழக்கப் படுவீர்கள். ஆனால் அவர் அதை சபையைக் கொண்டு நியாயந்தீர்க்க மாட்டார். வேதம், ''அவர் உலகத்தை இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நியாயந்தீர்ப்பார். ஏனெனில் கிறிஸ்து வார்த்தையாக இருக்கிறார்“ என்று கூறியுள்ளது. ஆகையால் நீங்கள் பாருங்கள், நாம் சாக்குப்போக்கு கூறமுடியாதவர்களாக இருக்கிறோம். அது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. அதனைக் கொண்டே அவர் நம்மை நியாயந்தீர்ப்பார். அது எவ்வளவு சிறியதானாலும் அது ஒரு பொருட்டல்ல. வெளிப்படுத்தின விசேஷம் 22 : 18ல் ஒரு வார்த்தை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று கூறுப்பட்டுள்ளது. 38முதலில் நான் ஆதியாகமத்தில் துவங்குகிறேன். தேவன் மானிட வர்க்கம் தன்னை மரணத்திலிருந்தும், பாவத்திலிருந்தும், துக்கத்திலிருந்தும் அல்லது எந்த ஆபத்திலிருந்தும் தற்காத்துக் கொள்ள தம்முடைய வார்த்தையைக் கொடுத்தார். அவருடைய வார்த்தையான ஒரு சங்கிலி. “நீ இந்த குறிப்பிட்ட மரத்தை தொடக் கூடாது. ஏனென்றால் நீ அதை புசிக்கும் நாளிலே, அந்த நாளிலே நீ சாவாய்”. ஒரு சங்கிலியானது தன்னுடைய பலவீனமான இணைப்பில் மட்டுமே அது பலமுள்ளதாயிருக்கிறது. நம்முடைய ஆத்துமாக்கள், நரகத்தை நோக்கிச் செல்லாதபடிக்கு இந்த சங்கிலி யானது பற்றி பிடித்திருக்கிறது. அவைகளில் ஒன்றை உடைத்தால் போதும், நீங்கள் நரகத்திற்குச் செல்ல அதுவே போதுமானதாகும். ஏவாள் ஒரு வாக்கியத்தை ஒருபோதும் உடைக்கவில்லை. அவள் சாத்தான் மூலம் ஒரு வார்த்தையையே உடைத்தாள். அதுவே முதல் புத்தகமாயிருந்தது. புத்தகத்தின் மத்தியிலே இயேசுவானவர் வந்து, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'' என்றார். அவைகளினுடைய பகுதியினால் அல்ல, வெறுமனே இங்கு ஒன்று அங்கு ஒன்று என்றில்லாமல், 'தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”. 39அவர் மரித்து, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்குள் சென்று மீண்டும் திரும்பி வந்தபோது, யோவானிடத்தில், .... அவர் இதை அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் அங்கே கூறினார். அவர்கள், “இந்த மனிதனுக்கு என்ன சம்பவிக்கும்?'' என்று கேட்டனர். அதற்கு இயேசு, “நான் வருமளவும் இவனிருக்க சித்த மானால் உனக்கென்ன?” என்று கேட்டான். சரியாக அவனுடைய ஜீவியத்தைப் பற்றி அறியாமல், அவனுடைய ஊழியம் தொடர்ந்து இருக்கும் என்பதை அறிந்து கொண்டனர். அவர் அவனை வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தில் உயரே கொண்டு போய் வரவிருக்கிற எல்லா காரியங்களையும், நாம் ஜீவிக்கிற இன்றைய இந்த வேதபாட பகுதியையும் கூட அவனுக்கு காண்பித்தார். பின்னர் கடைசி அதிகாரமான 22ம் அதிகாரம், 18வது வசனத்தில் அவர், “இந்த புத்தகத்திலிருந்து ஒரு வார்த்தையை யாராகிலும் எடுத்துப்போட்டால் அல்லது அதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால், ஜீவ புத்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுக்கப்படும்” என்றார். புரிகின்றதா? ஆகையால் மனுஷன் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கிறான் என்று நாம் விசுவாசிக்கிறோம். நான் அதை விசுவாசித்து, அது உண்மை என்றும் அறிந்திருக்கிறேன். அது எவ்வளவு சிறியதாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அதைச் செய்ய வெறுமனே ஒரு வார்த்தையே போதுமானதாக இருக்கிறது. 40எவ்வளவு சிறியது என்றும் எவ்வளவு சிறப்பற்றதுமானது என்பதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். என்னுடைய அநேக கனடா தேசத்து நண்பர்கள் இங்கு அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். நான் கனடாவில் இருந்தபோது ஜார்ஜ் மன்னர் வந்ததை நினைவு கூருகிறேன். அவருக்காக ஜெபிக்கச் செல்லும்படியான ஒரு சிலாக்கியம் எனக்கு உண்டாயிருந்தது. அப்பொழுது அவர் உடலில் பல திசுக்கள் இறுகிப்போயிருந்த நோயிலிருந்து சுகமாக்கப்பட்டார். அவர் அந்த நாளில் உடலில் திசுக்கள் இறுகிப்போய் அவதியுற்றுக் கொண்டிருந்தார். மேலும் அவருக்கு வயிற்றுக்கோளாறும், குடல் புண்ணும் கூட உண்டாயிருந்தது. கனடாக்காரர்களாகிய உங்களில் அநேகருக்கு அது தெரியும், மற்றும் அமெரிக்கர்களுக்குக்கூட தெரியும். அங்கே வண்டியில் அமர்ந்து கொண்டு அவர் கடந்து செல்வதைக்கண்டேன். அப்பொழுது அவர்-அவர் மன்னனாக இருந்தார். அவர் ஒரு இராஜாவைப் போன்றே நடந்து கொண்டார். அவர் வீதிகளினூடாக வந்தபோது அவருடைய அழகிய இராணி தன்னுடைய நீலநிறமான உடையில் அவர் அருகில் அமர்ந்திருந்தார். அப்பொழுது நானும் என்னுடைய நண்பர் ஒருவரும் ஒன்றாக நின்று கொண்டிருந்தோம். அந்த வண்டி கடந்து சென்றபோது, அவர் அப்படியே தன்னுடைய தலையை திருப்பிக்கொண்டு, அழத் துவங்கினார். அப்பொழுது நான் என்னுடைய கரத்தை அவருடைய தோளின் மீது வைத்து, நான், “காரியம் என்ன?” என்று கே அதற்கு அவர், ''சகோதரன் பிரான் ஹாமே, அதோ என்னுடைய இராஜாவும், இராணியும் போகிறார்கள்'' என்றார். நல்லது என்னால்-என்னல் அதை பாராட்ட முடிந்தது. எனவே நான், “ஒரு கனடா தேசத்தானை, தலைமை அரசாங்கத்தின் கீழ், தலைமை அரசாங்கத்தின் கீழ் அல்ல, ஆனாலும் இன்னமும் கூட இங்கிலாந்தின் ஒரு தலைமை அரசாங்கமாகவே உள்ளது. எனவே இங்கிலாந்தின் இராஜா கடந்து செல்வது ஒரு கனடா தேசத்துக்காரனை தன்னுடைய தலையை திருப்பிக்கொண்டு அழவைக்கக்கூடுமானால், அப்பொழுது நாம் நம்முடைய இராஜாவை பார்க்கும்போது அது எப்படியிருக்கும்?'' என்று எண்ணிக்கொண்டேன். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அப்பொழுது நம்முடைய பாகம் இராணியாக இருக்கும். 41அப்பொழுது பிள்ளைகள் யாவரும் பள்ளிகளிலிருந்து வெளியே அனுப்பப்பட்டு, சிறுபிள்ளைகளிடத்தில், அவர்களிடத்தில் ஒரு சிறு பிரிட்டன் நாட்டுக்குரிய கொடி கொடுக்கப்பட்டது. கனடா நாட்டுக்குரிய கொடி வேறெதோவொன்றாக அழைக்கப் படுகிறது. சகோதரன் பிரட் கனடா நாட்டுக்குரிய கொடி என்ன வென்று அழைக்கப்படுகிறது? (சகோதரன் பிரட் சாத்மேன், “ஆங்கில ஐக்கிய அரசுகளின் கொடி” என்கிறார். - ஆசி.) ஆங்கில ஐக்கிய அரசுகளின் கொடி. ஆனால் அவர்கள் இவர்களிடம் ஒரு சிறு பிரிட்டன் நாட்டுக்கொடியையே அசைக்கும்படி கொடுத்தனர். எனவே இராஜாவானவர் கடந்து செல்லும்போது இந்த சிறுபிள்ளைகள் யாவரும் வெளியே நின்று, இராஜாவை நோக்கி சத்தமிட்டு, தங்களுடைய -தங்களுடைய சிறுகொடியை அசைத்தனர். அவர் வீதியினூடாக பவனி வந்தபோது, “தேவனே இராஜாவைக் காத்தருள்வீராக” என்ற பாடலுக்கு இசைக் குழுக்கள் இசையை இசைத்தன. 42ஓ, உங்களால் புரிந்துகொள்ளக் கூடுமானால் ... அப்பொழுது அங்கே அந்த உயிர்த்தெழுதலில் எப்படியிருக்கப் போகிறது எனும் ஒரு காட்சியை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அந்த அணிவகுப்பு முடிந்தவுடனே அந்த சிறுபிள்ளைகள் திரும்பவும் உடனே பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்று கட்டளை யிடப்பட்டிருந்தனர். அப்பொழுது அந்த சிறுபிள்ளைகள் திரும்பி போய்க்கொண்டிருந்தபோது, ஒரு பள்ளி ஒரு சிறுபெண்ணை தவற விட்டுவிட்டது. எனவே அந்த சிறுபெண்ணை தேடும்படியாக எங்கும் தெருக்களில் மேலும் கீழுமாகச் சென்றனர். முடிவிலே ஒரு தொலைபேசி கம்பத்தின் பின்னால் அந்த சின்னஞ்சிறிய, குள்ளமான பெண் நின்று அப்படியே தன்னுடைய மனம் உடைந்து போய் அழுதுகொண்டிருந்தாள். அந்நிலையில் ஆசிரியர் அவளை அழைத்து வந்து ......... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.) ..... “காரியம் என்ன? நீ இராஜாவை பார்க்கவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவள், “ஆம், நான் இராஜாவைப் பார்த்தேன்” என்றாள். பின்னர் அவள், “நீ உன்னுடைய கொடியை அசைக்க வில்லையா?” என்று கேட்டாள். அதற்கு அவள், “ஆம், நான் -நான் என்னுடைய கொடியை அசைத்தேனே!” என்றாள். அப்பொழுது அவள், “அப்படியானால் பின்னை ஏன் நீ அழுது கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டாள். அப்பொழுது அவள், “ஆசிரியரே, நீங்கள் பாருங்கள், நான் மிகவும் சிறியவளாய் இருக்கிறேன், ஆனால் மற்றவர்கள் எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பெரியவர்களாக இருந்தனர். எனவே நான் என்னுடைய கொடியை அசைத்தேன். ஆனாலும் அவர் அதை பார்க்கவில்லையே'' என்றாள். அவள் அதைக் குறித்து கலக்கமடைந்திருந்தாள். அந்த ஜார்ஜ் மன்னன், அந்த சிறு பெண்ணினுடைய உருவத்தை காணாமலிருந்திருக்க லாம். அவர் அவளுடைய தேசபக்தியான இருதயத்தையும், எப்படியாக அவள் அவரைக் குறித்து இன்றியமையாத உணர்வு கொண்டிருந்தாள் என்பதையும் காணாமலிருந்திருக்கலாம். காரணம் அவள் மிகவும் குள்ளமாக இருந்தாள். 43ஆனால், நம்மோடுள்ள இராஜா அவ்வாறில்லையே! ஓ, நாம் செய்கிற மிகச் சிறிய காரியத்தையும் அவர் காண்கிறார். அவர் பெரிய காரியங்களையும், நம்முடைய இருதயத்தில் உள்ள சிந்தனை களையும், நாம் என்னவெல்லாம் செய்கிறோம் என்பதையும் அது எவ்வளவு சிறியதாக இருக்கிறது என்பதையும் அறிந்திருக்கிறார். நாம் எப்படி அவரை சேவிக்கிறோம்? நாம் ஒருவருக்கொருவர் சேவை செய்வது போன்றேயாகும். நான் உங்களை நேசிக்கவில்லை யென்றால், நான் எப்படி அவரை நேசிக்க முடியும்? புரிகின்றதா? “இந்த என்னுடைய சிறியவர்களுக்கு நீங்கள் எதைச் செய்திருக் கிறீர்களோ, அதை நீங்கள் எனக்கே செய்திருக்கிறீர்கள்''. புரிகின்றதா? நாம் செய்யாமல் விடுகின்ற சிறுகாரியங்கள் சில நேரத்தில் முழு சங்கிலியையும் உடைத்துவிடுகிறது. நீங்கள் பாருங்கள், நாம் சுதந்திரமாக வெளியில் சென்று வெறுமனே ஸ்தாபன சிந்தனை கொண்டவர்களாக, முக்கியமானதாயிருக்கின்ற இந்த சிறு காரியங் களைக் குறித்து மறந்து விடுகின்றோம். ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையும் முக்கியமானதாக இருக்கிறது. அதில் ஒன்றுமே விடப்படக்கூடியதல்ல. நாம் - நாம் அதன் ஒவ்வொரு வார்த்தையையும், அது எழுதப்பட்ட விதமாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். 44இயேசு இந்த லவோதிக்கேயா காலத்தில், “நான் வாசற் படியிலே நின்ற தட்டுகிறேன்'' என்றார். அவர் தம்முடைய சபையை விட்டு வெளியே தள்ளப்பட்டுள்ள சபை காலத்தை மட்டும் நீங்கள் கவனித்தீர்களா? மற்ற எல்லா சபை காலங்களிலும் அவர் சபைக் குள்ளாக இருந்தார். மெத்தோடிஸ்டுகள், லூத்தரன்கள் போன்றவை களினூடாக அவர் சபையின் உட்புறத்தில் இருந்தார். ஆனால் இங்கு அவர் வெளிப்புறத்தில் இருக்கிறார். நம்முடைய கோட்பாடு களும், காரியங்களும் அவரை சபையிலிருந்து வெளியே தள்ளி விட்டன. ஆனால் அவர் அங்கே வெளியே நின்று கொண்டு, ''ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், நான் அவனிடத்தில் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணி, அவனுக்கு அவனுடைய கண்களுக்கான சுகத்தையும், வஸ்திரங் களையும் அருளி, அவனுக்கு பரலோக ஐசுவரியங்களையும் அருளுவேன். நான் தட்டுகிறதை கேட்பவனுக்கே” என்று இன்னமும் தட்டிக்கொண்டே இருக்கிறார். நான் ஒரு வரைபடத்திற்கு வர்ணம் தீட்டின, சரியாகச் சொன்னால் கதவைக் குறித்த அந்த வரைபடத்தை வரைந்த அந்த ஓவியனின் பெயரைக் குறித்து நான் நினைத்துப் பார்க்க முடிந்ததை எண்ணிப்பார்த்தேன். அவன் அப்பொழுது ....... எல்லா மகத்தான வரைபடங்களுமே புகழ்பெற்ற மன்றத்தில் மாட்டப்படுவதற்கு முன்னர் இந்த வரிசையினூடாக இல்லை குறை கூறுபவர்களின் மன்றத்தினூடாக முதலில் செல்லவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த மூல வண்ண ஓவியம் இப்பொழுது கோடிக் கணக்கான டாலர்கள் விலைபோகும். 45ஆனால் பாருங்கள், அதைப் போன்றே சபையும் குறை கூறுவோரின் ஊடாக கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. நாமும் அதனூடாக கடந்து செல்கிறோம். நீங்கள் ''உருளும் பரிசுத்தர்“ என்று அழைக்கப்படப் போகிறீர்கள். நீங்கள் எல்லா விதங்களிலும் அழைக்கப்படப் போகின்றீர்கள். ஆனால் நீங்கள் மாத்திரம் உங்களை கிறிஸ்துவில் உங்களுடைய ஸ்தானத்தை உறுதியாக பற்றிக்கொண்டிருக்கக் கூடுமானால், அப்பொழுது ஓர் நாளில் அவர் உங்களை புகழ்வாய்ந்த மன்றத்திற்கு கொண்டு செல்வர். ஆனால் முதலில் நாம் திறனாய்வில் நிற்க வேண்டியவர் களாக இருக்கிறோம். அங்கேதான் அற்பமானவர்களாகிய நாம் நிற்கிறோம். அங்கேயே அது காட்டப்படுகிறது. ”சிட்சையை சகிக்கக்கூடாதவன் ஒரு தேவனுடைய பிள்ளையாயிராமல் ஒரு வேசிப்பிள்ளையாயிருக்கிறான்“. அவன் எவ்வளவுதான் சபையைச் சார்ந்திருந்தவனாயிருந்தாலும், அவன் என்னதான் செய்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவன் சிட்சையை சகிக்கக்கூடாத வனாக இருந்தால் அவன் ஒரு வேசிப்பிள்ளையாக இருக்கிறான். அவன் ஒரு உண்மையான தேவனுடைய பிள்ளை அல்ல. ஆனால் ஒரு உண்மையான, அசலான தேவனுடைய பிள்ளையோ உலகம் என்ன கூறுகிறது என்பதைக் குறித்து கவலைப்படுகிறதில்லை. அவனுக்கு எல்லாக் காரியங்களும் இரண்டாவதாக இருக்கிறது. அவன் தன்னுடைய சிந்தையை கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கிற படியால், அது அதனைத் தீர்க்கிறது. ஆம், கிறிஸ்து என்ன வெல்லாம் செய்யும்படி கூறுகிறாரோ அதையெல்லாம் அவன் செய்வான். ஆட்டுக்குட்டியானவர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் அவர்கள் அவரோடிருக்கிறார்கள். அப்பொழுதே நீங்கள் அவருடயை பிரசன்னமாகுதலை, அவருடைய சமூகத்தை அவர் என்ன சொல்கிறார் என்பதை காண்கிறீர்கள். அவர் எப்பொழுதுமே தம்முடைய ஜனங்களாகிய தம்முடைய மணவாட்டியுடன் இருக்கிறார். அவர் அவளிடத்தில் மணமுன்னிட்ட காதல் உறவு கொண்டிருக்கிறார். ஒருநாள் ஒரு கலியாண விருந்து இருக்கப்போகிறது. 46இந்த ஓவியனை, எப்படியாகிலும் குறை கூறுவோர்களினூடாகச் சென்றபோது, குறை கூறுபவர்களின் ஒரு கூட்டம் இந்த ஓவியனை சுற்றி கூடிக்கொண்டனர். அவனுடைய பெயரை நான் ஞாபகத்திற்கு கொண்டுவர முடியவில்லை. நான் மைக்கேல் ஏஞ்சலாவைக் குறித்து நினைத்துப் பார்க்கும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவன் மோசேயின் நினைவுச் சின்னத்தின் சிற்பியாக இருந்தான். ஆனால் அவனுடைய பெயரை ஞாபகத்திற்கு கொண்டுவர முடியவில்லை. ஆனால் எப்படியிருந்த போதிலும், ஒருவன், “உம்முடைய வரைபடம் பிரபலமானதாக இருக்கிறது'' என்றும், ''அந்த வரைபடத்திற்கு எதிராக கூற எனக்கு ஒன்றுமேயில்லை ” என்றும் கூறினான். மேலும் அவன், ''அவன் ஒரு லாந்தர் விளக்கை தன்னுடைய கையில் பிடித்துக் கொண்டிருக்கிறபடியால் மிகவும் இருளான இரவில் கூட அவன் வருகிறான் என்பதை அது காட்டுகிறது'' என்றான். மேலும் அவன் தொடர்ந்து, ''அப்பொழுது அவன் தன்னுடைய தலையையும் தன்னுடைய காதையும் கதவண்டை வைத்திருக்கிறான். எனவே அவன் நிச்சயமாக அந்த மெல்லிய ஓசை கொண்ட அழைப்பை தவறவிட மாட்டான். அவன் தன்னுடைய காதை கதவண்டை வைத்துக்கொண்டு, அவன் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறான்' என்றான். பின்னர் அவன், ''ஆனால், ஐயா உங்களுக்குத் தெரியுமா? நீர் உம்முடைய வரைபடத்தால் ஒரு காரியத்தை மறந்து விட்டீர்'' என்றான். அப்பொழுது அந்த ஓவியன் அவனை வாழ்நாளெல்லாம் வரைந்து வர்ணந்தீட்டிய அந்த படத்தண்டை அழைத்துச் சென்று, “ஐயா, நான் எதை மறந்துவிட்டிருக்கிறேன்” என்று கேட்டான். அதற்கு அவன், “அவன் எந்த அளவுக்கு தட்டினேன் என்பது முக்கியமல்ல, பாருங்கள், ஆனால் நீர் அதன் மேல் ஒரு தாழ்ப்பாளை வைக்க மறந்துவிட்டீர். கதவில் தாழ்ப்பாளே இல்லா திருக்கிறது” என்றான். எனவே நீங்கள் கவனித்துப் பார்ப்பீர்களே யானால் அதில் தாழ்ப்பாளே இல்லாதிருக்கிறது. அந்த ஓவியனோ, “ஓ”, நான் தான் அதை அந்தவிதமாக வரைந்தேன். ஐயா, நீங்கள் பாருங்கள் என்று கூறி, “கதவின் தாழ்ப்பாளோ உட்புறத்தில் இருக்கிறது, அந்த கதவை திறக்கிறவர் நீங்கள்தான். நீங்களே கதவைத் திறக்க வேண்டும்” என்றான். 47ஓ, ஒரு மனிதன் ஒரு மனிதனுடைய கதவை ஏன்னத்திற் காக தட்டுகிறான்? அவர் நுழைவாயிலில் நுழைய முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் உள்ளே நுழைய முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் உங்களுக்கு கூறவிரும்புகிற அல்லது உங்களோடு பேச விரும்புகிற ஏதோ காரியத்தை உடையவராக இருக்க வேண்டும். அவர் உங்களுக்காக ஒரு செய்தியை வைத்திருக்க வேண்டும். அந்த காரணத்தினால்தான் ஜனங்கள், ஒருவருக்கொருவர் கதவைத் தட்டுகிறார்கள். அதைச் செய்ய அவர்கள் ஏதோ காரியத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். ஏதோ காரணமில்லாமல் அது சம்பவிக்கமுடியாது. ஒரு மனிதனுடைய வீட்டிற்குச் செல்லும்படி எதோ காரியம் உண்டா யிருந்தாலொழிய நீங்கள் அந்த வீட்டிற்குச் செல்ல மாட்டீர்கள். வேறு ஏதேனும் இல்லையென்றாலும், வெறுமனே போய் பார்த்து, அவனண்டைக்கு ஒரு செய்தியை அல்லது ஏதோ காரியத்தை கொண்டு செல்வோம். எனவே ஒரு மனிதன் மற்றொரு மனிதனுடைய கதவைத் தட்டுவதற்கு ஏதோ காரியம் உண்டு. ஒரு கேள்வி எங்கிருக்கிறதோ, அங்கே ஒரு பதில் இருக்கத் தான் வேண்டும். பதிலே இல்லாமல் ஒரு கேள்வி இருக்க முடியாது. ஆகையால் அந்த காரணத்திற்காகவே நாம் வேதாகமத்தை நோக்கிப் பார்க்கிறோம். இந்நாளின் இந்தக் கேள்விக்கான பதிலை வேதாகமம் வைத்திருக்கிறது. கிறிஸ்துவே அந்த பதிலாக இருக்கிறார். 48இப்பொழுது அநேக முக்கியமான ஜனங்கள் உங்கள் வாழ்நாளில் கதவுகளை தட்டியிருக்கிறார்கள். அநேகர் கடந்த காலங்களில் தட்டியுள்ளனர். அநேகமாக தொடர்ந்து வரும் காலங் களிலும் இன்னும் அநேக முக்கியமான ஜனங்கள் கதவைத் தட்டலாம். இப்பொழுது முதல் காரியம் என்னவெனில், ஒருவேளை யாராவது உங்களுடைய கதவை தட்டினால், நீங்கள் மெல்ல நழுவிச் சென்று திரையை இழுத்துவிட்டு, அங்கே இருக்கிறது யார் என்று காண்பீர்கள். நீங்கள் மிகவும் முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்தால், நாம் இன்றைக்கு இருப்பதாக உரிமை கோருவது போல, ஆலயத்திற்கு செல்ல முடியாதபடி மிகவும் முக்கியமான பணியில் ஈடுபட்டுள்ளேன், இதைச் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளேன், உங்களுக்குத் தெரியுமா? என்னுடைய சபை அந்தவிதமான காரியத்தை விசுவாசிக்கிறதில்லை என்று கூறுவீர் களேயானால் எப்படியிருக்கும்? பாருங்கள், அப்பொழுது நாம் அப்படியே சில நேரங்களில் வார்த்தையிலிருந்து சற்ற விலகியிருக்கிறோம். 49ஆனால் நீங்கள் திரையை இழுத்துவிட்டு, அதன் பின்னர் அங்கே நின்று கொண்டிருக்கிறது யார் என்பதை காண விரும்புகிறேன். அப்பொழுது அது முக்கியமான ஒரு மனிதனா யிருந்தால், நீங்கள் உடனே துரிதமாக கதவண்டை ஓடுவீர்கள். இப்பொழுது நாம் சற்று திரும்பிச் சென்று, கதவைத் தட்டின ஒரு சில ஜனங்களை எடுத்துக் கொள்வோம். நாம் திரும்பிச் சென்று அநேக வருடங்களுக்கு முன்னர் எகிப்தில் இருந்த பார்வோனைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். அந்த பார்வோன், எகிப்தின் இராஜா ஒரு குடியானவனுடைய வீட்டிற்கு வந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? இந்தக் குடியானவன் பார்வோனோடு ஒத்துப்போக முடியாதவனாக இருந்தான். அவன் இவனுடைய கொள்கைகளில் நம்பிக்கை கொள்ளவில்லை. அவன் இவனோடு வேறுபட்டிருந்தான். ஆனால் எகிப்திலுள்ள ஒரு செங்கல் கொற்றன் அல்லது ஒரு மண் பூசுபவன் என்றழைக்கப்படுகிற வனுடயை கதவண்டையில் வல்லமை மிக்க பார்வோன் நிற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது அவன் தன்னுடைய திரையை இழுத்து அங்கே கதவண்டையிலே வல்லமைமிக்க பார்வோன் நிற்கிறார், மேலும் அவர் தன்னுடைய முகத்தில் சிரிப்போடு கதவை தட்டிக்கொண்டிருக்கிறார் (சகோதரன் பிரான்ஹாம் ஏதோ ஒன்றின் மேல் தட்டுகிறார். - ஆசி.] ஏன்? அப்பொழுது அந்த குடியானவன் கதவைத் திறந்து, '' மகத்தான பார்வோன் அவர்களே உள்ளே பிரவேசியுங்கள். உம்முடைய தாழ்மையான வேலைக்காரன் உம்முடைய பார்வையில் கிருபை அடைவானாக. என்னுடைய வீட்டிற்குள்ளே ஏதாகிலும் இருக்கு மாயின், பார்வோனே நான் உமக்கு ஒரு அடிமையைப்போன்றே இருந்து விடுகிறேன். நீர் என்னுடைய சகோதரர்களுக்கு மேலே என்னை கனப்படுத்தி யிருக்கிறீர். நீர் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறீர். நான் ஒரு ஏழ்மையான மனிதன். நீர் இராஜாக்களையும், உயர்குடிமகன் களையும், முக்கியமான ஜனங்களையும் மாத்திரமே பார்வையிடுகிறவர். நானோ முக்கியத்துவமற்றவனாக இருக்கிறேன். ஆனாலும் நீர் என்னிடத்திற்கு வருகை தந்து, பார்வோனே, நீர் என்னை கௌரவப்படுத்தினீர். உம்முடைய தாழ்மையான வேலைக்காரனால் என்ன செய்ய முடியும்?'' என்று கூறுவான். பார்வோன் என்ன கேட்பான் என்பது முக்கியமல்ல, அவனுடைய ஜீவனையே கேட்டாலும், அவன் அதையும் கொடுத்து விடுவான். நிச்சயமாக, ஏனென்றால் அது கௌரவமாக இருக்கிறது. 50அதாவது உதாரணமாகக் கூறினால், மறைந்த அடால்ப் ஹிட்லர், அவர் ஜெர்மனியின் தலைவராக இருந்தான். அவன் ஒரு போர்வீரனுடைய வீட்டிற்கு சென்றிருப்பாரேயானால் எப்படி யிருந்திருக்கும்? முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா? அந்த ஜெர்மானிய தேசீய சமநெறி கட்சியின் போர்வீரர்கள் எல்லோரும் கூட்டமாக சுற்றிலும் முகாமிட்டிருந்தனர். அப்பொழுது ஏன்?, யாரோ ஒருவர் கதவை தட்டிவிட்டார். அந்த சிறிய போர் வீரன், ஆஹா, நான் இந்த காலையில் நல்ல உணர்வோடில்லையே! மனைவியே அவர்களை போகச்சொல்“ என்று கூறிவிட்டான். ஆனால் அவள் மெல்ல கதவண்டையில் நழுவிச் சென்று, திரையை இழுத்துப் பார்த்தாள். அப்பொழுது உடனே அவள், “கணவரே! கணவரே சீக்கிரமாய் குதித்தெழும்புங்கள் !” என்றாள். அவனோ, ''காரியம் என்ன? அங்கே நின்று கொண்டிருக்கிறது யார்?“ என்றான். அதற்கு அவள், ''ஹிட்லர், ஜெர்மனியின் தலைவர்!'' என்றாள். ஓ, என்னே ! அப்பொழுது அந்த போர்வீரன் குதித்தெழுந்து, தன்னுடைய ஆடைகளை துரிதமாக அணிந்து கொண்டு, நிமிர்ந்து நேராக நின்றான். பின்னர் அவன் கதவண்டை நடந்து சென்று, கதவின் தாழ்ப்பாளைத் திறந்து, பின்பு கதவைத் திறந்து, “ஹிட்லர் வாழ்க!” என்றான் பாருங்கள், ஜெர்மனியில் அவனுடைய நாட்களில் அவன் மகத்தான ஒரு மனிதனாக இருந்தான். மேலும் அவன், “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டிருப்பான். அப்பொழுது அவன், “போய் அங்குள்ள அந்த செங்குத்தான. பாறையிலிருந்து குதி” என்று கூறியிருந்தால், அவன் அதை செய்திருப்பான். ஏன்? ஜெர்மானிய தேசீய சமநெறிக் கட்சி கொள்கையினரின் நாட்களில் இருந்த அடால்ப் ஹிட்லரைக் காட்டிலும் அப்பொழுது ஒரு மகத்துவம் வாய்ந்த முக்கியமான மனிதன் ஜெர்மனியில் வேறொருவருமில்லை. அவன் ஒரு மகத்தான மனிதனாக இருந்தான். அவன் ......... என்னே கனம், அவன் படை பெருந்தலைவர்களையும், மகத்தான மனிதர்களை யும் மாத்திரமே பார்வையிடுகிறவன். ஆனால் இவனோ இங்கு ஒரு சிறிய காலாட்படை வீரனுடைய கதவண்டையில் இருக்கிறானே! ஓ, அது நிச்சயமாகவே அவனுக்கு ஒரு மகத்தான கௌரவமாக இருந்திருக்கும். 51135, நல்லது, இப்பொழுது, பிளாக் ஸ்டாப்பைக் குறித்து என்ன? நாம் அதை நெருக்கமாக வீட்டிற்கே கொண்டு வருவோம். இந்த பிற்பகல் அதாவது - அதாவது நம்முடைய ஜனாதிபதி, திரு. ஜான்சன், L.B. ஜான்சன் அவர்கள், அவர் ஆகாயவிமானத்திலிருந்து இறங்கி இங்கு எங்கோ வருவாரானால் எப்படியிருக்கும்? இப்பொழுது நாம் யாவரும் அப்படியே ஒரே தரமுடைய ஜனங்களாக இருக்கிறோம். நாம் யாவரும் ஏழைகளாக இருக்கிறோம். ஒருக்கால் ஒருவர் ஒரு நல்ல சிறு வேலையை உடையவர்களாக இருக்கலாம். ஒரு நல்ல சிறுவீட்டை உடையவராக இருக்கலாம். ஆனால் மொத்தத்தில் நாம் யாவருமே வெறுமனே மானிடர்களாக இருக்கிறோம். ஆனால் அவர் இங்குள்ள உங்களுடைய வீட்டிற்கு வருவாரானால், தாழ்மையான நம்மிடத்திற்கு ஒருக்கால் வருவாரானால், அவர் கதவைத் தட்ட, நீங்கள் கதவண்டைச் சென்று அங்கே ஜனாதிபதி L.B. ஜான்சன் அவர்கள் நிற்கிறதை பார்த்தால் எப்படி இருக்கும்? ஏன்? அது ஒரு மகத்தான கௌாவமாயிருக்கலாம். ஆனாலும் ஐக்கியநாடுகளின் ஜனாதிபதி உங்களுடைய வாசலண்டையில் நிற்கின்றபடியால் நீங்கள் ஒரு கௌரவிக்கப்பட்ட மனிதனாயிருப்பீர்கள். நீங்கள் யார்? அல்லது நான் யார் என்பதல்ல. அங்கே லிண்டன் ஜான்சன் உங்களுடைய வாசலண்டையில் நிற்கிறாரே! நீங்கள் ஒரு சோசியலிஸ்ட் கட்சியின் ராயிருந்தாலும், அல்லது ரிபப்ளிகன் கட்சியனராயிருந்தாலும் அல்லது அவரோடு கோடிக்கணக்கான மைல்கள் கருத்தில் வித்தி யாசப்பட்டவராக இருந்தாலும் அது ஒரு கௌரவமாயிருக்குமே. 52மேலும் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? காரணம் நீங்கள் இந்த விதமாக கௌரவப்படுத்தப்பட்டீர்கள். ஏன்? இன்றிரவு தொலைக்காட்சித் திரையில் அது காண்பிக்கப்படும். நிச்சயமாக. இடைப்பட்ட நிலையில் உள்ள செய்தித்தாள்களும், அதை நாளைய தலைப்பு செய்தியில் வெளியிடும். இங்குள்ள பிளாக்ஸ்டாப் செய்தித்தாள், ''ஜான்டோயி, ஐக்கியநாடுகளின் ஜனாதிபதி நேற்றைய தினம் பிளாக் ஸ்டாப்பிற்குள்ளாக விமானத்தில் பறந்து சென்று அழைக்கப்படாமலேயே, எவ்வித அழைப்புமின்றி அங்கு சென்று உங்களுடைய வீட்டிலுள்ள கதவைத் தட்டினார்'' என்று வெளியிடும். தாழ்மையாயிற்றே! அந்த ஜனாதிபதி அவ்வளவு மகத்துவமான மனிதராயிருந்தபோதிலும், என்னுடைய அல்லது உங்களுடைய வாசலுக்கு வந்திருந்தாரே. நாம் ஒன்றுமற்றவர்களாயிருந்தும் நம்மிடம் பேச வந்தாரே. என்? நீங்களோ வீதியில் நடந்து சென்று, “ஆம், நான்தான் அந்த நபர். ஜனாதிபதி என்னிடத்திற்கே வருகை தந்தார்” என்பீர்கள். ''அப்படியே நில்லுங்கள், நான் உங்களுடைய முகத்தை பத்திரிக்கைக்காக வரைந்து கொள்ளட்டும், என்னை நோக்கிப் பாருங்கள்'' என்பார்கள். இப்பொழுது நீங்கள் நடந்து செல்லும் போது நீங்கள் எப்படி காணப்படுவீர்கள்? அப்பொழுது நீங்கள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருப்பீர்கள். நிச்சயமாகவே. 53நீங்கள் இங்கிலாந்து மகாராணியின் ஆளுகையின் கீழ் இல்லாதிருந்து அவள் உங்களண்டை வருவாளானால் எப்படி யிருக்கும்? ஆனாலும் நீங்கள் இங்கிலாந்து மகாராணியின் ஆதிக்கத்தின் கீழ் இல்லாமலிருந்து, அவளை உபசரித்து வரவேற்பது ஸ்திரீகளாகிய உங்களில் சிலருக்கு ஒரு கௌரவமாக இருக்குமே! ஆனால் அதே சமயத்தில் அவள் ஒரு மகத்தான நபராக இருக்கிறாள். இந்த கால கட்டத்தில் அவள் உலகத்திலேயே மகத்தான இராணியாக இருக்கின்றாள். நிச்சயமாகவே, அவள் அவ்வாறு இருக்கிறாள். அதுதான் அரசியல் வட்டாரப் பேச்சாக உள்ளது. ஆனால் உங்களுக்கு மிகவும் உயர்ந்த மதிப்பு கொண்ட ஏதோ ஒரு அற்பமான பொருள் சுவற்றின் மேல் இருப்பதைக் கண்டு அவள் உங்களிடத்தில் கேட்பாளேயானால், அப்பொழுது நீங்கள் அதை அவளுக்கு கொடுத்து விடுவீர்கள். அதைச் செய்வது உங்களுக்கு ஒரு கௌரவமாக இருக்கும். நிச்சயமாகவே அவள் இங்கிலாந்தின் இராணியாக இருக்கிறாளே. அப்பொழுது நீங்கள் ஜனாதிபதியினால் கௌரவிக்கப் படுவீர்கள். ஒவ்வொருவரும் பிளாக்ஸ்டாப்பிலுள்ள ஒரு அற்பமான ஒன்றுமில்லாத ஒரு குறிப்பிட்ட ஸ்திரீயைக் காண அங்கு விமானத்தில் பறந்து சென்ற இங்கிலாந்து இராணியின் பணிவைக் குறித்தே பேசுவார்கள். செய்தித்தாள்கள் அதை திரட்டிக் கொண்டு சென்று, அதை செய்திகளில் வெளியிட்டு பரப்பும். 54ஆனால் எல்லா நேரத்திலுமே மிக, மிக முக்கியமான நபராக இயேசு நம்முடைய கதவைத் தட்டுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் அங்கே எப்போதுமிருந்த எல்லா இராஜாக் களையும், வல்லுநர்களைக் காட்டிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அது உண்மை. நீங்கள் அவரை ஏற்றுக்கொண்டு, வெளியே சென்று, அதைக் குறித்த ஏதோ ஒன்றைக் கூறும்போது, வெளி உலகம் உங்களுடைய முகத்தைக் கண்டு சிரிக்கலாம். ஆனால் எந்த செய்தியுமே .......... போய்க்கொண்டிருக்கவில்லை. இயேசு கிறிஸ்துவைக் காட்டிலும் மகத்தான வேறு யார் உங்களுடைய வீட்டிற்கு வரமுடியும்? இயேசு கிறிஸ்துவைக் காட்டிலும் வேறு யார் உங்களுடைய கதவைத் தட்டக்கூடும்? யார் அதை செய்யக்கூடும்? தேவ குமாரனைக் காட்டிலும் யார் உங்களுடைய வீட்டைத் தட்ட முடியும் ? தேவ குமாரனைக் காட்டிலும் யார் முக்கியமான நபராக இருப்பார்கள்? அதே சமயத்தில் அவர் நாளுக்குநாள் தட்டுகிறார். நீங்கள் அவரை ஏற்றுக்கொண்டாலும் கூட நீங்கள் ஒரு மதவெறியன் என்றழைக்கப் படுகின்றீர்கள். ஆகையால் உலகமானது தன்னுடையதை எப்படியாக அறிந்துள்ளது என்பதை பாருங்கள். அது உண்மை . ஆனால் அவர் வரவேண்டுமென்ற ஒரு காரணமிருந்தாலொழிய அவர் வரமாட்டார். நீங்கள் ஜனாதிபதி ஜான்சன் அல்லது இங்கிலாந்தின் இராணி அல்லது வேறு எந்த ஒரு மகத்தான நபரின் பணிவைக் குறித்து நினைத்துப் பார்க்கிறீர்களா? அந்த முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான நபர் உங்களுடைய கதவைத் தட்டின அந்த பணிவைக் குறித்து எப்படியாக அம்பலப்படுத்தக்கூடும்? 144, அப்படியானால் தேவ குமாரனுடைய பணிவைக் குறித்து எப்படி? நாம், “பொய்யிலே பிறந்து, அக்கிரமத்திலே உருவாகி, பொய் பேசுகிறவர்களாக உலகத்திற்கு வந்த” அருவருப்பான, அழுக்கான பாவிகளேயல்லாமல் வேறு யார்? ஆயினும் தேவ குமாரன் வந்து நம்முடைய கதவைத் தட்டுவார். 55இப்பொழுது, இங்கிலாந்தின் இராணி உங்களிடத்தில் ஒரு உதவியைக் கேட்கலாம். அவள் உங்களிடத்திலிருந்து ஏதோ ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். ஆகையால் வல்லமையான ஜனாதிபதி, அவர் நீங்கள் செய்ய விரும்பாமலிருந்த காரியங்களை செய்யும்படி கேட்கலாம். அவர் நீங்கள் கொடுக்க விரும்பாமலிருந்த பொக்கிஷங்களை உங்களிடத்தில் கேட்கலாம். மேலும் அது அவருக்கு ஒன்றுமற்றதாக கருதப்படலாம் ஆனால் இயேசுவானவர் தட்டுகிறபொழுது அவர் உங்களுக்கு எதோ காரியத்தை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு மன்னிப்பை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அதை புறக்கணித்து விடாதீர்கள். ஏனென்றால் அது இங்கே நம்முடைய நீதிமன்றங்களில் சோதித்தறியப்பட்டது போன்றே, அது பரலோக இராஜ்ஜியத்திலும் அவ்வண்ணமாகவே இருக்கும். அவர் தட்டி உங்களுக்கு மன்னிப்பைக் கொண்டுவந்திருக்க, நீங்கள் அதை புறக்கணித்திருந்தால் நீங்கள் உங்களுடைய பாவங்களில் சாவீர்கள். நீங்கள் அழிந்து போவீர்கள். நீங்கள் இந்தவிதமான ஒரு கூட்டத்தில் கௌரவமாக உட்கார்ந்திருந்தாலும், நீங்கள் எழுப்பு தலில் பங்கு கொண்டு கனமடைந்திருந்தாலும், அல்லது உங்கள் சபையில் உங்களுடைய போதகர் ஒரு சுவிசேஷ செய்தியை பிரசங்கிக்கக் கேட்டிருந்தாலும் நீங்கள் உங்கள் பாவங்களில் மரித்து, அழிந்தே போவீர்கள். நீங்களோ, ''ஆம், நான் அங்கிருந்தேன்“ என்று கூறுகிற கூட்டத்தை உடையவராக இருக்கலாம். ஒருக்கால் நீங்கள் உங்களால் கூறமுடிந்த எல்லாவற்றையும் கூறக் கடினப்பட் டிருக்கலாம். நீங்கள், ''நான் பாடுகிறதை கேட்டேன், நான் அதை கேட்டு மகிழ்ந்தேன், நான் சாட்சிகளைக் கேட்டேனே, அவை உண்மையானவைகளாக இருந்ததே” எனலாம். ஆனாலும் நீங்கள் அதை புறக்கணித்து விட்டீர்களே. 56நான் ஒரு வாலிப மனிதனாக இருந்தபோது, ஒரு வாலிப ஸ்திரீயை தெரிந்து கொண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவள் அழகாக இருந்திருப்பாள். ஆனால் அவள் ஒரு கிறிஸ்தவளாக இருந்திருப்பாளா? அவள் ........ அவள் எல்லா தகுதிகளையும் உடையவளாக இருந்திருப்பாள். ஒலிநாடாவில் காலி இடம். - ஆசி.) எனவே நீங்கள் அதனோடு எவ்வித பிழையையும் கண்டறிய முடியாது. ஆனால் நீங்கள் மனுஷருடைய பாரம்பரியங்களை ஒருபுறமாக ஒதுக்கி வைக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும். நீங்களோ, “ஓ, அது உண்மை என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் அதை கூறினார் என்று நான் காண்கிறேன்'' என்று கூறலாம். ஆனால், நீங்கள், நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால் அந்த ஸ்திரீ என்னுடைய பாகமாகிறாள். அப்பொழுது நீங்கள் வார்த்தையில் பாகமாகின்றீர்கள். அதுவே மணவாட்டியாயிருக்கிறது. ஆமென். அவர் வார்த்தையாய் இருப்பா ரானால், மணவாட்டியும் மணவாட்டி - வார்த்தையாய இருப்பாள், பாருங்கள், நிச்சயமாக அவ்வாறு இருப்பாளே! பாருங்கள், நீங்கள் அதை ஏறுறுக்கொள்ள வேண்டும். நீங்கள் . நீங்கள் கூற விரும்புகிறதை நீங்கள் கூறமுடியும். நீங்கள் ஜனாதிபதியைக் குறித்து பெருமையாக பேசக்கூடும். ஆனால் வழக்கமாகவே இயேசவானவர் நம்முடைய வாசலண்டை வருகின்ற வேளையின் போது, நாம் அப்படியே அவரை புறக்கணித்து விடுகிறோம். பாருங்கள், நாம் அவரோடு எதையுமே செய்ய விரும்புகிறதில்லை. நாமோ, ”நல்லது, மற்றொரு நாளில் பார்ப்போம்“ என்கிறோம். 57நீங்கள் யாரோ ஒருவருடைய கதவைத் தட்டியிருந்தால் எப்படியிருக்கும்? இப்பொழுது நாம் சற்று காட்சியை சரியாக அப்படியே ஒரு நிமிடத்திற்கு மாற்றுவோமாக. நீங்கள் சென்று யாரோ ஒருவருடைய கதவைத் தட்டியிருந்தால், நீங்கள் அவர்களுக் காக ஏதோ காரியத்தை உடையவர்களாயிருந்து, கதவைத் தட்டியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? மொத்தத்தில் நீங்கள் தேவனண்டை இருப்பதுபோல அவர்கள் உங்களுக்கு இருப்பார்கள். நல்லது, நீங்கள் கதவைத் தட்டினால், ஏன்? சரி, ஆனால் நீங்கள் எந்த ஆதாயத்தையும் பெற்றிருக்கவில்லை. ஆகையால் நீங்கள் யாரோ ஒருவருடைய கதவைத் தட்டினபோது, அவர்கள் ஜன்னல் வழியாக உற்றுநோக்கி, திரையை மூடிவிட்டால், அல்லது வாசலண்டை வந்து, “வேறொரு நேரத்தில் பேசலாமே” என்று கூறுகிறார்கள். அதற்கு நீங்களோ, “நல்லது, நான் கூற விரும்புவது....... என்பீர்கள். அவர்களோ மீண்டும், “இந்த காலையில் எனக்கு நேரம் இல்லையே!'' என்றால் எப்படியிருக்கும்? நீங்கள் என்ன செய்வீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அநேகமாக நான் செய்யும் அதே காரியத்தை மற்றவர்களும் செய்வார்கள். அதாவது நீங்கள் அங்கு திரும்பவும் போக விரும்பவேமாட்டீர்கள். ஆனால் இயேசுவானவர் அவ்வாறில்லை. “நான் நின்று தட்டுகிறேன்” தொடர்ந்து தட்டுகிறார். [சகோதரன் பிரான்ஹாம் ஏதோ ஒன்றின் மீது தொடர்ந்து தட்டுகிறார். - ஆசி] பார்த்தீர்களா? “தேடுகிறவர்” தேடுவதல்ல. தேடுகிறது என்றே! “தட்டுகிறவர்” தட்டு, தட்டுதல் ஒரு தொடர்ச்சியாக இருக்கிறது. தட்டுகிறது, பாருங்கள், “தேடுகிறவர், தட்டுகிறவர், அது ....... '' வெறுமனே அல்ல.......... 58அநீதியுள்ள நியாயாதிபதியின் உவமையைப் போன்றே உள்ளது. அந்த ஸ்திரீ தனக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று அங்கு சென்றாள். ஆயினும் அவள் நியாயத்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை . அவன் ......... ஆயினும் அவள் தொடர்ந்து கதவைத் தட்டி முறையிட்டுக் கொண்டேயிருந்தாள். மேலும் அவள் கூறினாள், அப்பொழுது அவன், “அவள் என்னை அலட்டாதபடிக்கு நான் அவளுடைய எதிராளிக்கு நியாயம் செய்வேன்” என்றான். அப்படியானால் பரலோகப் பிதா நியாயம் செய்வது அதிக நிச்சயமல்லவா? பாருங்கள், அது நாம் அவருடைய கதவை தட்டுகிறதாக இருந்திருக்க வேண்டும். தோட்டத்திலே ஆதாம் மேலும் - கீழுமாக ஓடி கூச்சலிட்டு, ''பிதாவே, நீர் எங்கே யிருக்கிறீர்?“ என்று கேட்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக, அதற்குப் பதிலாக, தேவன் தோட்டத்திலே மேலும் கீழுமாக ஓடி, ”மகனே! மகனே, நீ எங்கேயிருக்கிறாய்?“ என்று கேட்டார். பாருங்கள், அது நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. நாம் எப்பொழுதுமே நேராக வந்து, அறிக்கை செய்வதற்குப் பதிலாக, மறைந்து கொள்கிறோம். நாம் ஏதோ காரியத்தின் பின்னே ஒளிந்து கொள்ளும்படி ஓடவே முயற்சி செய்கிறோம். பாருங்கள், அதுவே மனிதனுடைய சுபாவமாக இருக்கிறது. நாம் அந்தவிதமாகத்தான் அதை உடையவர்களாக இருக்கிறோம். ஆம் ஐயா. நீங்கள் இந்த ஜனங்களுக்கு சிறப்பாக வைத்திருந்த ஒவ்வொரு காரியத்தையும் கொடுத்து விடுகிறீர்கள், ஆனால் நீங்கள் - நீங்கள் - நீங்கள் இயேசுவையோ ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். நான் உங்களைக் குறிப்பிட்டு கூறிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் நான் இங்கே ஜனங்களை குறிப்பிட்டுக் கூறுகிறேன். 59இல்லையென்றால் நீங்கள் இதை ஒருக்கால் கூறலாம். நீங்கள், “பிரசங்கியாரே, நான் அதைச் செய்தேன், நான் -நான் அப்படியே என்னுடைய இருதயத்தை இயேசுவானவர் உள்ளே வரும்படி திறந்துவிட்டேன். நான் அதை பத்து வருடங்களுக்கு முன்பே செய்துவிட்டேன். நான் அதை இருபது வருடங்களுக்கு முன்னரே செய்து விட்டேனே” எனலாம். நல்லது, அது முற்றிலும் சரியாக இருக்கலாம். ஆனால் அதை நீங்கள் முழுமையாக செய்திருக்கிறீர்களா? புரிகின்றதா? இப்பொழுது நான் உங்களை கேட்க விரும்புகிறேன். நீங்கள யாரையாவது உங்களுடைய வீட்டிற்கு அழைக்க விரும்பினால், அப்பொழுது நீங்கள் கதவின் உட்புறத்தில் நின்று ......... யாரோ ஒருவர் உள்ளே வரும்படி அழைக்க, சரியாகக் கூறினால், நீங்கள், “உள்ளே வாருங்கள்'' என்பீர்கள். “ஆம், எனக்கு ஒரு நோக்கம் உண்டு, நான் பட்டிணத்தை விட்டு வெளியே போய், கௌரவிக்கப்படுவேன், நீங்கள் பாருங்கள்” அந்தவிதமாகத்தான் அநேக ஜனங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள் கிறார்கள். “நான் - நான் - நான் சபையைச் சார்ந்திருக்கிறேன். நான் இங்கே பெரிய இன்னார் - இன்னார் இடத்தைச் சார்ந்தவனாயிருக் கிறேன். அங்கே வேத பண்டிதர் Ph. LL எல்லாம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது மிகப்பெரிய சபையாக இருக்கிறது. பெரு நகராண்மைக் கழகத்தலைவர் அங்கே போகிறார். மற்ற எல்லாக் காரியங்களும் உங்களுக்குத் தெரியுமா? நான் அந்த சபையை சார்ந்திருக்கிறேன்” என்கிறார்கள். அவர்கள் அவரை உள்ளே வெறுமனே அந்த அளவே அனுமதிக்கிறார்கள். “ஆம், நான் அவரை ஏற்றுக்கொள்வேன்,'' பாருங்கள், ஒரு சொந்த ஆதாயத்திற்காகவே! 60அப்படியானால் எப்பொழுது இயேசுவானவர் இருதயத்திற்குள் ளாக வருகிறார்? அநேக ஜனங்கள் நரகத்திற்கு செல்ல விரும்பாத காரணத்தினால் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இயேசு வானவர் இருதயத்திற்குள்ளாக வருகின்ற போது, அவர் ஆண்டவராக இருக்க விரும்புகிறார். வெறுமனே ஒரு இரட்சகராக அல்ல, ஆனால் ஆண்டவராகவும்கூட இருக்க விரும்புகிறார். ஆண்டவர் என்றால், ''ஆளுந்தன்மை'' என்பதாகும். அவர் உடைமையை மாற்றிப் பெறுவதற்கு உள்ளே வருகிறார். இப்பொழுது நீங்கள், ''சகோதரன் பிரான் ஹாம் அது சரியா?“ என்று கேட்கிறீர்கள். நிச்சயமாக சரியே. நான் உங்களை என்னுடைய வீட்டிற்கு அழைத்திருக்க, நீங்கள் வாசலண்டை வந்திருந்தால் எப்படியிருக்கும்? அப்பொழுது நீங்கள் கதவைத்தட்ட, நான் வெளியே நோக்கிப் பார்த்து, பின்னர் நான், “ஆம், உள்ளே வாருங்கள்” நீர் எனக்கு உதவி செய்யக் கூடுமானால், நல்லது, நீங்கள் இவ்விதமாய் செய்யுங்கள். ஆனால் இப்பொழுது நீர் உள்ளே வரும்பொழுது, நீர் என்னுடைய வீட்டில் எந்தக் காரியத்திலும் தலையிட நான் விரும்பவில்லை. எனவே நீர் அங்கே வாசலண்டையிலே நிற்பீராக!“ என்று கூறிவிட்டேன். நினைவிருக்கட்டும், நம்முடைய பாடப்பகுதி “வாசல்களாய்” உட்புற வாசலாக இருக்கிறது. இப்பொழுது மானிட இருதயத்தின் உட்புறத்திலே அநேக சிறு கதவுகள் இருக்கின்றன. அந்த சிறிய கதவுகள் அநேக பெரிய காரியங்களை மூடுகின்றன. அவர் உள்ளே வருகிறபோது, அப்படியே அவரை உள்ளே அனுமதிப்பது, எல்லா வற்றிற்கும் முடிவாகிவிட்டது என்பதல்ல. 61நான் உங்களுடைய வீட்டிற்குள்ளே வருகின்றபோது, நீங்கள் உள்ளே வாசலண்டை என்னை வரவேற்றால், ஏன்? நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம் உள்ளே வாருங்கள், நான் உங்களைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறுவீர்களா னால் நலமாயிருக்கும். அப்பொழுது நான், 'நல்லது, நான் உங்களுடைய வீட்டிற்குள்ளே வருவது ஒரு சிலாக்கியமாயிற்றே!“ என்பேன். ''ஓ, நீர் இங்கு வந்து அமரமாட்டீரோ? சகோதரன் பிரான் ஹாம், எங்களுடைய வீட்டிற்குள்ளே செல்லுங்கள், உங்களுடைய வீட்டிலிருப்பது போல உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள் “ ஓ, என்னே! அப்பொழுது நான் அங்கே குளிர்காப்புப் பெட்டியண்டை போய், அந்த பெரிய இறைச்சி இடையீட்டு ரொட்டிகளில் ஒன்றை எனக்கு எடுத்துக்கொண்டு, என்னுடைய காலணிகளை கழற்றி விட்டு, படுக்கையறைக்குச் சென்று படுத்துக் கொள்வேன், பாருங்கள், அப்பொழுது எனக்கு உண்மையாக ஒரு அருஞ்சுவை உணவு உண்டு களிக்கும் குதூகலம் உண்டாயிருக்கும். ஏன்? காரணம் என்னவெனில், நான் வரவேற்கப்பட்டதை உணர்ந்தேன். நீங்கள் என்னை வரவேற்றீர்கள், ஆகையால் நீங்கள் என்னை வரவேற்றதினால் நான் அதை பாராட்டுவேன். 62ஆனால் நான் உங்களுடைய வீட்டிற்குள் சென்றபோது, நீங்கள் என்னிடத்தில், “நீர் அங்கே வாசலண்டையில் நிற்பீராக, மேலும் இப்பொழுது நீர் இங்கு எதிலும் தலையிடும்படிக்கு செல்லக் கூடாது'' என்று கூறிவிட்டீர்கள். அப்பொழுது நான் நன்கு வரவேற்கப்பட்டதாக உணரமாட்டேன். நீங்கள் உணர்வீர்களா? முடியாது, பாருங்கள், நீங்கள் வரவேற்கப்பட்டதாகவே உணர மாட்டீர்கள். யாரோ ஒருவர் உள்ளே அழைத்துவிட்டு, பின்னர், ”இப்பொழுது காத்திருங்கள், ஆம் உள்ளே வாருங்கள், ஆனால் அங்கேயே நில்லுங்கள்“ என்று கூறிவிட்டார். இப்பொழுது, நீங்கள் மானிட இருதயத்திற்குள்ளாக இருக்கின்றபோது, அங்கே ஒரு சிறு வாசல் உண்டு. நாம் வெறுமனே அவைகளில் இரண்டைக் குறித்துப் பேசுவோம், பாருங்கள், இந்த எல்லா வாசல்களினூடாகவும் செல்ல, நமக்கு நேரமில்லை, ஏனென்றால் அவைகள் அநேகமாய் இருக்கின்றன. பார்த்தீர்களா? ஆனால், உதாரணமாக அடுத்த பத்து நிமிடங்களில் நாம் இரண்டு, மூன்று வாசல்களைக் குறித்துப் பேசுவோம். இப்பொழுது, மானிட இருதயத்தின் வலக்கை பக்கத்தில் உள்ள வாசலண்டைக்குள்ளாக நீங்கள் நடந்து செல்லும்போது, வலப்பக்கத்தில் ஒரு சிறு வாசல் இருக்கிறது. அங்குள்ள அது பெருமையின் வாசல் என்றழைக்கப்படுகிறது. ஓ, என்னே! “நீங்கள் அந்த வாசலண்டைக்கு பிரவேசிக்கும்படி செல்லாதீர்கள்''. அவர்கள் அந்த பெருமையின் வாசலில், அங்கே கர்த்தரை விரும்புகிறதில்லை. ”நான், உயர்ந்த பரம்பரையை சார்ந்தவன், நான் என்னை கவனித்துக் கொள்வேன், ஓ, ஆம், இப்பொழுது பாருங்கள், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் - நான் .....“ பாருங்கள், அது பெருமையாக உள்ளது. ”நீங்கள் அதில் தலையிடாதீர்கள்“. இப்பொழுது நீங்கள் பெருமையின் வாசலை மூடியிருக்கும்வரை அவர் வரவேற்பளிப்பதை உணரமுடியாது. 63அவர் உங்களை தாழ்வுபடுத்த வேண்டியவராக இருக்கிறார். பாருங்கள், அதற்காகத்தான் அவர் உள்ளே வருகிறார். நீங்களோ, ''நான் அங்கு போய் மற்றவர்களைப் போல செயல்பட வேண்டும் என்று நீர் என்னிடம் கூறுகிறீரா?“ என்று கேட்கலாம். நல்லது, நீங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை. ஆனால் ஒரு காரியம் நிச்சயமாக இருக்கிறது. ”நல்லது, அடுத்த முறை நான் வர்த்தக புருஷர்களின் ஆலோசனைக்கு செல்லும்போது, நான் என்ன செய்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுவேன். நான் நாளை என்னுடைய - என்னுடைய பணியாளை சந்திக்கும் பொழுது நான் என்ன செய்வேன்? அதாவது, நான் அந்த ஆவியை என்மீது பெற்றிருக்க வேண்டும். அப்பொழுது நான் அங்கே என்னுடைய பணியின் மத்தியில் குதித்து, அந்நிய பாஷைகளில் பேசச் செல்லுவேன். ஓ, அது என்னை இழிவுபடுத்தும் இல்லை, அங்கிருந்து விலகியிருங்கள்! பாருங்கள். அங்குதான் காரியம், பாருங்கள், ஆம், நீங்கள் இயேசுவை உள்ளே வர அனுமதித்து, நீங்கள் சபையில் சேர்ந்து, உங்களுடைய பெயரை பதிவு செய்து, இயேசுவை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் முழு அதிகாரத்தையும் பெற்றிருக்கும் உங்களுடைய ஆண்டவரைக் குறித்து என்ன? அவர் ஆண்டவராயிருக்கிறபடியால், அவர் எல்லா அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார். எல்லாம் அவரைச் சார்ந்ததாக இருக்கிறது. பாருங்கள். இப்பொழுது நீங்கள், நீங்கள் முழுமையாக அவரண்டை ஒப்படைக்கப்படுகின்றீர்கள், 64ஆனால் அந்த சிறு பெருமை, 'ஓ, ஸ்திரீகளாகிய எங்களுக்காக நீர் கூறுகிறீரா? நாங்கள் எங்களுடைய தலைமுடி யை வளரவிட வேண்டியவர்களாக இருக்கவேண்டும் என்று நீர் கூறுகிறீரா?'' நல்லது, அதைத்தான் அவர் கூறினார். ''நாங்கள் கைவிரல் ஒப்பனைக் கலை செய்து கொள்வதை அல்லது முக ஒப்பனை காரியத்தை விட்டுவிட வேண்டியவர்களாக இருக்க வேண்டுமா?“ அதைத்தான் அவர் கூறினார். ”நல்லது, நீர் என்னுடைய நண்பர்களின் ஆடை அலங்காரத்தைக் குறித்து என்ன நினைக்கிறீர்? அவர்கள் என்னை பண்டைய மாதிரி என்றழைப் பார்களே“. நல்லது , அப்படியே உங்களுடைய பெருமையிலேயே நீடித்திருங்கள். அப்படியே தொடர்ந்து செல்லுங்கள். அவர் வாச லண்டையிலே நிற்பார். அவர் வரக்கூடிய தூரம் அவ்வளவு தான். ஆனால் அவர் உள்ளே வரும்படி அந்த வாசலைத் திறக்க நீங்கள் ஆயத்தமாகிறபோது, அவர் அதை உங்களுக்காக சுத்தம் செய்வார். குட்டைகால் சட்டைகள் இங்குள்ள குப்பைத் தொட்டிக்குள் செல்லும். முக ஒப்பனை பொருட்கள் திரும்பவும் குப்பைத் தொட்டிக்கே திரும்பிப் போகும். ஒரு ஸ்திரீ ஒரு உண்மையான விசுவாசியாக மாற, அப்பொழுது நாவிதன் அவளுடைய முடியை கத்திரிக்கமுடியாமல் வருமானமின்றி மரணத்துக்கேதுவாக பட்டினி கிடப்பான். இப்பொழுது “அதை செய்வதல்ல” என்கிறீர்கள். ஓ, ஆம், அதைச் செய்கிறதும் கூடத்தான். அதைத்தான் வேதம் கூறினது. அது உண்மைதான் பாருங்கள். அங்கு ஒரு சிறு வார்த்தை இருக்கிறது. எனவே நீங்கள் அவரை அங்கே விரும்புகிறதில்லை. “நல்லது, என்னுடைய போதகரோ!” போதகர் என்ன கூறினார் என்பதற்கு நான் கவலைப்படுகிற தில்லை. வேதமோ, “ஒரு ஸ்திரீ அந்தவிதமாக செய்வது அவமானமாக இருக்கிறது” என்றுதான் கூறியிருக்கிறது. நீங்கள், “ நல்லது, சகோதரன் பிரான்ஹாம், நாங்கள் பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு போதிப்பதற்குப் பதிலாக, இது எப்படி இருக்க வேண்டும், அது எப்படி இருக்க வேண்டும் என்று போதிக்கப்படுகிறோம்'' எனலாம். நீங்கள் மொழியின் முதல் எழுத்தையே அறியாதிருக்கும் பொழுது நீங்கள் எப்படி இயற்கணிதத்தை கற்கப் போகின்றீர்கள்? எப்படி உடை உடுத்தி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கூட அறியாதிருக்கிறீர்கள் இன்றைக்கு இந்த ஸ்திரீகளை வீதியில் காண்பது ஒரு அவமானமாக இருக்கிறது. 65நான் நேற்றைய தினம் ஒரு இடத்திற்கு சென்றிருந்தேன். அப்பொழுது, ஓ, தாறுமாறாக்கப்பட்ட கூட்டம் உள்ளே வந்தது. அவர்களில், அந்த மனிதர் தங்களுடைய கண்கள் வரையிலும் மற்றும் தங்களுடைய முதுகின் மேல் தொங்கிக்கொண்டிருக்கும் அளவிற்கு தலைமுடியை உடையவர்களாய், பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் அணியும் பெரிய பண்டைய காலணிகளைப்போன்று பாதியளவு வாய் திறந்திருக்கும்படி அணிந்திருந்தனர். நீங்கள் அவர்கள் சமுதாய பண்பற்றவர்களாயிருந்தனர் என்றே கூறக்கூடும். அவர்கள் அவ்விதமாக நடந்து சென்று, “நாங்கள் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம்” என்றனர். உலகத்தில் யார் அந்தவிதமான ஒரு மனிதனை தன்னுடைய வியாபாரத்திற்கு சம்பளத்திற்கு அமர்த்திக்கொள்வார்கள்? அவர்கள் எப்படி ஒரு ஜீவியம் செய்வார்கள்? நான் அங்கே உண்மையான இரண்டு பையன்கள் அமர்ந்திருக்கிறதை காண்கிறேன். அவர்கள் அங்குள்ள அந்த பல்கலை கழகத்திலிருந்து வந்திருக்கின்றனர், அதாவது இந்த பீட்னிக்ஸ் என்ற இசைக்குழுவினர் செய்தது போன்றோ அல்லது அவர்கள் தங்களை பெரும்புள்ளிகள் என்றோ அல்லது பீட்டல்ஸ் குழுவினர் என்றோ அல்லது அதைப்போன்றோ அழைத்துக் கொள்கின்றார்கள். அந்த விதமான ஒரு காரியம் இங்கிலாந்திலிருந்து வருகிறது. ஆகையால் அதைப்போன்ற அங்குள்ள ஒரு மனிதனை தனக்காக யார் வேலை செய்யும்படி சம்பளத்திற்கு அமர்த்திக் கொள்வார்கள்? நீங்கள் அமர்த்திக்கொள்வீர்களேயானால், அப்பொழுது அங்கு ஏதோ காரியம் உள்ளது. நீங்கள் இன்னமும் சிலுவையண்டையில் போதுமான நெருக்கத்திற்கு வரவேயில்லை. 66வீதியிலே இருக்கின்ற இந்த ஸ்திரீயை நோக்கிப் பாருங்கள். அது ஒரு அவமானமாக இருக்கிறதே! ஒருக்கால் குற்றமற்ற ஸ்திரீகளும் இந்த சிறிய ஆடைகளோடு இருக்கலாம், பாருங்கள், இந்நிலையில் அந்தவிதமாக அவர்கள் நோக்கிப் பார்க்கையில் இது ஒரு அவமானமாக இருக்கிறதே. நீங்களோ, “ஏன்?” என்று கேட்கலாம். ஸ்திரீயே நீ விபச்சாரம் செய்து கொண்டிருக்கிறாய். அவர்கள், “வாலிப மனிதனே, இங்கு ஒரு நிமிடம் பொறு. நான் அவ்வளவு நல்லொழுக்கமுடையவளாக இருக்கிறேனே'' எனலாம். அது உங்களுடைய சொந்த சிந்தனையில் அவ்வாறிருக் கலாம். நீங்கள் அவ்வண்ணமாக இருக்கிறீர்கள் என்று மருத்துவ பரிசோதனையினாலும் கூட நிரூபிக்கலாம். ஆனால் நினைவிருக்கட்டும். நியாயத்தீர்ப்பின் நாளிலே நீ விபச்சாரம் செய்ததற்காக பதில் கூறப்போகிறாய். இயேசு, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்திலே அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று” என்றார். நீங்கள் உங்களை அவனுக்கு அந்தவிதமாக காட்டுகிறீர்கள். பாருங்கள், பிசாசு அவர்களை எப்படியாக குருடாக்கியிருக்கிறான். அது ஒரு அவமானம். அது ஒரு வெட்கக்கேடாக இருக்கிறது. நீங்கள் பாருங்கள், அவர்களை - அவர்களை ஒரு ஆவி பிடித்திருக்கிறது. அந்த ஆவியே அதைச் செய்கிறது. அது ஒரு பரிசுத்தமில்லாத ஆவியாக இருக்கிறது. 67ஆனால் ஒரு உண்மையான பரிசுத்த ஆவியானது ஒரு ஸ்திரீயை தகுந்த முறையோடும், பரிசுத்தமாக காணும்படியாகவும் உடையை உடுத்தச் செய்யும். ஒரு சமயம் என்னுடைய மனைவி என்னிடத்தில் கூறினாள். நாங்கள் வீதியில் போய்க்கொண்டிருந்தபோது, நாங்கள் நம்முடைய தேசத்தில் ஒரு முழுமையான ஆடை அணிந்திருந்த ஸ்திரீயைக் கண்டோம். அது ஒரு விநோதமான காரியமாக இருந்தது, பாருங்கள், அங்கே அந்த இடத்தில் அநேக பெந்தேகோஸ்தேக்களும் கூட அவ்வாறி ருப்பதில்லை. ஆனாலும் அவள் ஆடை அணிந்திருந்ததை நாங்கள் கண்டோம். அவள், “பில்லி” என்றழைத்து, ''நான் சில பெண்களை அறிவேன், அவர்கள் இங்குள்ள இந்த சபைகளின் பாடற்குழுவில் பாடுகிறார்களே“ என்றாள். நான், “நிச்சயமாகவே” என்றேன். அதற்கு அவள், “இந்நிலையில் அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோருகிறார்களா?” என்று கேட்டாள். நான், “தேனே, பார், பார், நாம் ....... இல்லை ” என்றேன். அதற்கு அவள், “ஏன் நம்முடைய ஜனங்கள் அதைச் செய்கிறார்கள்?” என்று கேட்டாள். அப்பொழுதுதான், “தேனே பார், நாம் அவர்களுடைய - அவர்களுடைய இனமே அல்ல” என்றேன். அதற்கு அவள், ''என்ன?'' என்று கேட்டு, ''நாம் அமெரிக்கர்கள்தானே?“ என்றாள். அதற்கு நான், “ஆம், நாம் அமெரிக்கர்கள் அல்ல” என்றேன். அப்பொழுது அவள், ''நாம் அமெரிக்கர்களில்லையா?'' என்று கேட்டாள். அதற்கு நான், “இல்லையே” என்றேன். நான் “ஜெர்மனிக்கு செல்லும்போது நான் ஒரு ஜெர்மானிய ஆவியை கண்டறிகிறேன். நான் பின்லாந்திற்குள் சென்றபோது ........ '' அங்கே சூனா (Suana) என்ற சுகாதார குளியலை வைத்திருக்கிறார்கள் என்பதை பின்லாந்து மக்களாகிய உங்களில் அநேகர் அறிவீர்கள். அங்கே ஸ்திரீகள் ஆண்களை குளிப்பாட்டுகிறார்கள். ஆகையால் அது ஒரு பின்லாந்தின் ஆவியாக இருக்கிறது. வல்லமையான அருமையான ஜனங்கள், ஆனால் நீங்கள் கண்டறிந்து கொள்வதென்றால் நீங்கள் எங்கெல்லாம் போகின்றீர்களோ அங்கே நீங்கள் ஒரு தேசீய ஆவியைக் கண்டறிவீர்கள். 68நீங்கள் ஒரு சபைக்குள்ளாகச் சென்று, அந்த போதகரை காணும்போது, அவர் உண்மையிலேயே மட்டுமீறிய மூர்க்க வெறி கொண்டவராய் செயல்பட்டுக்கொண்டிருப்பாரானால், அப்பொழுது சபையும் அவ்வாறே இருக்கும். புரிகின்றதா? அவர்கள் பரிசுத்த ஆவிக்குப் பதிலாக ஒருவருடைய ஆவியை ஒருவர் எடுத்துக் கொள்கிறார்கள். அந்தக் காரணத்தினால்தான் நாம் அதிகமான தாறு மாறாக்கப்பட்ட வேத போதனைகளை உடையவர்களாயிருக்கிறோம். அவர்கள் முதனிலைப் படிவத்திற்கு திரும்பி வருவதற்குப் பதிலாக ஏதோ ஒரு ஸ்தாபன ஆவியை ஏற்றுக் கொண்டுள்ளனர். புரிகின்றதா? இயேசுவானவர் வந்து உண்மையான சுவிசேஷத்தை அறிமுகப்படுத்தின நாட்களில் அது இருந்ததுபோல வார்த்தை யானது அவர்களுக்கு அந்நிய காரியமாக இருக்கிறது. அவர்கள், “அவன் ஒரு பிசாசு, அவன் பெயர் பெயல்செபூல்” என்றனர். பார்த்தீர்களா? ஆனால் நீங்கள் அங்குதான் அதை புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது அவள், ''நல்லது, அப்படியானால் நாம் அமெரிக்கர்களாக இல்லையென்றால் அப்பொழுது நாம் யாராக இருக்கிறோம்?“ என்று கேட்டாள். அதற்கு நானோ, “நம்முடைய இராஜ்ஜியம் பரத்திலுள்ளது” என்றேன். பாருங்கள், நாம் சுயாதீனர்களாக மீண்டும் பிறந்தவர் களாக இருக்கிறோம். தேவனுடைய இராஜ்ஜியம் உங்களுக்குள்ளே இருக்கிறது. பாருங்கள், அங்குள்ளதைப் போன்று செயல்படுங்கள். நீங்கள் அங்கிருந்து வந்த கட்டளை தூதர்களாக இருக்கிறீர்கள். நான், “நாம் இங்கே ஒரு நாட்டின் பிரஜைகளாக, இங்கே மாம்சத்தில் ஜீவிக்கிவர்களாக இருக்கிறோம். ஆனால் நம்முடைய ஆவியிலோ, நாம் அந்நியர்களும், பரதேசிகளுமாக இருக்கிறோம்” என்றேன். இப்பொழுது நாம் உலகத்திற்கு அந்நியர்களாக, நம்முடைய சொந்த தேசத்திற்கும்கூட அந்நியர்களாக இருக்கிறோம். ஏனென்றால் அழைப்பானது நம்முடைய இருதயத்தை தட்டின போது, நாம் அவருடைய பாகமாகும்படிக்கு, அவருடைய வார்த்தையின் பாகமாகும்படிக்கு அதை ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆகையால் வார்த்தையே நம்மை ஆயத்தப்படுத்தவும், நம்மை ஜீவிக்கச் செய்யவும், நம்மை கிறிஸ்தவர்களைப் போல செயல்படவும் செய்கிறது. 69கொஞ்சம் காலத்திற்கு முன்னர் தென்பகுதியில் நடைபெற்ற ஒரு சிறு சம்பவம். அங்கே ஒரு அரசன் ...... இல்லை விலைகொடுத்து வாங்குபவன் ஒருவன் இருந்தான். அவர்கள் அடிமைகனை விற்று வந்தனர். அது பிரித்து ஒதுக்கப்படும் நேரமாக இருந்தது. அப்பொழுது அவர்கள் அடிமைகளை தென் பகுதியில் வைத்திருந்தனர். அவர்கள் ஒரு ... நீங்கள் வழக்கமாக ஒரு குலுக்கல் முறையில் ஒரு காரை வாங்குவது போல அவர்கள் போய் அவர்களை வாங்கி வருவார்கள். இப்பொழுது நான் ஒரு ஒன்றுபடுத்துகிறவனாயிருக்கிறேன், முற்றிலுமாக ... நான் ஒரு பிரிந்திருப்பவனாகவே இருக்கிறேன் என்றே குறிப்பிடுகிறேன். அவர்கள் எவ்வளவுதான் வாதிட்டாலும் நான் கவலைப்படுகிறதில்லை. ஏனென்றால், நீங்கள் ஒரு கிறிஸ்தவனாயிருந்துகொண்டு, ஒன்றுபடுகிறவனாயிருக்க முடியாது. அது முற்றிலும் உண்மை . தேவனும் கூட தம்முடைய தேசங்களை பிரிக்கிறார். அவர் தம்முடைய ஜனங்களை பிரிக்கிறார். ''அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுச் செல்லுங்கள்“, அவர் ஒரு ... அவர் ஒரு பிரித்து வைக்கிறவராகவே இருக்கிறார். அவர்களுடைய அசுத்தமான காரியங்களை தொடாதிருங்கள். அவர் இஸ்ரவேலரை, அந்த யூத இனத்தை உலகத்திலிருந்த எல்லா இனங்களிலிருந்தும் இழுத்துக்கொண்டார். அவர் ஒரு பிரித்து வைக்கிறவராகவே இருக்கிறார். எந்த ஒரு மனிதனும் ஒரு அடிமையாயிருக்க வேண்டும் என்பதை நாம் நம்புகிறதில்லை. தேவன் மனிதனை உண்டாக்கினார்; மனிதன் அடிமைகளை உருவாக்கினான். எந்த இனமும், எந்த நிறமும் அல்லது எந்த காரியத்திலுமே ஒருவர் மற்றவரை ஆளவேண்டும் என்பதை நான் நம்புகிறதில்லை. ஆனால் ஒரு பிரிவு உண்டு. கிறிஸ்துவின் மணவாட்டி எல்லா சபைகளிலுமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறாள். அது முற்றிலும் உண்மையே. இயற்கையான சபை, ஆவிக்குரிய சபை, மாம்ச பிரகாரமான சபை, வார்த்தையான சபை. அது எப்பொழுது இந்த விதமாக இருந்து வருகிறது? “இயேசு தனக்கு சொந்தமானதிலே வந்தார், அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ள வில்லை. அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ..! 70எனவே வழக்கமாக வாங்குபவர்கள், தரகர்கள் போய், இந்த அடிமைகளை வாங்குவார்கள். ஒரு சமயம் ஒருவன் ஒரு பெரிய பண்ணைக்கு வந்தான். அப்பொழுது அவன் அவர்களை கவனித்துப் பார்த்தான். அடிமைகள் எல்லாக் காரியங்களிலுமே கசையடி பெற்றவர்களாக இருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். தென்னாப்பிரிக்க டச்சுக்காரர்களும், ஹாலந்து நாட்டுக்காரர்களுமே சென்று அடிமைகளை வாங்கி இங்கே கொண்டு வந்து அவர்களை விற்று வந்தனர். அந்த அடிமைகள் ஒருபோதும் தகப்பனையோ, தாயையோ, தங்களுடைய பிள்ளைகளையோ திரும்பவும் காணமாட்டார்கள். அவர்கள் இவர்களைக் கொண்டு ஒருவரோடு ஒருவர் இனச்சேர்க்கை புரிய வைக்கின்றனர். எனவே அவர்கள் ஒரு பெரிய திடகாத்திரமான மனிதனை பொறுக்கியெடுத்து, தன்னுடைய சொந்த மனைவியை விட்டு தூரமாயிருக்கிற அவனை ஒரு பெரிய திடகாத்திரமுள்ள ஸ்திரீயோடு பெரிய திடகாத்திரமான அடிமைகளை உருவாக்கும்படிக்கு இனச்சேர்க்கை செய்யச் செய்கின்றனர். ஓ, அதற்காக என்றோ ஒருநாள் தேவன் அவர் களை பதில் கூறச் செய்வார். அது உண்மை . அது சரியானதல்ல. 71ஆபிரகாம் லிங்கன் அங்கே நியூ ஆர்லியன்ஸில் உள்ள ஒரு படகிலிருந்து இறங்கி தன்னுடைய உயரமான பட்டுத் தொப்பியை கழற்றிவிட்டு ....... இந்த விதமாகக் கூறினார். அவர் மூன்று அல்லது நான்கு கறுப்பர்கள் வந்து அங்கே காலணிகளே இல்லாமல் நின்றிருந்தனர். அவர்கள் அங்கிருந்தபோது ....... ஒரு பசு உறைபனி நிலத்திலிருந்து வந்து அங்கே படுத்திருந்தது. அவர்கள் பசுக்களை உள்ளே செல்வதை நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர். அவைகளினுடைய சிறிய முதிர்ந்துபோன பாதங்கள் வெடித்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அப்பொழுது அவர்கள், உங்களுக்கு கலாணிகள் உண்டு, எனக்கும் காலணிகள் உண்டு, தேவனுடைய பிள்ளைகள் எல்லோருமே காலணிகளை உடையவர்களாக இருக்கின்றனர் என்று பாடிக்கொண்டிருந்தனர். அங்கே அவர் படகிலிருந்து இறங்கினவுடனே அடிமை களை அடைத்து வைத்திருக்கும் அறைக்கு அருகில் சென்றபோது அங்கு ஒரு பெரிய திடகாத்திரமான ஒரு கறுப்பு மனிதன் தன்னைச் சுற்றி கசையடியோடும், தன்னுடைய இருதய கடும் சோதனையோடும் நின்று கொண்டிருந்தான். அவன் தன்னுடைய முதுகில் ஒரு கசையடியோடு வீதியில் ஓடினான். அப்பொழுது அவன் சரியாகத்தான் இருந்தானா என்பதையும், அவனுடைய இருதயத்தையும் சோதித்துப் பார்த்தனர். அப்பொழுது அவனுடைய பரிதாபமான எளிய மனைவி அந்தவிதமாக தன்னுடைய கரங்களில் இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். அவனோ ஒரு பெரிய திடகாத்திரமுள்ள ஸ்திரீயோடு இனச்சேர்க்கை செய்ய விற்கப்படவிருந்தான். அப்பொழுது பண்டைய ஆபிரகாம் லிங்கனோ தன்னுடைய தொப்பியை அக்குள்ளில் வைத்துக்கொண்டு ....... அவருடைய தொப்பியை அவருடைய அக்குள்ளில் இந்த விதமாக வைத்துக்கொண்டு, தன்னுடைய கைமுட்டியால் கையை இடித்துக் கொண்டு, அவர், “அது தவறாயிற்றே, என்றாவது ஒருநாள் அது என் ஜீவனை கிரயமாக எடுத்துக்கொண்டாலும், நான் அதை ஒழித்துக் கட்டுவேன்” என்றார். அதோ அங்கே தொலைவில் சிக்காகோவில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒரு ஆடை, அதன் இரத்தக்கறையுடன் வைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்த அந்த இரத்தக்கறையே அந்த கறுப்பு மனிதர்களை விடுதலையாக்கியது. நான் அது பாவமென்றும், அந்த காரியங்கள் தவறாயிருக் கின்றன என்றும் கூறுகின்றேன். தேவனே அதை ஒழித்துக்கட்ட எனக்கு உதவி செய்யும். நாங்கள் சுயாதீனர்களாக பிறந்திருக்கிறோம். நாங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம். நாம் எந்த கோட் பாட்டிற்காகவும், அல்லது எந்த கொள்கைக்காகவும் ஒரு உலக ஆலோசனை சபைகளுக்குள்ளாக செல்ல வேண்டிய வேலையே நமக்கு கிடையாது. நாம் பரிசுத்த ஆவியில் சுயாதீனமுள்ள மனிதர்களாக இருக்கிறோம். நமக்கு ஒரு உரிமை உண்டு. நாம் அப்படிப்பட்ட, அதைப் போன்ற காரியத்திலிருந்து வெளியே வந்து பெந்தேகோஸ்தேக்களாக இருக்க வேண்டும். அது உண்மை . இப்பொழுது நாம் சுயாதீனர்களாக இருக்கிறோம். நாம் மீண்டும் இந்த காரியங்களுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டியதில்லை. 72ஆனால், இந்த விலைக்கு வாங்குகிறவன் அவனுடைய அடிமைகளை நூறோ அல்லது ஏதோ சற்று கூடுதலாக ஒரு பெரிய பண்ணையில் இருந்த அந்த அடிமைகளை நோக்கிப் பார்த்தான். அவன், “உதாரணமாக” என்றான். அங்கு ஒரு நபர் இருந்தான். அவர்கள் அவனுக்கு கசையடி கொடுக்கவேயில்லை. அவனுடைய மார்பை நிமிர்த்துக்கொண்டு, அவனுடைய முகவாய்கட்டையை மேல் நோக்கிப் பார்த்தவாறு வைத்துக்கொண்டு அங்கே வேலையில் இருந்தான். அப்பொழுது அவன், “நான் அவனை வாங்க விரும்புகிறேன்” என்றான். அதற்கு அவன், “ஓ, இல்லை ” என்றானாம். முதலாளியோ, ''அவன் விற்பனைக்கல்ல, ஹு ஹு“ என்றானாம். இவனோ, ”அவனும் ஒரு அடிமைதானே?“ என்று கேட்டானாம். அதற்கு அவன், “ஆம்” என்றானாம். அப்பொழுது இவன், “அவனை அவ்வளவு வித்தியாசப் படுத்துகிறது எது?” என்றும், “நீங்கள் அவனுக்கு வித்தியாசமாக உணவளிக்கிறீர்களா?” என்று கேட்டானாம். அப்பொழுது அவன், “ இல்லையே, அவன் வெறுமனே ஒரு அடிமையாகத்தான் இருக்கிறான்” என்றானாம். அப்பொழுதும் இவன், “இருந்தாலும் அவனை வித்தியாசப் படுத்திக் காட்டுகிறது எது?” என்று கேட்டானாம். அதற்கு அவன், “அது என்னையே வியப்பில் ஆழ்த்தி விட்டது என்பது உனக்குத் தெரியுமா?” என்று கூறினானாம். பின்னர் அவன், ''அவர்கள் அங்குள்ள தாயகமான ஆப்பிரிக்கா விலிருந்து வந்திருக்கின்றனர் என்பதை நீர் அறிவீர். அந்த பையனுடைய தகப்பனார் ஒரு குலத்தின் இராஜாவாக இருக்கிறா ராம். எனவே அவன் ஒரு அயலானாக இருந்தும் அவன் தன்னை ஒரு இராஜ குமாரனுடைய மகனாகவே காட்டிக் கொள்கின்றான்“ என்றானாம். 73ஓ, ஒரு கிறிஸ்தவ வாலிப ஸ்திரீக்கும், ஒரு வாலிப மனிதனுக்கும் அது என்ன ஒரு காரியமாக இருக்கும் என்று நான் எண்ணிப்பார்த்தேன். ஸ்திரீகளே, இந்தவிதமான ஆடை களை அணிந்து கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். மனிதனே, கீழ்த்தரமான கேலிப்பேச்சுக்களையும், அதைப் போன்ற எல்லாக் காரியங்களையும் செய்வதையும் அவர்களிடம் நிறுத்தும்படி கூறு. நாம் இராஜ குமாரர்களும், இராஜ குமாரத்திகளுமாக இருக்கிறோம். ஒரு இராணியைப் போன்று உடை உடுத்துங்கள். ஒரு பெண்மணி யைப் போன்று உடை உடுத்துங்கள். ஒரு பெருந்தன்மையான ஜனங்களைப் போன்று செயல்படுங்கள். உங்களுடைய தலைமுடியை இந்தவிதமாக வளரவிடாதீர்கள். வேதம், “ஒரு மனிதன் நீண்ட தலைமுடியை உடையவனாக இருப்பது தவறாக இருக்கிறது. (சுபாவமே உங்களுக்கு போதிக்கிறது) ஸ்திரீகள் தன்னுடைய தலைமுடி வெட்டப்பட்டிருப்பதோடு ஜெபிப்பதும் கூட ஒரு சாதாரணமான காரியமாக உள்ளது. ஆனால் அது ஒரு அவமானமாக இருக்கிறது என்று கூறியுள்ளது. இதைக்குறித்து எப்படி? ”ஒரு புருஷனின் உடையை ஒரு ஸ்திரீ தரிப்பது ஒரு அவமானமாக இருக்கிறது.'' மகத்துவமுள்ள மாறாத தேவன் மாறுகிறதில்லை. ஆனால் அதே சமயத்தில் நம்முடைய தேசத்தின் மற்ற காரியங்களும், நெறிமுறைகளும் கேடடைந்து உள்ளன. அது ஒரு அவமானமே. நாம் தேவனுடைய குமாரர்களும், குமாரத்தி களும் போன்று செயல்படுவோமாக. நாம் அதைப்போன்று ஜீவிப்போமாக. நாம் இராஜாவின் குமாரர்களாக இருக்கிறோம். நாம் இராஜ குமாரர்களே. நாம் இராஜ குமாரர்கள்தான். இப்பொழுது இந்த குழப்பமான அருவருப்பான கூட்டம் இங்கு நம்மை சூழ்ந்து நிற்க, ஜனங்களோ தங்களை “கிறிஸ்தவர்கள் ” என்றழைத்துக் கொண்டு, இன்னமும் அதே விதமாக செயல்படுகின்றனரே! ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நாம் ஓர்நாள் ஒரு தட்டுதலைக் கேட்டு, அவர் உள்ளே வர திறந்தபோது, பெருமையும் மற்ற யாவும் போய்விட்டன. ஆமென். அவர்கள் என்னை என்ன வென்று அழைக்கிறார்கள் என்பதைக் குறித்து நான் கவலை கொள்கிறதில்லை. ஓ, நான் வெறுமனே ஒரு சிறு பண்டைய-மாதிரியானவன் என்றே நான் யூகிக்கிறேன், ஆனால் என் இரட்சகரும் கூட பண்டைய மாதிரியான வராகவே இருந்தார். 74அது உண்மைதானே? நீங்கள் அந்தப் பாடலை கேட்டிருக் கிறீர்கள். பண்டைய மாதிரியை உடையவர்களாயிருங்கள். யாரோ ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட முயற்சிக்காதீர்கள். அவரே உங்களுடைய மாதிரியாக இருக்கிறார். அவரைப் போன்றிருக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கிற ஆவியானவர் நீங்கள் அதைச் செய்யும்படி உதவி செய்வார். உங்களுடைய ஜீவியத்தை அவரைப் போன்றாக்கிக் கொள்ளுங்கள். ஆம், அங்கே ஒரு வாசல் உண்டு. நான் மற்றொரு வாசலை கூற விரும்புகிறேன். நான் மிகவும் மனதைப் புண்படுத்து கிறேன். அங்கே மற்றொரு வாசல் இருக்கிறது. அப்படியே அந்த வாசலுக்கு அடுத்தது, வலக்கைப்பக்கமாக சுற்றிச் செல்லுகிற அந்த வாசல் உங்களுடைய தனிப்பட்ட ஜீவியத்திற்குரிய வாசலாக இருக்கிறது. ஓ! ஓ, நீங்கள் அவரை அதனைக் கொண்டு குளறுபடி செய்ய விரும்பாதீர்கள். “இப்பொழுது, நான் ஒரு மதுபான விருந்துக்குச் செல்லும்படி வெளியே செல்ல விரும்பினால், உனக்கு என்ன? நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை எனக்கு எந்த சபை கூறப்போகிறது? ஹு, ஹு, அங்குதான் காரியம், பாருங்கள். என்னுடைய உழைப்பூதியத்தில் பத்தில் ஒன்றா? என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு கூறப்போகிறது யார்? அது என்னுடைய சொந்த தனிப்பட்ட ஜீவியமாயிற்றே. நான் இந்தப் பணத்தை சம்பாதிக்கிறேன். நான் என்னுடைய சொந்த ஜீவியத்தை உடையவனாக இருக்கிறேன். நான் விரும்பினால், குட்டைக்கால் சட்டைகளை அணிந்து கொள்வேன். அது என்னுடைய சொந்த அமெரிக்க சிறப்புரிமை. அது உண்மை , நிச்சயமாக உண்மை. ஆனால், நீங்கள் ஒரு வெள்ளாடாக இல்லாமல், ஒரு செம்மறியாட்டுக் குட்டியாக இருந்தால் நலமாயிருக்கும். பாருங்கள், செம்மறியாட்டுக்குட்டிகள் அவர் இருக்கின்றதைப் போன்று இருக்கின்றன. அவைகள் ஓர் நாளில் பிரித்தெடுக்கப்படும். 75ஒரு செம்மறியாடு ரோமத்தை உடையதாக இருக்கிறது. அந்த ஒரே காரியத்தையே அது உடையதாக இருக்கிறது. அதனால் ரோமத்தை உற்பத்தி செய்ய முடியாது. நாம் ஆவியின் கனியை உற்பத்தி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறதில்லை. ஆனால் நாம் ஆவியின் கனியை கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அது ஒரு செம்மறி ஆடாக இருக்கும் வரையில் அது கொடுக்கும். அது உற்பத்தி செய்ய வேண்டியதில்லை. செம்மறி ஆட்டிற்குள் இருக்கும் சுரப்பிகளும் ரோமத்தை உண்டு பண்ணும். ஏனென்றால் அதற்குள்ளிருக்கிற சுரப்பிகளும், குண்டிக்காய் சுரப்பியில் இருந்து ஊறும் இயக்குநீர் மற்றும் அந்த சுரப்பிகளே ரோமத்தை உற்பத்தி செய்வதில் ஈடுபடுகின்றன. நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்கின்றபொழுது, நீங்கள் வார்த்தையோடு முயன்று வெற்றி பெறுவீர்கள். மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று நான் கவலைப்படுகிறதில்லை. நீங்கள் ஒன்றையும் தூண்டிவிடவோ, ஒன்றையும் அடக்கவோ, இழுக்கவோ, மோலே அழுத்தவோ வேண்டியதில்லை. நீங்கள் ஒரு கிறிஸ்தவ னாக இருக்கின்றீர்கள். எனவே நீங்கள் அப்படியே தானாகவே ஆவியின் கனியை கொடுப்பீர்கள். புரிகின்றதா? பாருங்கள், அந்த விதமாகத்தான் அது இருக்கின்றது. புரிகின்றதா? 76ஆனால் இன்றைக்கு ஜனங்களோ, அவர்களுடைய தனிப் பட்ட ஜீவியத்தோடு நீங்கள் காலத்தை வீணாக்க விரும்புகிறதில்லை. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவெனில், அப்படியே சுற்றிலுமுள்ள கதவைத் திறந்து, இப்பொழுது, “இயேசுவே உள்ளே வாரும்” என்று கூறுங்கள். பின்னர் என்ன சம்பவிக்கிறது என்பதை பாருங்கள். நீங்கள் புத்தகத்தில் காணும் பொழுது, நீங்கள் இதைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்வீர்கள். ஏன்? அப்படியானால் நீங்கள் துவக்கத்திலேயே ஒரு செம்மறி ஆடாக இருக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் அவரை அப்படியே வாசலண்டையிலே நிறுத்தி வைக்க விரும்பினால், “நான் சபையில் சேர்ந்திருக்கிறேன். நான் உங்களைப் போலவே நல்லவனாக இருக்கிறேன், பாருங்கள், நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன்'' என்று கூறுங்கள். ஒருக்கால் நீங்கள் வெறுமனே அதைத்தான் செய்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் அவரை ஆண்டவராக்கினீர்களா? புரிகின்றதா? 77இப்பொழுது ஆண்டவரால் ஒரு புத்தகத்தின் விதிமுறை களின்படி அமர்ந்திருந்து, ஒரு வார்த்தையைக் கூறி, பின்னர் சுற்றி வந்து அதை மறுதலிக்க முடியாது. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாக கூறிக்கொண்டு, அதே சமயத்தில் வேதமானது ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யும்படி கூற, நீங்களோ, “ஓ, நான் அதை விசுவாசிக்கிறதில்லை '' என்று கூறுகிறீர்கள். உங்களுக்குள் இருக்கிற அந்த ஆவி பரிசுத்த ஆவியல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால் அவர் தம்மைத் தாமே மறுதலிக்கமாட்டார். அது உண்மை . அவர் தம்மை மறுதலிக்க மாட்டார். அவர் வார்த்தையை எழுதினார். அவர் அதை நிறைவேற்றும்படியாக அதை கவனித்து வருகிறார். புரிகின்றதா? ஆகையர் அதுவல்ல..... பரிசுத்த ஆவி ...... அது ஒரு ஆவியாக இருக்கிறது. சரி, அது ஒரு-ஒரு சபையின் ஆவியாக இருக்கலாம். அது ஒரு போதகரின் ஆவியாக இருக்கலாம். அது உலகத்தின் ஆவியாக இருக்கலாம். அது இவ்விதமாக இருக்கலாம். அது என்னவென்று எனக்குத் தெரியாது, ஆனால், அது என்னவாக இருந்தாலும், அது “நான் மெத்தோடிஸ்டு, நான் பிரஸ்பிடேரியன், நான் பெந்தேகோஸ்தே. நான் இதுவாக இருக்கிறேன். நான் அதுவாக இருக்கிறேன்” என்ற ஒரு ஸ்தாபன ஆவியாக இருக்கலாம். 78பெந்தேகோஸ்தே ! இப்பொழுது நினைவிருக்கட்டும், நான் அதை சரிப்படுத்த விரும்புகிறேன். பெந்தேகோஸ்தே என்பது ஒரு ஸ்தாபனமல்ல, பெந்தேகோஸ்தே என்பது நீங்கள் பெற்றிருக்கிற ஒரு அனுபவமாக இருக்கிறது. மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், கத்தோலிக்கர்களாகிய நீங்கள் யாவரும் பெந்தேகோஸ்தே அனுபவத்தைப் பெற்றிருக்க முடியும். நீங்கள் பெந்தேகோஸ்தேயில் சேர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில் அதில் சேருவதற்கான வழியே கிடையாது. நான் பிரான்ஹாம் குடும்பத்தில் ஐம்பத்தைந்து வருடங் களாக இருந்து வருகிறேன். உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் என்னை ஒரு பிரான்ஹாமாகும்படி கேட்டுக் கொண்டதேயில்லை. நான் ஒரு பிரான்ஹாமாகவே பிறந்தேன். அந்த விதமாகத்தான் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்கின்றீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவனாகவே பிறந்திருக் கின்றீர்கள். இப்பொழுது அது உண்மை . 79ஓ, அது தனிப்பட்ட ஜீவியமாயிற்றே! ''ஓ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய போதகர் இந்த நடனங் களுக்கு செல்கிறார். நாங்கள் வளைந்து நெளிந்து ஆடும் நடனத்தை ஆடுகிறோம். அவர்கள் அதை உடையவர்களாக இருக்கிறார்கள். சரி, பார்த்தீர்களா? என்னால் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய முடியாது? என்பதை நீர் என்னிடம் வந்து கூறவேண்டாம்.'' சரி, பாருங்கள், நீங்கள் அவரை உள்ளே அனுமதிக்கமாட்டீர்கள். வெறுமனே அவரை ஒருமுறை உள்ளே அனுமதியுங்கள். அதன் பின்னர் திரும்பவும் வளைந்து நெளிந்து ஆடும் நடனத்திற்கு அல்லது ராக்-அண்ட்-ரோல் நடனத்திற்கு போகமுடிகிறதா அல்லது நீங்கள் என்ன செய்யப்போவதாக இருக்கின்றீர்களோ அதை உங்களால் செய்ய முடிகிறதா என்று பாருங்கள். உங்களால் அதைச் செய்ய முடியாது. ஒருமுறை அவரை உள்ளே அனுமதித்து விட்டு, பின்னர் ஸ்திரீகளாகிய உங்களில் சிலர் ஒரு ஜோடி குட்டைக் கால் சட்டைகளை அணியத் துவங்கிப் பாருங்கள். நான் நீண்ட நேரமாக உங்களிடத்தில் பேசிக் கொண்டிருக் கிறேன் என்பதை நான் அறிவேன். ஆனால் நான் இன்னும் ஒரு காரியத்தை கூற விரும்புகிறேன். இந்த வகையில் அது சரியாக உள்ளதா என்று பாருங்கள். 80கர்த்தர் அவருக்காக என்னை நடத்தும்படி அனுமதித்த கூட்டங்களிலேயே மிகப்பெரிய கூட்டம் பம்பாயில்தான் என்று நான் நினைக்கிறேன். அங்கே ஐந்து லட்சம் பேர்களும், ஆப்பிரிக்காவில் உள்ள டர்பனில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தில் இரண்டு லட்சம் பேர்களும் கூடியிருந்தனர். அந்த பிற்பகலில் நம்முடைய கிருபையுள்ள கர்த்தர் இறங்கி வந்து செய்த அப்படிப்பட்டதான மகத்தான, அற்புதமான காரியங்களை கண்ட பிறகு நான் கூறினேன். நான், “ஊழியக்காரர்கள் உங்களுக்கு வார்த்தையாக போதித்தனர். ஆனால் வார்த்தை உயிர்ப்பிக்கப்பட்டு ஜீவன் அடைந்தது. அவர் கூறினது ஜீவனண்டை வரவேண்டியதா யிருக்கிறது'' என்றேன். அப்பொழுது அங்கே இருபத்தைந்தாயிரம் பேர்களுக்கு ஒரே நேரத்தில் சுகமளித்தல் சம்பவித்தபொழுது, அங்கே குவியல் குவியலாக பண்டைய நல்ல சக்கர நாற்காலிகள் குவிந்து கிடந்தன. வெறுமனே ஒரு எளிமையான சிறு ஜெபத்திலேயே அவர்கள் அப்படியே பரிசுத்த ஆவியை கண்டிருந்தனர். அவர்கள் யாராயிருந்தனர் என்றும், அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதையும் கூட அறிந்திராத அந்த ஜனங்கள், அவர்கள் யாவரும் அதைக் காண விரும்பினர். பார்த்தீர்களா? நானோ, ''எத்தனை பேர் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?“ என்று கேட்டேன். அப்பொழுது அங்கே பழங்குடி யின வகுப்பைச் சார்ந்த சுதேசிகள் விக்கிரகங்களை சுமந்து கொண்டிருந்த முப்பதாயிரம் பேர்கள் தங்களுடைய காலூன்றி எழும்பி நின்றனர். 81வேத பண்டிதர் பாஸ்வர்த்தும், வேத பண்டிதர் பாக்ஸ்டரும் மற்றவர்களும் அழத்துவங்கினர். சகோதரன் பாஸ்வர்த் ஓடிவந்து, “சகோதரன் பிரான்ஹாம், இது உம்முடைய முடிசூட்டும் நாளாக இருக்கிறது'' என்றார். சகோதரன் பாக்ஸ்டரோ, “சகோதரன் பிரான்ஹாம், நான் வியப்புறுகிறேன் என்றும், அவர்கள் சரீர சுகமளித்தலை மனதில் கொண்டிருந்தனர் என்று நான் கருதுகிறேன்'' என்றார். அந்தப் பையன் தன்னுடைய கரங்களை ஊன்றிக் கொண்டு முழங்காலில் இருந்தான். பரிசுத்த ஆவியானவரோ அவனிடத்தில் அவன் எங்கிருந்து வருகின்றான் என்றும், என்ன சம்பவித்திருந்தது என்றும் கூறி, “நீ பேசுவாய்'' மேலும் உன்னுடைய சகோதரனைக் குறித்து சிந்திக்கிறாய். அவன் சுமார் அரை மைல் தூரத்தில் அங்கே இருக்கிறான். அவன் ஒரு ஆட்டின் மீது சவாரி செய்து கொண் டிருந்தபோது, அவன் தன்னுடைய காலை காயப்படுத்திக் கொண்டான்” என்றார். நான், “ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவது அவன் சுகமாக்கப்பட்டிருக்கிறான்' என்றேன். இதோ அந்தப் பையன் தன்னுடைய கரங்களில் சுக்கத்தண்டுகளுடன் அந்த விதமாக ஓடிவந்தான். அப்பொழுது காவல்துறையினர் அவர்களை அமைதிப்படுத்த கிட்டத்தட்ட இருபது நிமிடங்களை எடுத்துக் கொண்டனர். 82அப்பொழுது இந்தப் பையன் தன்னுடைய கரங்களையும், கால்களையும் ஊன்றி முழங்காற்படியிட்டவனாக, எழும்பக்கூட முடியாதவனாக நிர்வாணமாக இருந்தான். ஓ, என்னே, அத்தகைய ஒரு பயங்கரமான காரியமாயிற்றே! அவன் தான் அங்கே சுற்றுலா வினரண்டை வந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டான். உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஒருவிதமான காட்டு நடனம் புரிவர். அப்பொழுது நான் அவனுடைய இடுப்பில் இருந்த சங்கிலியை எடுத்து அதை ஆட்டினேன். நான், “என்னால் அந்த பரிதாபமான சிருஷ்டிக்கு உதவ முடிந்து, அதை செய்யாமலிருந்திருந் தால் அப்பொழுது நான் ஒரு ........ நான் இங்கு பின்னே நிற்க தகுதியுள்ள வனாயிருக்க மாட்டேன்.'' என்று கூறி, நான், ”என்னால் அவனுக்கு உதவி செய்ய முடியாது, ஆனால் இப்பொழுது நான் ஒரு சிறிய வரத்தை உடையவனாக இருக்கிறேன். எனவே நாம் அதன் மூலம் செயல்பட முடியும். ஆயினும் கர்த்தர் என்ன கூறுகிறாரோ அதைச் செய்வேன்'' என்றேன். அப்பொழுது கர்த்தர் அவன் யாராக இருந்தான் என்பதை அவனிடம் கூறும்படி காண்பித்து, “அவனுடைய தாயும், தகப்பனும் அங்கே அமர்ந்து கொண்டிருப்பதையும், அவர்கள் தென்னாப்பிரிக்க சூளு இனத்தவராக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் வழக்கத் திற்கு மாறாக மெலிந்து இருக்கிறார்கள்” என்றும் கூறினார். ஒரு சூளு இனத்தை உடையவன் சராசரியாக முந்நூறு பவுண்டு எடை உடையவனாக இருப்பான். ஆகையால் அப்பொழுது, “அவர்கள் வழக்கத்திற்கு மாறானவர்களாக இருந்தனர். ஆனால் இந்தப் பையன் ஒரு கிறிஸ்துவ வீட்டில் பிறந்தவன். ஏனென்றால் அவனுடைய ......... வீட்டின் வலதுகைப் பக்கத்தில் நீங்கள் உள்ளே வாசலுக்குள் செல்லும்போது, அங்கே அந்த சிறு குடிசையில் ஒரு கிறிஸ்துவின் புகைப்படம் இருக்கிறது'' என்றும் கூறப்பட்டது. அது முற்றிலும் உண்மையாக இருந்தது. அவனுடையதாயும் தகப்பனும் எழும்பி நின்றனர். ”அவனுடைய பெயர் கூறப்பட்ட விதமாகவே இருந்தது“. அவன் யார் என்பதும், மற்ற ஒவ்வொரு காரியமும் கூறப்பட்ட விதமாகவே இருந்தது. அவர்களால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. நான் திரும்பிப் பார்த்தபோது, நான் ஒரு தரிசனத்தில் அங்கே அவன் தன்னால் நேராக நிமிர்ந்து நிற்க முடிந்தளவு நிமிர்ந்து நிற்பதைக் கண்டேன். அவன் தன்னுடைய ஜீவியத்தில் எழும்பி நின்றதேயில்லை. ஏனென்றால் அவன் அந்த விதமாகவே பிறந்திருந்தான். அப்பொழுது நான், ”கர்த்தராகிய இயேசு அவனை சுகமாக்குகிறார்'' என்றேன். அவன் தன்னுடைய சரியான சிந்தனையிலும்கூட இல்லாத வனாக, இந்தவிதமாக, “ஹு, பா. பா, பா” என்று கூறி, போகும் படியாக முயற்சித்துக் கொண்டிருந்தான். நான் அந்த சங்கிலியை பற்றிப் பிடித்துக் கொண்டு, அதை அந்தவிதமாக அசைத்தேன். நான், “மகனே, இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார் உன்னுடைய காலூன்றி எழும்பி நில்” என்றேன். அப்பொழுது அவன் எழும்பி நின்றான். அவன் அந்த விதமாக எழும்பி நின்றபோது, கண்ணீர் வழிந்தோடி அவனுடைய கறுப்பான வயிற்றிலிருந்து கீழே வழிந்தது. நான் முப்பதாயிரம் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சுதேசிகள் தங்களுடைய இருதயத்தை இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்ததை கண்டேன். 83ஒரு கிவானிஸ் என்ற கழக மன்றத்திலிருந்தபோது, இப்பொழுது நான் ........ கூறினேன். நான் பாப்டிஸ்டு சபையை விட்டு விட்ட போது, அப்பொழுது என்னால் எல்லா ஜனங்களோடும் ஐக்கியம் கொள்ள முடிந்தது. அப்பொழுது அவர்கள் என்னிடத்தில், ''நான் ஒரு உருளும் பரிசுத்தராக மாறப்போகிறேன்'' என்று கூறினர். அவர்கள்,, ஏன், நீர் ஒரு உருளும் பரிசுத்தராகி விடுவீர்“ என்றனர். நான் ஒரு கூட்ட என்னுடைய பாப்டிஸ்டு சகோதரர் களோடு அமர்ந்திருந்தபோது, நான், ”நீங்கள் அங்கே கடந்த நூற்றி ஐம்பது வருடங்களாக ஊழியக்காரர்களை அனுப்பியிருக்கின்றீர்கள். ஆனாலும் நான் அவர்களிடத்தில் என்னத்தைக் கண்டேன்? அவர்கள் இன்னமும் விக்கிரகங்களை சுமந்து கொண்டிருக்கிறார் களே!“ என்றேன். பின்னர் நான், ”ஆனால் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் ஒரே சமயத்தில் முப்பதாயிரம் பேர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்களே“ என்றேன். இப்பொழுது நான் ஸ்திரீகளாகிய உங்களிடத்தில் கூற விரும்புகிறேன். அந்த ஸ்திரீகளுக்கு என்ன சம்பவித்தது என்று தெரியுமா? நான், “இப்பொழுது நீங்கள் நின்று கொண்டிருக்கிற இடத்திலேயே பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்புவார்'' என்றேன். அவர்கள் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படியாக தங்களுடைய கரங்களை உயர்த்தினர். அவர்கள் அங்கிருந்து நடந்து சென்றபோது நிர்வாணமாக, ஒன்றுமே யில்லாமல் ஒரு சிறு துணியை, ஒட்டுத்துணி மட்டுமே அவர்களுடைய முன்பாகத்தில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிறகு, அவர்கள் மனிதர்களின் முன்னிலையில் இருப்பதை உணர்ந்தவர்களாக அவர்கள் அங்கிருந்து நடந்து சென்று அவர்கள் தங்களுடைய கரங்களை இந்தவிதமாக மடக்கிக் கொண்டனர். 84இப்பொழுது சகோதரிகளே, அவர்கள் ஒவ்வொரு வருடமும் அதிகமாக ஆடைகளை களைந்து கொண்டேயிருக்கும் போது, நாம் இந்த தேசத்தில் கிறிஸ்தவர்களாக இருப்பதாகவும், விசுவாசிப்ப தாகவும் எப்படி நாம் உரிமை கோர முடியும்? ஆனால் அந்த நபரோ கிறிஸ்துவின் நாமத்தை ஒருபோதும் கேட்டதே கிடையாது. ஆனால் அப்படியே அவரை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொண்டனர். இல்லை யென்றால், நீங்கள் அவர்கள் நிர்வாணமாக இருந்தனர் என்பதை அவர்களிடம் கூறியிருக்க முடியாது. அவர்கள் அதை அறியாதிருந்தனர். ஆனால் அவர்களோ தங்களை இந்த விதமாக மறைத்துக் கொண்டே நடந்து சென்றனர். அடுத்த நாள் இல்லை, இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர்களை ஒருவிதமான ஆடைகளோடு கண்டிருப்பீர்கள். ஓ, என்னே! எதோ காரியம் எங்கோ தவறாயிருக்கிறது. அது வேதசாஸ்திரத்தின் ஒரு திரித்தலாய் இருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையாய் உள்ளது, அவர் “லேகியோன்” என்றழைக்கப்பட்ட மனிதனுக்கு செய்தது போன்றே உள்ளது. அப்பொழுது அவனை தன்னுடைய சரியான சிந்தனை யில் அவனை ஆடை உடுத்தினவனாகக் கண்டோம். அது ஜனங்களின் மேல் உள்ள ஒரு ஆவியே அவர்களை அமெரிக்க தனிக்கொள்கைக்குள்ளாகவும், பிரான்சு நாட்டில் தனி கொள்கைக் குள்ளாகவும், எல்லாவிதமான உலகப்பிரகாரமான கொள்கைக் குள்ளாகவும், சபை கொள்கைக்குள்ளாகவும் வலிந்து விரட்டுகிறது என்பதை நான் நம்பத் துவங்குகிறேன். ஆனால் அவர்கள் ஒருமுறை அந்த போதகரண்டை வரட்டும், அப்பொழுது அவர்கள் அந்த தட்டுதலை வாசலண்டை உணர்ந்து, அவர்கள் ஆடைகளை அணிந்து ஸ்திரீகளைப் போன்றும், புருஷர்களைப் போன்றும் செயல் படுவார்கள். அவர்கள் மீண்டும் பிறந்த கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். ஆமென். ஆம். 85இப்பொழுது நான் முடித்து விட்டேன். ஆனால் பன்னிரெண்டு மணியாவதற்கு இருபது நிமிடங்கள் இருக்கின்ற படியால், வெறுமனே இன்னும் ஒரு சில நிமிடங்களே இருக்கின்ற படியால், நான் சிலவற்றை கூறாமல் விட்டு விடுகிறேன். அப்படியே ஒரு வினாடியிருங்கள், சில வேத வாக்கியங்களே உள்ளன. எனவே நான் இன்னும் ஒரு வாசலை திறக்க விரும்புகிறேன். அது சரியாக இருக்குமா? [சபையார், 'ஆமென்'' என்கிறார்கள். - ஆசி.] 231, அங்குள்ள மற்றொரு வாசல் விசுவாசமாக இருக்கிறது. பாருங்கள், உங்களுடைய தனிப்பட்ட ஜீவியத்தில் ...... பெருமையின் வாசல், உங்களுடைய தனிப்பட்ட ஜீவியத்தில் இப்பொழுது நாம் விசுவாசத்தை திறப்போமாக. அவைகளைப் பற்றிய முழு காரியத்தையும் பாருங்கள், ஆனால் நாம் விசுவாசத்திற்குள்ளாக செல்வோமாக. உங்களுக்குத் தெரியுமா? கொஞ்சம் காலத்திற்கு முன்னர் நான் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப் போவதாக இருந்த ஸ்திரீயினண்டை இருந்தேன். அவள் என்னை அழைத்தாள். அவள், “சகோதரன் பிரான்ஹாம், நான் பின் வாங்கிப் போன ஒருவளாக இருக்கிறேன். எனவே நீர் எனக்காக ஜெபிப்பீரா?'' என்று கேட்டாள். அப்பொழுது நானோ, ''சரி, அம்மா நான் ஜெபிப்பதற்காக சந்தோஷப்படுகிறேன்'' என்றேன். பின்னர் நான், “நீ ஒரு பின் வாங்கிப் போனவளா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “ஆம்” என்றாள். அப்பொழுது நான், “இப்பொழுது நாம் அப்படியே ஒரு நிமிடம் காத்திருப்போமாக. நான் உங்களுக்கு வேத வாக்கியங்களை வாசிக்கட்டும்” என்றேன். அங்கே ஒரு படுக்கையில் ஒரு ஸ்திரீ படுத்துக்கொண்டு உண்மையிலேயே என்னை விநோதமாக நோக்கிப் பார்த்தாள். அவளும், அவளுடைய மகன் சுமார் இருபது வயதுடையவனாக, ஒரு வழக்கமான ரிக்கியைப் போன்று இருந்த அவனும் அங்கே நின்று கொண்டு அந்தவிதமாக அவர்கள் என்னை நோக்கிப் பார்த்த னர். அப்பொழுது நான், “சரி அம்மா” என்று கூறி, பிறகு நான் சொன்னேன், நான் அவளிடத்தில், “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்” என்ற வேத வாக்கியத்தை வாசித்துக் காட்டினேன். நான் அதை அவளுக்கு வாசித்துக் காட்டினேன். பின்னர் நான், “நீங்கள் வழி தப்பிப் போயிருப்பீர்களேயானால், பாருங்கள் நீங்கள் தேவனிடத்தில் இருந்து வழிவிலகி தூர போயிருக்கின்றீர்கள். ஆனால் தேவன் உங்களைவிட்டு தூரமாக செல்லவில்லை. இல்லையென்றால் நீங்கள் என்னை அழைக்கமாட்டீர்கள்” என்றேன். அவள் அழத் துவங்கினாள். நான், “நாம் ஜெபம் செய்வோம்” என்றேன். அப்பொழுது பக்கத்து படுக்கையில் இருந்த அந்த ஸ்திரீயோ, “ஒரு நிமிடம் பொறுங்கள்! ஒரு நிமிடம் அங்கு பொறுத்திருங்கள்.” என்றாள். நான், “சரி, என்ன அம்மா?” என்று கேட்டேன். பின்னர் அவள், “அந்த திரையை இழுத்து விடுங்களே!' என்றாள். அப்பொழுது நான், “நீங்கள் ஒரு கிறிஸ்தவளில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “நாங்கள் மெத்தோடிஸ்டுகள் ஆயிற்றே!” என்றாள். அப்பொழுது நான், “இருக்கட்டுமே, அதற்கு இதனோடு என்ன சம்மந்தமிருக்கிறது? பாருங்கள், நீ ஒரு கழுதைக்குட்டி யாக இருந்தாய் என்றும், நீ ஒரு பன்றிப்பட்டியில் இருந்தாய் என்று கூறுவதைக் காட்டிலும் மேலானதல்ல, பாருங்கள்'' என்றேன். பின்னர் நான், ”அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்த வில்லையே'' என்றேன். புரிகின்றதா? ஆனால், நீங்கள் பாருங்கள், அங்கிருந்துதான் அது வருகிறது, அது சுயநீதியாகும். “அது எங்களுடைய விசுவாசத்திற்கு விரோதமானதாக இருக்கிறது.'' நான் ....... சொன்னேன் ...... நாங்கள் எங்களுடைய தெய்வீக சுகமளித்தலை அல்லது அந்த விதமான காரியத்தை விரும்புகிறதில்லையே.'' பாருங்கள், நான் என்னத்தை குறிப்பிட்டுக் கூறுகிறேன் என்பது புரிகின்றதா? பாருங்கள், அவர்கள் அந்த வாசலின் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். ”அது எங்களுடைய விசுவாசத்திற்கு விரோதமானதாக இருக்கிறது“ 86ஒரே ஒரு விசுவாசம் தான் உண்டு . “ஒரே விசுவாசம், ஒரே கர்த்தர் , ஒரே ஞானஸ்நானம் ” அந்த விசுவாசமே! என் விசுவாசம் உம்மையே மேல் நோக்கிப் பார்க்கிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே தெய்வீக இரட்சகரே; நான் ஜெபிக்கையில் இப்பொழுதே எனக்கு செவிகொடும், என் அவிசுவாசத்தையெல்லாம் போக்கிவிடும். பாவமாயிற்றே! பாவம், ஒரே ஒரு பாவம்தான் உண்டு. அது அவிசுவாசமாக இருக்கிறது. மது அருந்துகிற ஒரு மனிதன் ஒரு பாவியல்ல. பாருங்கள். அது - அது - அது, பாருங்கள், அதுவல்ல பாவம். மது அருந்துவது ஒரு - ஒரு பாவமல்ல. விபச்சாரம் செய்வதும் பாலமல்ல. பொய்யுரைப்பதும், திருடுவதும், அதுவல்ல பாவம். அது அவிசவாசத்தின் தன்மைகளாயிருக்கின்றன. நீங்கள் ஒரு விசுவாசியாக இருந்தால் நீங்கள் அதை செய்யவே மாட்டீர்கள், பாருங்கள். நீங்கள் ஒரு அவிசுவாசி அல்லது ஒரு விசுவாசி என்ற இரண்டு மட்டுமே உண்டு, பாருங்கள். ஒன்று அல்லது மற்றொன்று. நீங்கள் இந்த எல்லாக் காரியங்களையும், மற்றும் அந்தவிதமான பக்திமயமான ஒழுங்கு முறைகளைச் செய்கிறதில்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு அவிசுவாசியாய் இருக்கின்றீர்கள். நீங்கள் ஒரு விசுவாசியாயிருப்பீர்களேயானால், நீங்கள் வார்த்தையை விசுவாசிப்பீர்கள், ஏனென்றால் கிறிஸ்து வார்த்தையாக இருக்கிறார். புரிகின்றதா? எனவே நீங்கள் வெறுமனே, ஒரு அவிசுவாசியாய் இருக்கிறபடியால் நீங்கள் ஏதோ ஒரு பாரம்பரியத்தை அல்லது வேதாகமத்தோடு சேர்க்கப்பட்டிருக்கிற ஏதோ ஒரு கோட்பாட்டை அல்லது ஏதோ ஒரு காரியத்தை, ஸ்தாபனங்கள் செய்கிறதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். ஆனால் ஒரு உண்மையான விசுவாசியோ அந்த வார்த்தையோடு சரியாக தரித்திருக்கிறான் . தேவன் அந்த வார்த்தையின் மூலமாக சரியாக கிரியை செய்கிறார், நாம் ஜீவிக்கிற இந்த சந்ததியில் அதனை நிறைவேற்றவும் செய்கிறார். 87இப்பொழுது கவனியுங்கள், நீங்கள், ''ஓ, நான் .. சகோதரன் பிரான்ஹாம், கர்த்தர் ........ '' என்கிறீர்கள். நல்லது, அதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு சமயத்தில் விருத்தசேதனம் பண்ணப்படாத அநேக பெலிஸ்தர்களும் கூட சென்றனர். அப்பொழுது ஒரு கூட்ட எகிப்தியர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து மோசேயை பின்தொடர முயற்சித்தனர். ஆனால் அது முடிவிலே .... வேதம் , “யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போலவே நாம் கடைசி நாட்களில் அதே காரியத்தை கண்டறிகிறோம்'' என்று கூறியுள்ளது. இப்பொழுது இன்னும் சற்று கூடுதலாக பார்ப்போம். இயேசு இந்த காலத்தில் இங்கே , “நீ, நான் ஐசுவரியவான் என்றும், திரவிய சம்பன்ன னென்றும் சொல்லுகிறபடியால்,'' என்று கூறினார். அப்படியே இன்றைக்கு நாம் எப்போதும் இருந்ததிலேயே மிகவும் ஐசுவரியமான சபையாக இருக்கிறோம் என்பதை நோக்கிப் பாருங்கள். நல்லது, பெந்தேகோஸ்துக்களாகிய நீங்கள் உங்களுடைய தகப்பன்மார்களையும், தாய்மார்களையும் போன்று வெளியிலே ஒரு கஞ்சிரா இசைக்கருவியோடு மூலையில் இருந்திருப்பீர்களேயானால் நீங்கள் மிக மேலானவர்களாக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் இப்பொழுது மற்றவர்களைக் காட்டிலும் மேலான சபைகளைப் பெற்று, உலகத்திலே மிகவும் கொழுத்து வளர்ந்திருக்கிறீர்கள். ஆனால் வழக்கமாக அவர்கள் மத்தியில் இருந்த தேவனுடைய ஆவியானவர் எங்கே? நீங்கள் உண்மையான காரியத்தை விட்டுவிட்டீர்கள். ”ஏனென்றால் நீங்கள், நான் ஐசுவரியவான் என்ற சொல்லுகிறீர்களே“, 88நினைவிருக்கட்டும், இது பெந்தேகோஸ்துகளிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறதாக இருக்கிறது. காரணம் பெந்தேகோஸ்தே காலமே கடைசி காலமாக இருக்கிறது. பாருங்கள் நாம் பெற்றிருந்த இந்த எல்லா எழுப்புதல்களிலிருந்தும் வேறொரு ஸ்தாபனம் துவங்கவேயில்லை. அது ஏற்படாது. இதுவே முடிவாக இருக்கிறது. இப்பொழுது கோதுமையானது முதிர்ச்சியடைந் துள்ளது. அது இலைகளினூடாக வந்து, தண்டினூடாக வந்து, பதரினூடாக வந்து இப்பொழுதோ கோதுமையாக வந்துள்ளது. பாருங்கள், அது இனி ஒருபோதும் வளராது. அவைகளுக்கு ஒரு பின்மாரி துவங்கியிருந்தது. ஆனால் அது அப்படியே உடனே பொழிந்தது. இதுவோ கோதுமை தோன்றிக் கொண்டிருக்கிறதாக இருந்தது. கவனியுங்கள். நீ நிர்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்கிறபடியால், ..... நான் .... உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்“. ஓ என்னே! ''நான் வாசற்படியிலே தட்டுகிறேன்'' (சகோதரன் பிரான்ஹாம் ஏதோ ஒன்றின் மீது தட்டுகிறார். - ஆசி.] ”லவோதிக்கேயாவே, நான் உன்னுடைய வாசற்படியிலே தட்டி, நீ நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக் கொள்வதற்கு வெண் வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக் கொள்ளவும் உனக்கு ஆலோசனை சொல்கிறேன்.“ இந்த காரியங்களை அகற்றிவிட்டு, கிறிஸ்துவின் நீதியை, வார்த்தையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன். பாருங்கள். என்னுடைய நீதியையல்ல ; அவருடைய நீதியையே! 89“நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்கு கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். கண் கலிக்கமே!” நான் ஒரு கென்டக்கியன். நான் மலைகளில் பிறந்தேன். நாங்கள் வழக்கமாக ஒரு சிறு பழைய இடத்தின் மேலிருந்த சிறு இடத்தை உபயோகித்து வந்தோம். சிறுவர்களாகிய எங்களுக்கு மேலே ஏற ஒரு சிறு பழைய கம்பு ஏணி இருந்தபடியால் நாங்கள் ஒவ்வொரு இரவும் அதனைக் கொண்டு மேலே ஏறுவோம். பின்னர் அங்கேயே படுத்துக் கொள்வோம். அங்கு பனி பெய்யும் போது அவர்கள் எங்கள் மீது ஒரு துண்டு கித்தானை, எங்கள் மீது போட்டு மூடுவார்கள். நட்சத்திரங்கள் ... பனிச்சாரல் அடிக்காதபடிக்கு பொறுத்தப்படும் பண்டைய சாய்வான பலகைகள்........ ஒரு பனிச்சாரல் தடுப்புப்பலகை என்றால் என்னவென்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? நல்லது, சகோதரனே நான், ஏன் இங்கு வேலைசெய்யும் போது அழுக்கு படியாமலிருக்க அணிந்து கொள்ளும் என்னுடைய ஆடையை அணிந்து கொள்ளவில்லை? பாருங்கள், நான் வீட்டில் இருக்கிறேனே, நல்லது. பண்டைய பனி சாரல் தடுப்புப் பலகைகள். ஒரு வைக்கோல் மெத்தை என்றால் என்னவென்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? இப்பொழுது என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா? நான் ஏதோ காரியத்தைக் குறித்து மட்டுமீறிய பக்திபரவசமடைந்துவிட்டேன் என்று நான் எண்ணிக் கொண்டேன். நல்லது. இப்பொழுது நான் சரியாக வீட்டிலிருக் கிறேன் என்றே நான் யூகித்துக் கொள்கிறேன். அது நல்லது. நான் ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரையிலுமே நான் எதைக் குறித்தும் ஒன்றுமே அறியாதிருந்தேன். ஒரு பழைய விளக்கு, பழைய புகை போக்கும் கண்ணாடி விளக்கை எத்தனைபேர் அறிவீர்கள்? அது பெரிய நிலாவைப் போன்று, பக்கத்தில் கைப்பிடியுடையதாயிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவைகளை, அந்த கண்ணாடி புகை விளக்கை வழக்கமாக வீட்டில் இருப்பவர்களிலேயே சிறிய மெலிந்த கையை உடையவர்களாக இருப்பவர்களே அந்த பழைய மத்து போன்ற கடைசலை வைத்து சுத்தம் செய்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நான் வழக்கமாக ஒரு பழைய காப்புத்தட்டியை எடுத்துக் கொள்வேன். அது என்மீது பனி விழுவதை தடுத்து சிதற வைக்கும். எனவே நான் அந்தக் கண்ணாடி புகை போக்கி விளக்கின் மீது பனி விழுவதை தடுக்க அங்கே அந்த காப்புத் தட்டியை எடுத்து மேலலே வைப்பேன். ஆம், உண்மையாகவே. 90இப்பொழுது, என்னுடைய பாட்டனார் ஒரு கண்ணி வைப்பவராக இருந்தார். என்னுடைய தாயாருடைய தாயார் தொல்குடி மக்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து வந்தவர். அவர் டென்னஸிஸ், கென்டக்கியில் செரோக்கி இந்தியர்களுக் கென அங்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்த ஒரு இந்தியப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். நீங்கள் அந்த செரோக்கி பள்ளத்தாக்கு எங்கு உள்ளது என்பதை அறிவீர்கள். அவர்கள், அவர் - அவர் எல்லா நேரத்திலுமே வேட்டையாடுவதும், கண்ணிவைப்பதுமாகவே இருந்து வந்தார். எனவே அந்த விதமாகவே அவர் தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்தார். அங்கு மேலே சிறுவர்களாகிய நாங்கள் படுத்திருக்கையில்., ஏன்? சில நேரங்களில் கடுமையான குளிர் உண்டாகும். அந்த குளிர்ந்த காற்று அங்கு உள்ளே வீசும்போது, அது எங்களுடைய கண்களை மூடிக்கொள்ளச் செய்யும். எங்களுடைய கண்களின் இமைகள் இரவிலே ஒட்டிக்கொள்ளும். உங்களுக்குத் தெரியுமா? அம்மா அதை “கண்படல அழகு'' என்று அழைப்பாள். ஆனால் எனக்கு அது என்னவென்றே தெரியாது. எனவே குளிர்காற்று அந்தவிதமாகவே உங்களுடைய கண்களையே மூடிக்கொள்ளும். எனவே அப்பொழுது அவள், ”உங்களுடைய கண்களில் உங்களுக்கு கண்படல அழுக்கு உண்டாகியிருக்கிறதா?“ என்று கேட்பாள். அதன் காரணம் என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா? அந்த கடுங்குளிர் காற்று அங்கே அதனூடாக சுழன்று வீசுவதால் அப்பொழுது எங்களுடைய கண்கள் வீங்கி மூடிக்கொள்ளும். 91அதன் பின்னர், காலையில் அம்மா எழுந்து, அங்கே ஏணியின் மூலம இறங்கிவந்து, அவள் ரொட்டியை ஆயத்தம் செய்வாள். அவள் மேஜையில் சோள ரொட்டியோடு வெல்லப் பாகும் வைத்திருப்பாள். அப்பொழுது அவள், “பில்லி!” என்பாள். அதற்கு நான், “ஆம், அம்மாவா?” என்று கேட்பேன். அப்பொழுது அவள், “நீயும், எட்வர்டும் இறங்கி வாருங்கள்” என்பாள். அப்பொழுது நான், “அம்மா, என்னால் கண் திறந்து பார்க்க முடியவில்லையே!'' என்பேன். பின்னர் நான் என் சகோதரனை, அழைப்பேன், நாங்கள் அவனை, ”கூனா' என்ற அழைத்து வந்தோம். நான், “அவனாலும் கண் திறந்து பார்க்க முடியவில் என்பேன். பாருங்கள் எங்களுடைய கண்களை அழுக்கு மூடிக் கொண்டது” என்பேன். அப்பொழுது அவள், ''சரி, அப்படியே ஒரு நிமிடம் இருங்கள்'' என்பாள். பாட்டனார், அவர் அமெரிக்க கரடியின விலங்கை பிடிப்பார். எத்தனை பேருக்கு ராக்கூன் என்றால் என்னவென்று தெரியும்? அதுதான், அவளோ ....... அவர் அந்த கூன் மிருகத்தைப் பிடித்து, அதிலிருந்து கொழுப்பை எடுத்து, அதை ஒரு டப்பாவில் அடைத்து வைப்பார். அந்த கூன் மிருகத்தின் கொழுப்பானது எங்களுடைய குடும்பத்தின் நோய் நீக்கும் ஒரு மருந்தாக இருந்தது. அவர்கள் அதை எங்களுக்கு ஒரு கடுங்குளிருக்காக அதில் கற்பூர தைலத்தோடு கலந்து, கீல் எண்ணெயாக கொடுப்பார்கள். நாங்கள் அதை தொண்டையைப் பிடித்துக் கொண்டு விழுங்குவோம். அப்பொழுது அந்த கூன் மிருகத்தின் கொழுப்பை சூடாக்கி, அவள் வந்து எங்களுடைய கண்களில் தேய்த்து வருடிவிடுவாள். அப்பொழுதே எங்களுடைய கண்கள் திறக்கும். பாருங்கள், அதைச் செய்தது கூன் மிருகத்தின் கொழுப்பாக இருந்தது. பார்த்தீர்களா? 92இப்பொழுது, சகோதரனே, சகோதரியே நாம் சபையில் குளிர்ந்த நிலைமைக்குள்ளாக போய்விட்டிருக்கிறோம். அது உண்மை . அநேக மார்க்க ரீதியான கவர்ச்சி உண்டானதினிமித்தம் ஒவ்வொருவரையும் கடுங்குளிர் பற்றிக்கொண்டிருக்கிறது. அநேக ஜனங்களின் கண்கள் முழுமையாக மூடப்பட்டிருக்கின்றன. ஒரு பெரிய உலக ஆலோசனை சபைகளின் அமைப்பு இங்கே உருவாகிக்கொண்டிருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் அதற்குள்ளாக இணையும்படி பலவந்தம் பண்ணப்படப்போகின்றீர்கள். அவர்கள் அந்த வார்த்தையிலிருந்து விலகி போய்க்கொண்டே யிருக்கிறார்கள். நம்முடைய சொந்த குழுவினரும் அவ்வாறிருக் கிறார்கள். நான் ஒரு செய்திக்கு கடமைப்பட்டவனாயிருக்க வேண்டியவனாக இருக்கிறேன். வித்தியாசமாயிருக்க வேண்டு மென்றில்லாமல் அன்பின் நிமித்தமாகவே. அன்பு திருத்துவதாய் இருக்கிறது. திரும்பி வாருங்கள். அந்தக் காரியத்திலிருந்து விலகியிருங்கள். ஊழியக்கார சகோதரர்களே உங்களைத்தான், உங்களுடைய குழுக்கள் என்ன செய்கிறது என்று நான் கவலைப் படுகிறதில்லை , அதிலிருந்து விலகியிருங்கள். அதிலிருந்து விலகி யிருங்கள். அது மிருத்தின் முத்திரையாய் இருக்கிறது. அதிலிருந்து விலகியிருங்கள். பாருங்கள், இந்த லவோதிக்கேயா சபை காலத்தில் இயேசு கதவை தட்டிக்கொண்டிருக்கிறார். அவர்கள் அவரை வெளியே, எங்கே தள்ளிவிட்டார்கள் என்பதை பார்த்தீர்களா? அவர் தனிப்பட்ட நபர்களிடத்தில் பிரவேசக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறாரேயன்றி, ஸ்தாபனங்களிடத்திலோ, ஜன குழுக்களிடத்திலோ நுழைய முயற்சித்துக் கொண்டிருக்க வில்லை . அவர் இங்கே ஒருவரிடத்தில், அங்கே ஒருவரிடத்தில் பிரவேசிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ''நான் நேசிக்கிற எல்லோரையும் நான் சிட்சிக்கிறேன்“ 93இங்குள்ள அந்த எளிமையான சகோதரன் ஒரு தரிசனத்தை உடையவராயிருந்தபடியால், அவர் தரிசனத்தை கண்டிருந்ததாக கூறினார். அவர், “நீங்கள் பெற்றுக்கொள்கிற இந்த அதே ஒளி உங்களுடைய மரணத்திற்குக் கூட காரணமாயிருக்கும்'' என்றார். புரிகின்றதா? “நான் நேசிக்கிறவர்களோ, அவர்களை கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன். ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. நான் வாசற்படியிலே நின்று தட்டுகிறேன். இப்பொழுது, பாருங்கள், கூன் மிருகத்தின் கொழுப்பு இதற்கு எந்த நன்மையையும் செய்யாது. ஆனால் இம்மானுவேலுடைய இரத்தக்குழாய்களிலிருந்து, எடுக்கப்பட்ட இரத்தத்தால் நிறைந்த ஒரு ஊற்று உண்டு. அங்கே பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கி தங்கள் பாவக்கறைகளை போக்குகின்றனர். அந்த மரித்துக் கொண்டிருந்த கள்வன் தன்னுடைய நாளில் அந்த ஊற்றைக் கண்டு களிகூர்ந்தான்; என்னை .... அந்த இழிஞனைப் போன்றவனாயிருந்தும் ...... அவர் தன்னுடைய கண்கலிக்கத்தினால் என்னுடைய கண்களைத் திறந்தார். அவருடைய ஆவியானது கீழே இறங்கி வந்து . வேதாகமத்தை, அவருடைய கண்கலிக்கத்தை அனல் மூட்டியது. நான் அதை காணமுடியாதவனாக இருந்தேன். நான் வெறுமனே ஒரு உள்ளூர் பாப்டிஸ்டு போதகராக இருந்தேன். ஆனால் ஓர்நாள் அவர் தம்முடைய ஆவியை கீழே அனுப்பி, அந்த கூன் மிருகத்தின் கொழுப்பானது செய்தது போன்றல்ல, அவர் அனல்மூட்ட பரிசுத்த ஆவியையும், அக்கினியையும் அனுப்பினார். ஒரு சிறிய கண்கலிக்கமானது என்னுடைய வேதாகமத்தை - என்னுடைய வேதாகமத்தைக் காணும்படியாக கண்ணைத் துடைத்து தெளிவுண்டாக்கியது. அப்பொழுது நான் என்னுடைய கண்ணைக் கொண்டே பார்க்க முடிந்தது. நான் என்னுடைய வேதாகமத்தை காணும்படியாக என்னுடைய கண்களை துடைத்து தெளிவுபடுத்தியதை நான் குறிப்பிட்டுக் கூறுகிறேன். அப்பொழுது நான், “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் ஒரு பொய்யே. என்னுடையதே சத்தியமாக இருப்பதாக. நான் வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்” என்பதைக் கண்டேன். 94இன்னும் ஒரு சிறுகதை. நமக்கு நேரமிருக்கிறதா? [சபையார் “ஆமென்'' என்கிறார்கள். - ஆசி.) ஆம், ஆம், ஆகையால் நான் தொடர்ந்து பேசவுள்ளேன். பாருங்கள். அங்கே தென்பகுதியில் ஒரு வயதான கறுப்பு மனிதன் இருந்தார். நான் அவருடைய போதகரை அறிவேன். அவர் ஒரு அருமையான வயோதிப நபராக இருந்தார். நாங்கள் அவரை காபி என்றே அழைத்து வந்தோம். அவருடைய பெயரோ காபிரியேல் என்பதாகும். ஆனால் நாங்களோ வெறுமனே காபி என்றே அவரை அழைத்து வந்தோம். எப்பொழுதுமே நானும், அவரும், போதகருமாக சேர்ந்து, நாங்கள் ஓரினக் கூட்டாளி களாகவே வேட்டைக்குச் சென்று வருவோம். அவர் ஒரு வயோதிப கறுப்பு மனிதனாக இருந்தார். நாங்கள் வேட்டைக்கு வெளியே சென்று வருவோம். நான் எப்போதும் அறிந்த எவரைக் காட்டிலும் வயோதிப காபி வேட்டையாட அதிகமாக விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் அவர் குறி வைத்து சுடுவதில் திறமை குறைவான வராகவே இருந்தார். எனவே ஓர்நாள் அவரும் அவருடைய போதகருமாக வேட்டைக்குச் சென்றனர். நாங்கள் அவரை சபைக்குச் செல்லும்படி இணங்க வைக்கக் கூடாதிருந்தது. அவர் அதைச் செய்ய மனதில்லாதிருந்தார். அவர் சபைக்கு வர மனதில்லாதிருந்தார். அவர், ''ஹா, மாய்மாலக் காரர்கள் இருக்கின்ற அந்த இடத்திற்கு நான் போகிறதில்லை“ என்றார். அதற்கு நான், ''ஆனால் காபி நீர் வெளியே தரித்திருக்கும் வரையில் அவர்கள் உங்களைக் காட்டிலும் பெரியவர்களாகவே இருக்கிறார்கள். பாருங்கள், நீர் அவர்களுக்குப் பின்னாக மறைந்து கொண்டிருக்கிறீர். நீர் அவர்களைக் காட்டிலும் சிறியவராக இருக்கிறீர். ஆனால் அவர்களோ அங்கு சென்று பலன் அடைகின்றனரே, பார்த்தீரா?“ என்றேன். அப்பொழுது அவர், “திரு. பில் அவர்களே, ஆனால் நான் -நான் - நான் - நான் - நான் உங்களைக் குறித்து அதிகமாக சிந்திக்கிறேன்” என்று கூறி, “நான் -நான்-நான்-நான் வயோதிப ஜோன்ஸ் அங்கு செல்கிறார் என்பதை அறிவேன். ஆனால் அவர் குறிப்பிடத்தக்க சிறப்பேதுமில்லாத அற்பமானவராக இருக்கிறாரே. மேலும் அவர் பகடை சூதாட்டம் ஆடுகிறார் மற்றும் எல்லாக் காரியங்களும் செய்கிறாரே” என்றார். அதற்கு நான், “காபி, அது சரிதான், பாருங்கள், அது சரி, ஆனால் நினைவிருக்கட்டும். ஜோன்ஸ் அதற்காக பதில் கூற வேண்டியவராயிருக்கிறாரே, நீங்கள் அதற்கு பதில் கூற வேண்டியதில்லை. நீங்கள் பாருங்கள், நீங்கள் சபைக்கு செல்வீர்களேயானால் ........ நலமாயிருக்கும்” என்றேன். மேலும் நான், ஒரு நல்ல போதகரை உடையவராய் இருக்கின்றீர்களே'' என்றேன். அதற்கு அவர், ''ஓ,. தேசத்தில் உள்ள அருமையான போதகர்களில் ஒருவராகவே போதகர் ஜோன்ஸ் இருக்கிறார்'' என்றார். அப்பொழுது நான், “உங்களால் அதைக் காட்டிலும் தூரமாக பார்க்க முடியவில்லையென்றால், அவரே உங்களுடைய மாதிரியாக இருக்கட்டும். அவரே உங்களுடைய மாதிரியாய் இருக்கட்டும்” என்றேன். 95ஓர்நாள் சகோதரன் ஜோன்ஸ் வயோதிப காபி அவர்களை அழைத்துக்கொண்டு, வேட்டைக்குச் சென்றபோது, ''நாங்கள் பிடிக்க முடியாத அளவிற்கு அதிகமாக முயல்களும், பறவைகளும் எங்களுக்கு கிடைத்தது'' என்று கூறினார். அப்பொழுது அவர், “மாலை வேளை வந்தபோது, இந்த வயோதிப காபி இவருக்குப் பின்னாக, உங்களுக்குத் தெரியும், இந்த விதமாக எல்லாவற்றையும் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்'' என்று கூறினார். அவருடைய மனைவியோ, ஒரு உண்மையான விசுவாசமுள்ள கிறிஸ்தவளாக இருந்தாளாம். அவள் எப்பொழுதுமே அவளுடைய கடமையின் பாதையில் இருந்து வந்தாளாம். எனவே அவர் ........ உங்களுக்குத் தெரியுமா? அந்த வயோதிப காபி பின்னாக வந்து கொண்டிருந்தாராம். அப்பொழுது போதகர் ஜோன்ஸோ தான் சுற்றும் முற்றும் பார்த்தபோது, ''அந்த வயோதிப காபி இந்தவிதமாக எல்லாவற்றையும் தன்னுடைய தோளின்மீது வைத்துக்கொண்டு, அங்கே தொடர்ந்து நோக்கி பார்த்துக் கொண்டிருப்பதையும், அப்பொழுது சூரியன் அஸ்தமிப்பதையும் அவரால் காணமுடிந்தது” என்றே கூறினார். அப்பொழுது, “சூரியன் மிகவும் தாழ்வாக அஸ்தமித்துக் கொண்டிருந்தபடியால், குளிர்ச்சியான வேளையாகிக் கொண்டிருந்தது” என்றும் அவர் கூறினார். பின்னர், “கொஞ்சம் கழித்து, அவர் நடந்து வந்து கொண்டிருந்தாராம். அப்பொழுது வயோதிப காபி அவர்களும் தொடர்ந்து பின் நடந்து வந்தாராம். அவர் தன்னுடைய வேட்டைத் துப்பாக்கியின் குழல் முழுவதும் முயல்களையும், பறவைகளையும் மற்றவைகளையும் தொங்க விட்டிருந்தார்” என்றார். பின்னர், “அவர் போதகரின் தோளைத் தட்டி, போதகரே” என்றாராம். அப்பொழுது போதகர் திரும்பிப் பார்த்து, “ஆம், காபி என்ன காரியம்?'' என்றாராம். அப்பொழுது அவர் நோக்கிப் பார்த்தபோது, பெரிய கண்ணீர் துளிகள் அவருடைய கறுப்பான கன்னங்களிலிருந்து வழிந்து, நரையாக மாறிக்கொண்டிருக்கிற அவருடைய தாடியினூடாக வழிந்தோடியதாம். பின்னர் அவர், “போதகரே, நான் இங்கே இந்த கரையில் சுமார் அரைமணி நேரமாக நடந்து கொண்டிருக்கிறேன்'' என்று கூறி, ”நான் அந்த சூரியன் அஸ்தமிப்பதை கவனித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றாராம். மேலும், “இந்த என்னுடைய கிருதாக்களும், என்னுடைய தலை முடியும் நரையாக மாறிக்கொண்டிருப்பதை நீர் அறிவீர்” என்று கூறிவிட்டு, “போதகரே என்னுடைய சூரியனும் கூட அஸ்தமித்துக் கொண்டிருப்பதை நீர் அறிவீர்” என்றாராம். அதற்கு அவர், “அது உண்மைதான் காபி” என்றாராம். அதற்குப் பின்பு அவர் அப்படியே நின்று திரும்பி, “உன்னோடுள்ள காரியம் என்ன?” என்று கேட்டாராம். அதற்கு அவர், “என்னுடைய சூரியனும் கூட அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது'' என்றாராம். அதன்பின்பு அவர், ''என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, “நான் அங்கே தூரத்தில் நடந்து கொண்டிருந்தபோது, நான் சிந்தித்துப் பார்க்கத் துவங்கினேன்'' என்றாராம். மேலும் அவர், ''உங்க ளுக்குத்தான் தெரியுமே” என்று கூறி, “கர்த்தர் என்னை நேசித் திருக்க வேண்டும்'' என்றாராம். அதற்கு இவரோ, “காபி நிச்சயமாகவே அவர் நேசிக்கிறார்” என்றாராம். அப்பொழுது அவர், “நான் சரியாக குறிவைத்து சுட இயலாத வனாக இருக்கிறேன்” என்றும், “என்னால் ஒன்றையுமே சுட முடியாது. ஆனால் உண்மையாகவே எங்களுடைய வீட்டிற்கு இந்த இறைச்சி தேவைப்பட்டது' என்றாராம். பின்னர், ''அவர் எனக்கு அளித்த மிகப் பெரிய வேட்டைப் பொருட்களான இந்த பறவைகளையும், இந்த முயல்களையும் சற்று பாருங்கள்” என்றாராம். மேலும் அவர், “அடுத்த வாரம் முழுவதும் நாங்கள் வைத்துக் கொள்ளும்படி போதுமானவற்றை நான் பெற்றுக் கொண்டேன்” என்றாராம். அவர் தொடர்ந்து, “அவர் என்னை நேசித்திருக்க வேண்டும். ஏனென்றால் என்னால் ஒன்றையுமே குறிவைத்து சுட இயலாது என்பதை நீங்கள் அறிவீர்கள்'' என்றாராம். மேலும் அவர், ”என்னால் இவைகளை குறிவைத்து சுட்டிருக்க முடியாது, ஆனால் அவர் எனக்கு அளித்துள்ளதை சற்று பாருங்கள்'' என்றாராம். அதன்பின்னர் அவர், “அவர் என்னை நேசித்திருக்க வேண்டும் இல்லையென்றால் அவர் இவைகளை எனக்கு கொடுத்திருந்திருக்க மாட்டாரே” என்றாராம். 96அதன் பின்னர் அவர், “நல்லது, நான் என்னுடைய வாசலில் அங்கே சிறு விநோதமான தட்டுதலை பெற்றிருந்தேன்” என்றாராம். அப்பொழுது இவர் அவரண்டை திரும்பி, “காபி உன்னுடைய சூரியனும் கூட அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது'' என்று கூறினாராம். அதற்கு அவர், ”போதகரே, போதகரே நான் என்ன செய்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார். பின்னர் அவர், ”நான் அவருக்கு ஒரு வாக்குப் பண்ணியிருந்தேன்“ என்றாராம். உடனே இவர், “காபி நான் உன்னிடத்தில் ஒரு காரியத்தை கேட்க விரும்புகிறேன்” என்றாராம். மேலும் இவர் தொடர்ந்து, “நான் பிரசங்கித்த எந்த பிரசங்கம் உன்னை அந்த விதமாக உணரச் செய்தது?” என்று கேட்டாராம். அவர், “இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள்” என்றாராம். போதகரோ, “பாடல் குழுவினரின் எந்தப் பாடல் உங்களை அந்த விதமாக உணரச்செய்தது?” என்று கேட்டாராம். அதற்கு அவர், “ஓ, போதகரே, சபையில் பாடுகிறதை நான் நிச்சயமாகவே விரும்புகிறேன்” என்றாராம். மேலும் அவர், “நீங்கள் பிரசங்கிக்கிற ஒவ்வொரு செய்தியையும் நான் விரும்புகிறேன்” ஏனென்றால், அது அந்த நல்ல புத்தகத்திலிருந்தே வந்தடைகிறது. அது சரியானது என்பதையும் நான் அறிவேன்“ என்று கூறி, ''ஆனால் இதுவோ அதுவல்ல” என்றாராம். அதைத் தொடர்ந்து, ''அவர் அப்படியே தட்டினார், நான் இங்கு சுற்றும் முற்றும் பார்த்தேன். அவர் என்னண்டை எவ்வளவு நல்லவராக இருந்து, அவர் எனக்கு என்ன கொடுத்திருக்கிறார் என்று பார்த்தீர்களா?“ என்றாராம். மேலும் அவர், ”ஞாயிறு காலை அங்கே நீர் நின்று கொண்டிருக்கிற இடத்திற்கு முன்பாக நான் நடந்து செல்லப் போகிறேன்“ என்றாராம். அவர் தொடர்ந்து, ”நான் உங்களுக்கு என்னுடைய வலக்கரத்தை கொடுக்கப் போகிறேன்'' என்று கூறி, பின்னர், ''ஏனென்றால் நான் அங்கே மலையில் என்னுடைய இருதயத்தை ஆண்டவருக்கு கொடுத்துவிட்டேன்“ என்றாராம். பின்பு அவர், ”நான் ஞான ஸ்நானம் பெற்றுக்கொண்டு, என்னுடைய இடத்தை என்னுடைய மனைவி நோக்குமிடத்தே தெரிந்து கொள்ளப் போகிறேன்.“ என்று கூறிவிட்டாராம். பாருங்கள், அவர் சுற்றும் முற்றும் நோக்கிப் பார்க்க நேர்ந்தபோது, தேவன் அவருக்கு எவ்வளவு நல்லவராக இருந்து வந்துள்ளார் என்பதை பாருங்கள். 97நான் ஒரு ஊழியக்காரனாயிருக்கிறேன். நான் இப்பொழுது நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிற கண்களினூடாக நீங்களும் வெளியே நோக்கிப் பார்க்க முடிந்தால் நலமாயிருக்கும். ஒரு இந்தியனின் தரத்தைப் பாருங்கள். அந்த அற்பமான ஜனங்கள் பசியாயும், தாய்மார்கள் வீதியில் பட்டினியால் அவதியுற, அவர் களுடைய சிறு குழந்தைகள் பட்டினியில் அதிகமாக அழக்கூட இயலாதவர்களாக இருக்கின்றனர். ஆனால் நாம் இன்றைக்கு இங்கு பெற்றுள்ளதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் வருகின்ற கார்களைப் பாருங்கள். நீங்கள் உடுத்திக்கொண் டிருக்கிற ஆடைகளைப் பாருங்கள். நீங்கள் எவ்வளவு ஐசுவரிய வான்களாக இருக்கின்றீர்கள். நண்பனே, அங்கு எங்கோ தட்டுகிற அந்த சிறு தட்டுதலை உன்னால் உணரமுடியவில்லையா? நாம் ஜெபம் செய்வோமாக. நம்முடைய தலைகளும், நம்முடைய இருதயங்களும் வணங்கியிருக்கையில், இப்பொழுது நிமிடங்களோ விரைந்தோடிக் கொண்டிருக்கிறபடியால், நண்பகலுக்கு சுமார் ஏழு நிமிடங்களே உள்ளன. என் சகோதரனே, சகோதரியே விஞ்ஞான மோ நள்ளிரவுக்கு இன்னும் மூன்று நிமிடங்களைக் காட்டிலும் குறைவான நிமிடங்களே உள்ளன என்றே நமக்கு கூறுகிறது. இப்பொழுது உங்களால் வெறுமனே சுற்றும் முற்றும் பார்க்கக்கூடு மானால் நலமாயிருக்கும். ஒரு நிமிடம் சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய பிள்ளைகள் உங்களுக்கு அருகில் அமர்ந்திருக் கிறார்கள். எத்தனை சிறுபிள்ளைகள் வலிப்பு வாதத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். 98உங்களுடைய அருமையான மனைவியை, சகோதரனை நோக்கிப் பாருங்கள். கோடிக்கணக்கான டாலர்களைக் கொண்ட மதிப்பு வாய்ந்தவர்களாக இருக்கின்ற எத்தனை புருஷர்கள் தங்களுடைய முழு இருதயத்தோடு ஒரு ஸ்திரீயை நேசிக்க, அவளோ ஒரு மதுபான வேட்கை கொண்டவளாய் இருக்கிறாள். உங்களுடைய மனைவி உங்களை நேசிக்கிறவிதமாக அவனை நேசிக்க, அவன் அந்த ஸ்திரீக்கு தன்னுடைய இலட்சக்கணக்கான டாலர்களை கொடுக்க வேண்டியதாயிருக்கும். நீங்கள் மனைவியை, எத்தனை ஸ்திரீகள் ......... எத்தனை தாய்மார்கள், எத்தனை தகப்பன்மார்கள் இந்த காலையில் இங்கே தங்களுடைய சிறு குழந்தைகளோடு இருக்கிறார்கள். ஏன்? என்னே! அநேக மனிதர்கள் வெறுமனே ஒரு தொட்டிலையும், வளர்ச்சியுறா குழந்தைகளையும், பரிதாபமான சிறு பிள்ளைகளையும், முடமாயும் இருப்பதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கையில், நீங்கள் பெற்றுள்ள அருமையான சிறு பிள்ளைகளை நோக்கிப் பாருங்கள். புரிகின்றதா? அநேக சிறு பிள்ளைகள், ஒருக்கால் ........... ஓ, தேவனே! நீங்கள் நோக்கிப் பார்ப்பீர்களேயானால், அநேக காரியங்கள் இருக்கின்றன. அமெரிக்கர்களாகிய நமக்கு அவர் மிகவும் நல்லவராகவே இருந்து வருகிறார். இப்பொழுது உங்களுக்கு ஒரு சிறு கண்கலிக்கம் வேண்டும் என்பதை உங்களால் உணரமுடியவில்லையா? இந்த காலையில், “கர்த்தாவே, அப்படியே தொலை தூரமாக நோக்கிப் பார்க்கும்படி என்னுடைய கண்களை திறக்கமாட்டீரோ” என்று கேளுங்கள். நம்முடைய சகோதரி, “அவருடைய கண் அடைக்கலான் குருவியின் மேல், வெறுமனே ஒரு சிறு அடைக்கலான் குருவியின் மேல் இருக்கிறது. எனவே, அவர் என்னை கவனிக்கிறார் என்பதை நான் அறிவேன்'' என்ற மிக அருமையான பாடலைப் பாடினார். 99இப்பொழுது, அவர் இப்பொழுதும் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். “நான் இந்த காலையில் பார்வையிடும்படி வருவேனேயானால் இந்தவிதமாய் அங்கு எங்கோ மெதுவாக தட்டுவதை உங்களால் சற்று கேட்க முடியுமா?” (சகோதரன் பிரான்ஹாம் ஏதோ ஒன்றின் மீது தட்டுகிறார். - ஆசி.) அந்த தட்டுதலை உங்களுடைய இருதயத்தில் உங்களால் உணரக் கூடுமானால், அதுவே நீங்கள் எப்பொழுதும் கொடுத்த கனத்திலேயே மகத்தானதாகும். நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, ''கர்த்தாவே, இதன் மூலமாக உம்முடைய ஒத்தாசையினால், உம்முடைய கிருபை யினால், இந்நாள் முதற்கொண்டு எப்படி ஜீவிக்க வேண்டும் என்பதை நான் அறிந்து கொண்ட காரணத்தினால் நான் உம்மண்டை நெருங்கி ஜீவிப்பேன். நான் உம்மண்டை கேட்க வேண்டும் என்று நான் அறிந்துள்ளதெல்லாம் அவ்வளவுதான் “ என்று கூறுவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ”உம்முடைய ஒத்தாசையினாலும், கிருபையினாலும் இந்நாள் முதற் கொண்டு, நான் இதை ஒருபோதும் மறக்கமாட்டேன்.“ “இதோ வாசற்படியில் நின்று தட்டுகிறேன், ஒருவன் .......” இப்பொழுது நினைவிருக்கட்டும். அவர் எங்கே களஞ்சியத்தில் தட்டிக்கொண்டிருந்தாரா? இல்லையே. அவர் மதுபான கடையில் தட்டிக்கொண்டிருந்தாரா? இல்லையே. அவர் எங்கே தட்டிக்கொண்டிருக்கிறார்? சபையில்தானே! ''ஒருவன் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.'' அன்புள்ள தேவனே, இந்த காலையில் கூறப்பட்டிருக்கிற இந்த கோர்வையற்ற, கலப்படமான சில வார்த்தைகளை எப்படி யாவது பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுடைய இருதயத்தில் அவைகளை வியாக்கியானிப்பாராக. 100இப்பொழுதும் கர்த்தாவே, இங்குள்ள இந்த நூற்றுக்கணக் கானவர்களில் ஒருக்கால் இருபது அல்லது முப்பது பேர்கள் மட்டுமே தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கலாம். கர்த்தாவே, அவர்களுக்கு என்ன தேவையாயுள்ளது என்பதைக் குறித்து அறிந்து கொள்ள என்னிடத்தில் வழியே கிடையாது. ஆனால் நண்பகலுக்கு வெறுமனே இன்னும் ஒருசில நிமிடங்களே இருப்பதைப் போன்றே கர்த்தருடைய வருகையும் இருக்கிறது. அதே சமயத்தில் தரையிலிருந்து இந்தப் பனியானது உருகிச் செல்வதற்கு முன்னமே எங்களுக்கு அழைப்பாணை விடப்படலாம். இது அவர்கள் கைவிடப்படுவார்களா அல்லது மேலே செல்வார்களா என்பதைக் குறித்த முழு எதிர்காலத்தையே மாற்றும் இமைப் பொழுதாக இருக்கலாம். அன்புள்ள தேவனே, நாங்கள் தாழ்மையாய் இயேசுவை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் அவருடைய எல்லா வார்த்தை களையும் ஏற்றுக்கொள்கிறோம். கர்த்தாவே எங்களை நிரப்பும். எங்களுடைய ஜீவியம் தானாகவே கனியை கொடுக்கும்படிக்கு உம்முடைய பரிசுத்த ஆவியினால் எங்களை நிரப்பும். இதை அருளும் கர்த்தாவே. எங்களுடைய அநேக தவறுகளை எங்களுக்கு மன்னியும். ஓ, கர்த்தாவே நாங்கள் அதிக தவறுகள் நிறைந்தவர்களாக இருக்கிறோம். கர்த்தாவே, நாங்கள் ஏறெடுக்கும்படியாக எங்களிடத்தில் ஒன்றுமில்லை. ஏனென்றால் நாங்கள் பெற்றுள்ள ஒவ்வொரு காரியத்தையும், நீரே அதை எங்களுக்கு கொடுத்திருக்கிறீர். சற்று முன்னர் எங்களுக்கு கூறப்பட்ட சிறு சம்பவத்தில் காபி கூறினதுபோல, “நீர், நீர் நிச்சயமாகவே எங்களை நேசிக்கிறீர், கர்த்தாவே, இல்லையென்றால் நீர் இதை செய்திருக்க மாட்டீரே'”. இங்கு அமர்ந்துள்ள இந்த ஜனங்களை நினைக்கையில் அவர்கள் இந்த காலை எட்டு மணி முதற்கொண்டு இங்கு நான்கு மணி நேரங்களாக அவர்கள் இங்கு அமர்ந்துள்ளனர். கர்த்தாவே, அவர்கள் உம்மை நேசிக்கிறார்கள். அவர்கள் உம்மை நேசிக்கிறார்கள். இப்பொழுதும் பிதாவே, நீர் பரிசுத்த ஆவியின் கலிக்கத்தை அப்படியே அனுப்பி, எங்களுடைய கண்களை திறந்தருளும். நாங்கள் ஒருக்கால் ....... 101இந்தப் பட்டிணத்தில் இங்குள்ள இவர்கள் இன்றிரவு அந்த எழுப்புதலுக்கு விரைந்து செல்வார்களாக. அது மேற்கூறப்பட்ட அத்தகைய ஒரு பொழிவாய் இருப்பதாக. இதை அருளும் கர்த்தாவே, இங்கே இந்த பட்டிணத்தில் பண்டைய மாதிரியான எழுப்புதல் துவங்குவதாக. இதை அருளும். ஊக்கமாக ஊழியம் செய்து கொண்டிருக்கிற ஒவ்வொரு மனிதனையும் ஆசீர்வதியும். உலகம் முழுவதிலும் ஊக்கமாக ஊழியம் செய்து கொண்டிருக்கிற உம்முடைய ஊழியக்காரர்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். கர்த்தாவே அவர்களோடே இருந்து, அவர்களுக்கு உதவி செய்யும். நாங்கள் இன்னும் மேலும் மேலும் கிறிஸ்துவின் சாயலைக் காணும்படி எங்களடைய கண்களைத் திறந்தருளும். எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும். பிதாவே, இப்பொழுதும் தங்களுடைய கரங்களை உயர்த்தின வர்களை, நான் உம்மண்டை அவர்களை ஒப்புவிக்கிறேன். அவர்களை ஏற்றுக்கொள்ளும். இப்பொழுதும் கர்த்தாவே, “வானங்களும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் ” என்ற உம்முடைய சொந்த வார்த்தையை நான் மேற்கோளாக குறிப்பிட்டு கூறுகிறேன். நீர், “அவன்” என்றீர். அது ஒரு தனிப்பட்ட பிரதிப்பெயராக இருக்கிறது. “என்னுடைய வசனத்தைக் கேட்டு .......” கர்த்தாவே, அவைகள் கோர்வையற்றவைகளாகவும், சாதாரணமானவைகளாகவும் இருந்திருக்கலாம். ஆனால் சிலர் அவைகளை கேட்டிருக்கிறார்கள். விதையோ விழுந்துவிட்டது. “என் வசனத்தைக் கேட்டு, (ஆங்கிலத்தில் இந்த வசனத்தில் ”and“ என்ற இணையிடைச் சொல் உள்ளதை கூறுகிறார்.) இணையிடைச்சொல், என்னை அனுப்பின வரை விசுவாசிக்கிறவனுக்கு'' அவன் இதை விசுவாசித்தபடியால் நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக் கிறான்.'' கர்த்தாவே அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தினர். அவர்கள் (ஒவ்வொரு) விஞ்ஞான விதிமுறையையும் தகர்த்துவிட்டனர். ஏனென்றால் புவிஈர்ப்பு சக்தியானது எங்களு டைய கரங்களை கீழே தொங்க வைத்திருக்கிறது. ஆனாலும் அவர்களுக்குள் ஒரு ஆவி இருக்கிறதையும், அதுவே வாசலண்டை ஒரு தட்டுதலை கேட்கச் செய்தது என்பதையும் அவர்கள் நிரூபித்து விட்டனர். இப்பொழுதே வாசலை திறந்தருளும். கர்த்தாவே திறந்து உள்ளே வாரும். நாங்கள் உம்முடையவர்களா யிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார். சம்பாதித்தார் என் இரட்சப்பை, கல்வாரி மரத்தினிலே. 102நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அப்படியே ஒரு வினாடி நம்மால் நம்முடைய கண்களை மூடக்கூடுமானால் அற்புதமாக இருக்கும். இப்பொழுது நம்முடைய கரங்கள் உயர்ந்திருப்பதோடு நம்முடைய இருதயத்திலிருந்து பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன். கர்த்தாவே, நாங்கள் உம்முடைய தட்டுதலை ஏற்றுக் கொள்கிறோம். என்னுடைய கரங்களும் மேலே உயர்த்தப்பட்டிருக்கின்றன. கர்த்தாவே, எங்கள் எல்லோருடைய கரங்களும் மேலே உயர்த்தப்பட்டிருக்கின்றன. கர்த்தராகிய இயேசுவே இப்பொழுதுதே உள்ளே வாரும், எங்களுடைய இருதயங்களுக் குள்ளாக வந்து, எங்களோடே போஜனம்பண்ணும். நாங்களும் உம்மோடே போஜனம்பண்ணுவோம். கல்வாரி மரத்தினிலே! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஓ, அவர் அவ்வளவு அற்புதமான வராயிருக்கிறார் என்பதையே நான் எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் அவ்வாறு எண்ணிப்பார்க்கிறதில்லையா? [சபையார், ''ஆமென்'' என்கிறார்கள். - ஆசி.) உங்களையே அப்படியே ஒருவிதமாக தூய்மைப்படுத்தும் அவருடைய சமூகத்தை நீங்கள் உணர வில்லையா? நான் இப்பொழுதே பக்தி பரவச மடைகிறேன். உண்மையாகவே அதைக் குறித்து ஏதோ காரியத்தை நலமாகவே உணருகிறேன். பாருங்கள். என் விசுவாசம் உம்மையே மேல்நோக்கிப் பார்க்கிறது கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகரே; நான் ஜெபிக்கையில் இப்பொழுதே எனக்கு செவிகொடுத்து என்னுடைய எல்லா பாவங்களையும் போக்கியருளும், ஓ இந்நாள் முதற்கொண்டே என்னை முற்றிலும் உம்முடையவனாக்குமே! 103இப்பொழுது நான் உங்களை வேண்டிக்கொள்வது என்ன வெனில் நாம் அந்த அழகான கீர்த்தனையின் அடுத்த வரியை, சபையின் பண்டைய கீர்த்தனையை வாய்திறவாமல் மௌனமாய் பாடுகையில், நீங்கள் யாருடனாவது கரங்களை குலுக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன். அப்படியே உங்களுடைய இருக்கையில் இருக்கிற வண்ணமாகவே, வெறுமனே , “சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களோடு இங்கு இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறுங்கள். நாம் அதைச் செய்வோமாக. (சகோதரன் பிரான்ஹாமும், சபையாரும் என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது என்று வாய் திறவாமல் மௌனமாகப் பாடி, ஒருவரோடு ஒருவர் கரங்களை குலுக்குகிறார்கள். - ஆசி.) சகோதரன் வில்லியம்ஸ், கார்ல் அவர்களே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் இங்கிருக்க மகிழ்ச்சியடைகிறேன். மெத்தோடிஸ்டுகளினுடைய கரங்கள் பெந்தேகோஸ்து களுடைய கரங்களை பற்றிப்பிடித்ததையும், பாப்டிஸ்டுகளினுடைய கரங்கள் பிரஸ்பிடேரியனுடைய கரங்களைப் பற்றிப் பிடித்ததையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஓ, இந்நாள் முதற்கொண்டே ......... என்னை முற்றிலும் உம்முடையவனாக்குமே! 104இப்பொழுது நாம் மெதுவாக பாடுகையில் உங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்தும் கூட பாடுங்கள். உங்களுக்குத் தெரியுமா? ஒரு தூய்மைப்படுத்துகிற, கடிந்து கொள்கிற செய்திக்குப் பிறகு ஆவியில் இருந்து பரிசுத்த ஆவியின் இனிமை யில் பாடுவது நலமானதாகவே உள்ளது என்றே நான் கருதுகிறேன். “ஓ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை இனிமையானது.'' வேதமோ, ''அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின் மேல் இறங்குகிறது மான நல்ல தைலத்துக்கும் ஒப்பாயிருக்கிறது” என்று கூறியுள்ளது. நீங்கள் இங்கு அற்புதமான ஜனங்களாக இருக்கின்றீர்கள். இயேசுவானவர் என்னை அழைக்கிறதற்கு முன்பு அல்லது ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு நான் உங்களை மீண்டுமாக காண்பதற்கு திரும்பி வருவேன் என்று நான் நம்புகிறேன். நான் உங்களை அப்படி காணவில்லை யென்றால், நான் உங்களை அப்பாலுள்ள ஆற்றிலே சந்திப்பேன். நான் உங்களை ஆற்றண்டையிலே சந்திப்பேன். ஆமென். ஒரு சந்திப்பு திட்டத்தை தீர்மானித்துக் கொள்கிறேன். வாழ்க்கையின் இருளின் சிக்கலான பாதையில் நான் கடந்து செல்கையில், துயரம் என்னைச் சூழ்ந்து பெருகுகையில், நீரே என் வழிகாட்டியாயிரும் இருள் பகலாக மாற கட்டளையிட்டு (அவர்கள் அந்த சிறு வெளிச்சத்தைக் குறித்து பேசுகிறார்கள்) துயரத்தின் பயங்களைப் போக்கி, ஓ இந்நாள் முதற்கொண்டே முற்றிலும் உம்முடையவனாக்கிவிடுமே! 105ஒவ்வொரு வாசலையும் திறந்து வையுங்கள். ஓ, வெறுமனே அந்த சிறு பொத்தானை தொட, அவைகள் யாவும் அந்த வட்டாரத்தை சுற்றி வலப்பக்கமாக செல்வதைக் கவனியுங்கள். பின்னர், 'கர்த்தராகிய இயேசுவே உள்ளே வந்து, என்னுடைய காரியங்கள் யாவற்றிற்குமே என்னுடைய ஆண்டவராக இரும்'' என்று கூறுங்கள். ஓ, இந்நாள் முதற்கொண்டு உம்மை வாசலண்டை நிற்கவிட மாட்டேன் முற்றிலும் உம்முடையவனாக்குமே! உங்களுடைய கரங்களை உயர்த்தின நீங்கள் இன்னும் அதிகமாக கர்த்தரண்டை வழி நடத்தப்பட வேண்டுமென்று விரும்பினால் உங்களை இன்றிரவு அந்த எழுப்புதலுக்கு செல்லும் படியாக நான் கேட்டுக் கொள்கிறேன். அங்கிருக்கிற போதகர் உங்களை அந்த சத்திரத்திற்கு இங்கிருந்து அழைத்துக் கொண்டு போக பொறுப்பெடுத்துக் கொள்வார் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். அவர் கவனித்துக்கொள்ளவும், எண்ணெயையும் திராட்சைரசத்தையும் வாரக்கும்படியாக ஆறு செப்பு நாணயங் களோ அல்லது என்ன கொடுக்கப்பட்ட தோ அதை வைத்திருக்கிறார். எனவே அந்தப் பணியை அவர் செய்து முடிப்பார். இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் ஆராதனையை சகோதரன் வில்லியம்ஸ் அல்லது இங்கு உள்ள யாரிடமாவது திரும்ப ஒப்படைக்கலாம் என்று யூகிக்கிறேன்.... சரி.